மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சட்ட அமைப்பைச் சீர்குலைக்கும் புதிய குற்றவியல் சட்டங்கள் - பத்திரிகையாளர் சந்திப்பில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கண்டனம்

அரசியல்

பொது சிவில் சட்டம் ஏன் தேவையில்லை?
டாக்டர் ஜாவீத் ஜமீல் - தமிழில் : U.முஹம்மது ஷாஜஹான், July 16 -31 2023


பொது சிவில் சட்டம் ஏன் தேவையில்லை?
இந்துத்துவ அமைப்புகள்
 
பொதுவான இந்து சமூகத்தினரிடம் முஸ்லிம்கள் ஆபத்தானவர்கள் என்ற கருத்தாக்கத்தை இந்துத்துவ அமைப்புகள் தொடர்ந்து உருவாக்கி வருகின்றனர். பொருளாதார, சமூக, அரசியல் ரீதியாக முஸ்லிம் சமூகம் முன்னேறுவது இந்துக்களுக்கு ஆபத்து என்ற வெறுப்புப் பரப்புரையைப் பல ஆண்டுகளாகச் செய்து வருகின்றனர். தனியார் சட்டங்கள் மூலம் முஸ்லிம் சமூகம் கட்டுக் கோப்பான சமூகமாக இருப்பதை அவர்கள் விரும்பவில்லை.
 
சந்தைப் பொருளாதார சக்திகள்
 
மனித பலவீனங்களைத் தங்களின் வியாபார முதலீடாகப் பார்க்கும் இவர்களுக்கு மதங்களின் அடிப்படையில் உருவாகும் ஒழுக்கமான குடும்ப அமைப்பு சந்தைப் பொருளாதார சக்திகளின் லாப வெறிக்கு ஒரு தடையாக இருக்கிறது. குறிப்பாக இஸ்லாமிய மார்க்கத்தின் ஹலால், ஹராம் வரையறைகள் நுகர்வியல் கலாச்சாரத்திற்குப் பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது.
 
இடதுசாரி அமைப்புகள்
 
கம்யூனிசத்தின் சமூக பொருளாதார சித்தாந்தங்களில் மதங்களுக்கு எந்த இடமும் இல்லை. மாநிலங்களுக்கான தனிச் சிறப்புச் சட்டப் பிரிவுகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தேவைக்கேற்ப தனிச்சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. 371 - மராட்டியம், குஜராத், 371 A - நாகாலாந்து, 371 B அஸ்ஸாம். 371 C  - மணிப்பூர். 371   B , 371 E ஆந்திரா - தெலுங்கானா, 371 F - சிக்கிம், 371 G -மிசோரம். 3711 - கோவா. 
 
370 - ஜம்மு காஷ்மீரின் சிறப்புச் சட்டம் அண்மையில் நீக்கப்பட்டது. திரிபுரா மாநிலத்திற்கான பாதுகாப்புச் சிறப்புச் சட்டம் அண்மையில் இயற்றப்பட்டது.
 
ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனியான ஆட்சி மொழிச் சட்டம் நடைமுறையில் உள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநிலங்களில் ஆட்சி மொழி இல்லை. பசுவதை, மது தொடர்பான சட்டங்களில் மாநிலங்களிடையே வேறுபாடு உள்ளது. அருணாச்சலப் பிரதேசம். மிசோரம், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உணவுக்காக மாடு களை அறுப்பது தடை இல்லை. இட ஒதுக்கீடு, வருமானவரிச் சட்டங்களில் மாநிலங்களிடையே வேறுபாடுகள் உள்ளன.
 
அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டும் நெறிமுறைகள்
 
அரசியலமைப்பின் இந்தத் தலைப்பில்தான் பொது சிவில் சட்டத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தத் தலைப்பில் உள்ள விஷயங்களைக் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. உதாரணமாக, மாநிலங்கள் அனைத்து மட்டத்திலும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அகற்ற வேண்டும் என்பது ஒரு வழிகாட்டும் நெறிமுறை. ஆனால் நடைமுறையில் ஏழை பணக்காரர்களிடையே பொருளாதார இடைவெளி அதிகமாகிக் கொண்டே செல்கின்றது. Forbes நிறுவனம் வெ-வெளியிட்டுள்ள முதல் 100 உலக பணக்காரர்கள் பட்டியலில் சில இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். சில குறிப்பிட்ட விரல் விட்டு எண்ணக் கூடிய இந்தியர்களிடம் பெரும் சொத்து சேர்ந்துள்ளதை இப்பட்டியல் வெளிப்படுத்துகின்றது.
 
நவீன பொருளாதாரச் சந்தை மனிதனை ஒரு நுகர்வுப் பொருளாகப் பார்க்கிறது. நவீன பெண்ணியக் கோட்பாட்டினால் பெண்கள் அதிக துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றார்கள். ஆண்கள் இதனைப் பயன்படுத்தி பெண் களைப் போகப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர். மனிதர்களின் ஆரோக்கியம், அமைதியான வாழ்க்கை பற்றிய எந்தக் கவலையும் நவீன பொருளாதாரச் சந்தைக்கு இல்லை. இதன் விளைவாகக் கட்டுப்பாடற்ற பாலுறவு. ஒருபால் உறவு, விபச்சாரம், மது, போதை, சூதாட்டம் போன்ற சமூகத் தீமைகள் மலிந்து காணப்படுகின்றன. இத்தகைய தீமைகள் பல்வேறு நோய்களையும் பாலியல் வன்புணர்வு போன்ற குற்றச் செயல்களையும் அதிகப்படுத்தி உள்ளன.
 
ஆண்டுதோறும் உலகளவில் 70 இலட்சம் குழந்தைகள் கருவிலேயே கொல்லப்படுகின்றன. உதா  (Utah)  என்ற அமெரிக்கப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் 7% பெண்கள் 15க்கும் மேற்பட்ட ஆண்களுடன் பாலுறவில் உள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. அமெரிக்க மக்கள் தொகையில் 7.1% ஒருபால் உறவாளர்கள். Child Trends அமைப் பின் ஆய்வில், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளில் 40% திருமணத்திற்கு வெளி யேயான உறவில் பிறக்கிறார்கள். 24 இலட்சம் குழந்தைகள் ஒற்றைப் பெற்றோருடன் வளர்கிறார்கள் என்று தெரிவித்துள்ளனர். இந்தியாவிலும் இத்தகைய போக்குகள் உருவாகத் தொடங்கியுள்ளது. திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் ஆண் பெண் தொடர்பினால் பல கொலைகள் நடந்துள்ளன. 
 
பாதுகாப்பான வாழ்க்கைக்கு இஸ்லாமியச் சமூக அமைப்பு பொருத்தமானது ஏன்?
 
நவீன மேற்கத்திய வாழ்க்கை முறை குடும்ப அமைப்பை விரும்புவதில்லை. அது தனி நபரை மையப்படுத்திய பொருளாதார நலன்களை மட்டுமே முன்னிலைப்படுத்துகின்றது. குடும்ப உறுப்பினர்கள், ஒட்டுமொத்த சமூகத்தின் பொருளாதார நலன்களும் மேம்பட இஸ்லாம் வழிகாட்டுகின்றது. பாலியல் தொழில், மது. போதை விற்பனை, சூதாட்டத் தொழில்களுக்கு குடும்ப அமைப்பு தடையாக இருப்பதாக நவீனத்துவம் கருதுகின்றது. கட்டுக்கோப்பான குடும்ப அமைப்புதான் சமூக அமைதியின் ஊற்றுக்கண் என்று இஸ்லாமிய வாழ்க்கை முறை கருதுகின்றது.
 
இந்தக் குடும்ப அமைப்பு பெண்களின் பாதுகாப்பு அரணாகும். மேலும் ஆண்கள், பெண்களின் இயற்கையான உடல் தேவைகளுக்கும் குழந்தைகளின் நல்வாழ்வுக்கும் பாலியல் நோய்களின் தடுப்பரணாக குடும்பம் உள்ளது. நவீன மேற்கத்திய வாழ்க்கை முறையில் பெண்களின் நிலை. பாலியல் தொழிலாளியாக, திருமணமாகாத பாலுறவு துணை யாக, திருமணமாகாத தாயாக. ஒற்றைப் பெற்றோராக இருக்கின்ற சூழ்நிலை நிலவுகின்றது. இத்தகைய நிலைகளிலிருந்து இஸ்லாம் பெண்களைப் பாதுகாக்கின்றது.
 
இஸ்லாமிய மார்க்கத்தில் ஆண்கள், பெண்களின் கடமைகள் அவர்களின் இயற்கையான தன்மைகளைக் கருத்தில் கொண்டு வரையறுக்கப்பட்டு உள்ளன. ஆனால் நவீனத் துவமோ சந்தைப் பொருளாதாரத்தை மையப்படுத்தி அவர்களின் கடமைகளை வரையறுக்கின்றது. திருமணத்திற்கு அப்பாற் பட்ட உறவை நவீனத்துவம் அனுமதிக்கிறது. ஆனால் பருவமடைந்த பெண்களின் திருமணத்தைத் தடுக்கின்றது. இஸ்லாம் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவைத் தடை செய்கிறது. பருவமடைந்த ஆண் பெண்களின் மனவளர்ச்சி பொருளாதார சுயச் சார்பைப் பொறுத்து திருமணத்தை அனுமதிக்கின்றது.
 
பலருடனான பாலியல் தொடர்பை நவீனத்துவம் அனுமதிக்கிறது. ஆனால் சட்டப்படியான பலதார் திருமணத்தைத் தடுக்கின்றது. இஸ்லாம் பலருடன் பாலுறவு கொள்வதைத் தடுக்கிறது. பலதார மணத் தைச் சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கிறது. மனைவிகளிடையே நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். தந்தை தன்னுடைய அனைத்துக் குழந்தைகளுக்கும் சட்டப்படியான அனைத்து உரிமைகளையும் சமமாக வழங்க வேண்டும் என்பது போன்ற சில நிபந்தனைகளுடன் பலதார மணத்தை அனுமதிக்கின்றது. பெண்களுக்கு அதிகமான சுமைகளை நவீனத்துவம் சுமத்துகின்றது. இதனால் குடும்ப வாழ்வு, குழந்தைகளின் நலன்கள் பாதிக்கப்படுகின்றன. பெண்களுக்குச் சுயமாகச் சம்பாதிக்கும் உரிமையை இஸ்லாம் வழங்குகின்றது. ஆனாலும் குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பைக் கணவனிடமே ஒப்படைக்கின்றது.
 
இஸ்லாத்தில் பெண்களின் அந்தஸ்து
 
உடல் ரீதியாக ஆண் பெண் ஒரே மாதிரியானவர்கள் இல்லை. பெண்களுக்கான உடல் சுமைகள் (கருவுறுதல், பாலூட்டுதல்) அதிகம். ஆகையால் பொருளாதாரச் சுமை ஆண்களிடம் இருப்பதுதான் நியாயமானது. பெண்களுக்கான கல்வி உரிமை, மணமகனை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம், விவாக ரத்து கோரும் உரிமை, திருமணத்தின் போது மணமகன் தரும் மஹர் பெறும் உரிமை. கணவனின் மரணத்திற்குப் பிறகு அல்லது விவாகரத்துக்குப் பிறகு மறுமணம் செய்யும் உரிமை, சொத்துரிமை ஆகியவற்றை இஸ்லாம் சட்டப்பூர்வமாக வழங்குகின்றது. பெண் குழந்தைகள் கொலை செய்யப் படுவதைத் தடை செய்கிறது. இஸ்லாமிய வாழ்க்கை முறையில் தாயின் அந்தஸ்து தந்தையை விட ஒரு படி மேலே இருக்கிறது.
 
விவாகரத்து
 
இஸ்லாம் மிகச் சிறப்பான விவாகரத்து முறையைக் கொண்டுள்ளது. திருக்குர்ஆனின் வழிகாட்டலின்படி மூன்று மாதம் தம்பதி கள் தங்களுக்குள் சமரசம் செய்து கொள்ள வழிவகை உள்ளது. அதன் பிறகான இத்தா (தனித்திருத்தல்) காலம் பின்வரும் காரணங்களால் முக்கியமானது.
1. கணவன் உடனடியாகக் கைவிடும் நிலையிலிருந்து பாதுகாப்பு
2. கருவில் உள்ள குழந்தை
3. பிறந்த குழந்தையின் தந்தையை அறிதல்
4.கருவுற்ற பெண்ணின் இத்தா காலம் குழந்தைப் பேறு வரை தொடரும்
5. குழந்தைப் பேறு, பாலூட்டும் காலம் முழுவதும் கணவன்தான் பொருளாதாரத்திற்கு பொறுப்பேற்க வேண்டும்.
6.விவாகரத்தான பிறகு பிறக்கும் ஆண் குழந்தை முதல் 7 ஆண்டுகள் தாயிடம் இருக்க வேண்டும். பெண் குழந்தை அவர்களின் திருமணம் வரை தாயுடன் இருக் கலாம். இந்தக் காலம் முழுவதும் தந்தைதான் அவர்களின் செலவுகளுக்குப் பொறுப்பு.
7. இரண்டு தரப்பும் ஒத்துழைக்கும் பட்சத்தில் இத்தா காலத்தில் சமரசம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
 
பலதார மணம் - பலருடன் பாலுறவு
 
உலகம் முழுவதும் பலதார மணத்தை ஆட்சேபிக்கும் பலர். ஆண்கள் பல பெண்களுடன் பாலியல் தொடர்பு வைத்துக் கொள் வதை ஆட்சேபிப்பதில்லை. சட்டப்பூர்வமான எவ்வித நடவடிக்கைகளுக்கும் உட்படுவ தில்லை. ஆனால் சட்டப்படியான இரண்டாவது திருமணத்திற்குப் பல நாடுகளில் தடை உள்ளது. இது ஒரு விந்தையான நிலைப்பாடு. பலதார மணம் பெண்களுக்குச் சட்டப்பூர்வ அந்தஸ்தையும் சமூக அந்தஸ்தையும் தருகின்றது.
 
பலதார மணத்தின் காரணங்கள்
 
மனைவியின் உடல்நிலை குறைபாடு, குழந்தையின் ஆண் / பெண் பிறப்பு விகிதத்தில் பெண்களின் எண்ணிக்கை மேலோங்கி இருக்கும் நாடுகளில் பெண்களின் திருமண வாழ்க்கையை உறுதி செய்ய ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் புரிய ஆண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏன் பெண்களுக்குப் பல கணவர்கள் இருக்கக் கூடாதா? என்ற கேள்வி எழலாம். ஆனால் பெண்களுக்குப் பல கணவர்கள் இருந்தால் யாருடைய குழந்தை என்பதில் குழப்பம் வரலாம். இதனால் குழந்தைகளின் மன நலம் பாதிக்கப்படும். ஆண்களும் பெண்களும் பலருடன் பாலியல் தொடர்பு கொண்டால் சமூகத்தில் பெரும் பிரச்சினைகள் உருவெடுக்கும். இஸ்லாம் ஒருதார மணத்தை விரும்புகின்றது. பலதார மணம் சூழ்நிலை களைப் பொறுத்து வழங்கப்பட்ட அனுமதி மட்டுமே ஆகும். இந்திய முஸ்லிம்களில் பலதார மணம் மிகவும் சொற்ப எண்ணிக்கையில் உள்ளது.
 
மஹர் - திருமணக் கொடை
 
திருமணத்தின் போது மணமகன் தரப்பிலிருந்து மணப்பெண்ணுக்குக் கொடுக்கப் படும் தொகை அல்லது பொருள்கள் மஹர் எனப்படும். விவாகரத்தின் போது கணவன் தன்னுடைய மனைவிக்கு அதிகமான தொகையை கொடுத்துப் பிரிந்து செல்ல இஸ்லாம் எடுத்துரைக்கின்றது.
 
அண்மைக்கால சட்டத்திருத்தங்களும் விளைவுகளும்
 
லவ் ஜிஹாத்
முஸ்லிம் ஆண்கள் இந்து சமூகப் பெண்களைத் திருமணம் செய்வதைச் சட்ட விரோதமாக உ.பி. அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் மதமாற்றத்தைத் தடுப்பதாக உ.பி. அரசு கருதுகின்றது.
 
இந்து ஆண்கள் முஸ்லிம் பெண்களைத் திருமணம் செய்வதை இந்துத்துவ அமைப்புகள் தடுப்பதில்லை. முஸ்லிம் சமூகம் இதை ஏன் லவ் ஜிஹாதாகக் கருதக் கூடாது ? இந்து சமூகத்தில் பெண்களின் பிறப்பு விகிதம் பல மாநிலங்களில் சரிவில் உள்ளது. ஆகையால் லவ் ஜிஹாதை ஏன் நீண்ட கால சதித் திட்டமாகப் பார்க்கக் கூடாது. தற்போதைய லவ் ஜிஹாத் சட்டம் மதரீதியாகவும் பாலின ரீதியாகவும் அநீதி இழைப்பதாக உள்ளது.
 
ஒருபால் உறவு
ஒருபால் உறவு திருமணத்தைச் சட்டப் பூர்வமாக அங்கீகரிக்கலாமா? வேண்டாமா? என்ற வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஒருபால் உறவுக்கு சட்டப்பூர்வ அனுமதியை ஏற்கனவே உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.
 
இயற்கைக்கு எதிரான இந்தப் பழக்கத்தினால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் ஏற்பட 8 மடங்கு வாய்ப்பு இருக்கிறது. இதை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுள்ளது. ஒரு பால் உறவாளர்களுக்கு மனநல சிகிச்சையும். அவர்கள் தாக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பும் அரசு வழங்க வேண்டும்.
 
இரு குழந்தைகள் என்ற சட்டம், கருக் கலைப்புகளையும் கருக்கொலைகளையும் அதிகப்படுத்தும்.
 
இந்தியாவைப் பொறுத்தவரை மதச் சார்பின்மை என்பது அனைத்து மக்களும் தாங்கள் விரும்பும் மதத்தைப் பின்பற்றவும் பரப்புரை செய்யவும் உரிமை உண்டு. இந்திய அரசியலமைப்பின் 15, 16, 25-29 பிரிவுகளில் மதச்சார்பின்மை பற்றிய விளக்கம் கூறப்பட்டுள்ளது. இந்திய மக்களில் பெரும்பான்மையோர் மதநம்பிக்கை உள்ளவர்களாகவும் வலுவான குடும்ப அமைப்பை விரும்புபவர்களாகவும் இருக்கிறார்கள்.
 
பொது சிவில் சட்டம் எவ்வடிவில் வந்தாலும் இந்திய முஸ்லிம்கள் பின்வரும் காரணங்களால் அதை எதிர்ப்பார்கள்
 
* நவீன மேற்கத்தியப் பாணியிலான பாலியல் சுதந்திரம் ஏற்பட வழிவகை உள்ளது.
* முஸ்லிம் தனியார் சட்டத்தில் வாரி சுரிமை, திருமணம், விவாகரத்து போன்ற வற்றில் மாற்றம் கொண்டு வருகின்றது.
* குடும்பக் கட்டுப்பாடு தற்காலிகத் தீர்வாக ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். ஆனால் இரு குழந்தைத் திட்டம், கருக் கலைப்பை அதிகப்படுத்தும். பெண் குழந்தைகள் கருவிலேயே கொல்லப்படுவார்கள்.
* வக்ஃபு சொத்துகளை முஸ்லிம் சமூக மேம்பாட்டிற்குப் பயன்படுத்த முடியாது.
* தொழுகை, பாங்கு, நோன்பு, ஹஜ் பயணத்திற்கு தடை ஏற்படும் சூழல் உருவாகும்.
 
முஸ்லிம் சமூகத்திற்கு..
 
முஸ்லிம்கள் தங்களுடைய மார்க்கச் சட்டங்களை முறையாகப் பின்பற்ற வேண்டும். பெண்களுக்குச் சொத்துப் பங்கீடு விவாகரத்து போன்றவற்றில் சில இடங்களில் அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது. இதை முஸ்லிம் சமூகம் சீர் செய்ய வேண்டும்.
 
பொதுமக்களுக்கு..
 
* முஸ்லிம் சமூகம் அனைத்து மத சமூகங்களுடனும் இணைந்து பல நல்ல காரியங்களில் செயல்பட்டு வருகின்றது. மத வெறுப்புப் பரப்புரையை நீங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக்கூடாது.
* ஒட்டுமொத்த மனிதக்குல அழிவைத் தடுக்க, நம்முடைய தத்துவங்களை மீள் பார்வை செய்ய வேண்டும்.
* இந்தியக் குடும்ப அமைப்பைப் பாதுகாக்க வேண்டும்.
* சமூக பொருளாதார நிலைகளில் குடும்ப அமைப்பு வலுவானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
குடும்ப அமைப்பின் மீது எவ்வித தாக்குதல்கள் நடந்தாலும் அது எதிர்க்கப்பட வேண்டும்.
* மருத்துவப்பணி, ஆசிரியர் பணி, சமூகப் பணிகளில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு களை அதிகளவில் உருவாக்க வேண்டும்.
 
மது, திருமணத்திற்கு அப்பாற்பட்ட பாலுறவு, சூதாட்டம், விபச்சாரம், ஆபாச வலைத்தளங்கள், ஒருபால் உறவு போன்றவை தடை செய்யப்பட வேண்டுமா? என்ற கேள்வியுடன் தேசிய அளவில் பொதுக் கருத்துக் கணிப்பைத் தேசிய சட்ட ஆணையம் நடத்த முன்வர வேண்டும்.
 
பொது சிவில் சட்டத்திற்குக் கடந்த 2021 ஆம் ஆண்டில் தேசிய சட்ட ஆணையம் ஆதரவு தெரிவிக்கவில்லை. வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியாவின் அடிநாதம். பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அமைதியைச் சீர்குலைக்கும். எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் பொது சிவில் சட்டத்தை ஆய்வு செய்தால் அவர்களுக்குத் தீர்க்க வேண்டிய நிலை வரும். முஸ்லிம்கள் குர்ஆன், நபி(ஸல்} வழி முறைகளுக்கு மாற்றமான சட்டங்களை ஒரு போதும் ஆதரிக்க மாட்டார்கள். 
 
 
 
 
 

உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தலையங்கம்

மேலும் தேடல்