மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சட்ட அமைப்பைச் சீர்குலைக்கும் புதிய குற்றவியல் சட்டங்கள் - பத்திரிகையாளர் சந்திப்பில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கண்டனம்

மக்கள் கருத்தை இஸ்லாத்திற்குச் சாதகமாக மாற்ற வேண்டும்
ரஹ்மத்துன்னிஸா, தமிழில் : R. அஃப்ரிதா சுலைஹா, Aug 16 - 31 2023


Art 3.j

 

சென்ற இதழ் தொடர்ச்சி...

உங்கள் ஆரோக்கியத்தைக் கவ-னித்துக் கொள்வது உங்களுக்கு மட்டுமல்ல இயக்கத்துக்கும் முக்கியமானது. உங்கள் தூக்கம், உணவு, உடற்பயிற்சி, உடல்நலம் போன்றவை?

இதில் நான் கொஞ்சம் பலவீனமாக இருப்பதாக உணர்கிறேன். என் மனைவியின் முக்கியக் கவலை இது மட்டுமே. நாங்கள் இந்த விஷயத்தில் பல முடிவுகளை எடுத்தும் அவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்த இயலவில்லை. நான் நீரிழிவு நோயாளியாக இருப்பதால் முறையான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அதுவும் நடக்கவில்லை. உடற்பயிற்சியைப் பொறுத்தவரை நான் தலைமையகத்தில் இருக்கும்போது அடிக்கடி நடைப்பயிற்சி மேற்கொள்வேன். சில நேரங்களில் சைக்கிள் ஓட்டுவேன்.

குடும்பத்திற்கு நீங்கள் எப்படி நேரம் ஒதுக்குகின்றீர்கள்? பொதுவாக ஒரு தந்தை கொடுக்க வேண்டிய நேரத்தை உங்களால் நிச்சயமாகக் கொடுக்க முடியாது என்பதை நாங்கள் அறிவோம். அதை நீங்கள் எப்படி ஈடுசெய்கிறீர்கள்?

உண்மைதான். என் குடும்பத்தினர் பெரிய பாதிப்புக்கு உள்ளாகின்றார்கள். என் மனைவி டாக்டர் நஸ்னீன் சதாத் சுற்றுச்சூழல் அறிவியலில் முதுகலை முடித்-துள்ளார். 2004ஆம் ஆண்டு எங்கள் திருமணத்திற்குப் பிறகு அவர் அதே பாடத்தில் கடஈ முடித்தார். அதன்பிறகு 2008 முதல் 2020 வரை பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். ஆனால் 2019ஆம் ஆண்டு நான் டெல்லி ஜமாஅத் தலைமையகத்திற்கு மாறியபோது, குழந்தைகளின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டியிருந்ததால் அவர் அந்த வேலையை விட்டுவிட வேண்டியதாயிற்று.

இப்போது நஸ்னீன் வீட்டில் இருக்கிறார். குடும்ப ஆலோசனையில் ஆர்வம் கொண்ட அவர் குடும்ப ஆலோசனையில் பல படிப்புகளை முடித்தார். இப்போது அவர் குடும்ப ஆலோசனை வகுப்புகளை நடத்துகிறார். உருது, ஆங்கிலத்தில் குறிப்பாக ஹாதியா, ஆராவுக்காகக் கட்டுரைகளை எழுதுகிறார்.

தலைமைப் பண்புகளை வளர்த்துக்கொள்வது குறித்து குறிப்பாக ஜமாஅத் தொண்டர்களுக்கும் ஒட்டுமொத்த உம்மத்துக்கும் உங்கள் ஆலோசனைகள் என்ன? 

இயக்கத்துடன் தொடர்புடைய அனைவரும் தலைவர்கள். தலைமைத்துவம் என்பது எந்தவொரு நிறுவனப் பதவியுடன் மட்டும் தொடர்புபடுத்தப்பட்டதல்ல. அது தலைமையின் ஒரு சிறிய பகுதி. இஸ்லாமிய இயக்கம் கொண்டிருக்கும் கருத்தியல் குறிக்கோளுடன் நீங்கள் சமூகத்திற்குச் செல்ல வேண்டும். தலைவராக இல்லாமல் எந்தத் தகுதியிலும் இயக்கத்தை நடத்த முடியாது. எனவே இன்றைய தலைவர்கள் பலவிதமான பண்பு-களைக் கொண்டிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர்களின் தார்மிக பலம், பண்பு, இஸ் லாம் பற்றிய புரிதல், கருத்தியல் உருவாக்கம் ஆகியவை நிரந்தரமான விஷயங்கள். இவை இல்லாமல் தலைமைத்-துவத்தைக் கற்பனை செய்யவே முடியாது.

கூடுதலாக இன்றைய உலகில் நாம் மிக வேகமாகவும் திறமையாகவும் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், ஏனெனில் இது மிக வேகமாக நகரும் உலகம். 14 மாதங்களுக்குள் அறிவு காலாவதியாகி விடும் என்கிறார்கள். எனவே ஓர் ஆண்டில் நீங்கள் கற்றுக்கொண்டவற்றில் பெரும்பகுதி காலாவதியாகிவிடும். நீங்கள் மிக வேகமாகவும் முழுமையாகவும் செயல்பட வேண்டும். மெதுவான இயக்கம், மெதுவாகக் கற்றல் மூலம் நீங்கள் ஒரு சிறந்த தலைவராக இருக்க முடியாது. எனவே ஒரு முக்கியமான அம்சம் அறிவு, வேகம், செயல்திறன்.

இரண்டாவது முக்கியமான அம்சம் உங்கள் தனிப்பட்ட உறவுகள், மக்களை ஊக்கு-விக்கும் திறன், மக்களை உங்களுடன் எப்படி அழைத்துச் செல்கிறீர்கள் என்பதில் உள்ளது. ஒரு தலைவர் என்-றால் கடினமாக உழைக்கிறவர் அல்லது வேக-மாக வேலை செய்பவர் மட்டுமல்ல, மற்றவர்களைக் கடினமாகவும் வேகமாகவும் வேலை செய்ய வைக்கும் திறன் கொண்டவர். நீங்கள் வேகமாகச் சென்றால், உங்களுடன் யாரும் இல்லை என்றால், நீங்கள் ஒரு நல்ல ஊழியராக இருக்கலாம். ஆனால் ஒரு நல்ல தலைவராக இருக்க முடியாது.

ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் ஒருமுறை செயல்திட்டத்தை ஜமாஅத்தே இஸ்லாமி புதுப்பித்து மாற்று-கிறது. அதற்கான தேவை என்ன? ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஒரு கருத்தியல் இயக்கம். நமது நாட்டின் பொதுக் கருத்தையும் ஒட்டுமொத்த சமூக அரசியல் சூழ்நிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறோம். எனவே நாம் எதைச் செய்தாலும் நமது நாட்டின் தற்போதைய நிலைமைகள், நடந்து கொண்டிருக்கும் விவாதங்கள், நாம் எதிர்கொள்ளும் அரசியல் சூழ்நிலைகள், சவால்கள் போன்றவற்றைக் கவனத்தில் கொள்கிறோம். நம் நாட்டின் அடிப்படை உண்மைகளிலிருந்து நாம் விலகி இருக்க முடியாது.

சூழலுக்குப் பொருந்தாத நடவடிக்கைகளிலும் நாம் செயல்பட முடியாது. நம் நாட்டில் என்ன நடந்தாலும் அதற்குப் பதில் சொல்ல வேண்டும். நமது அடிப்படை விழுமங்கள், நோக்கங்கள், பணி அனைத்தும் அப்படியே இருக்கின்றன. ஆனால் நாம் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் மாறுகின்றன. ஏனெனில் அவை நாட்டின் நிலைமையைப் பொறுத்தது. எனவே நாம் நிலைமைக்கேற்ப நமது திட்டத்தை மாற்ற வேண்டும். அதன் காரணமாக ஒவ்வொரு புதிய காலகட்டத்தின் தொடக்கத்திலும் நம் நாட்டில் நிலவும் நிலைமைகளை ஆய்வு செய்ய முயற்சிக்கிறோம். நாங்கள் இதுவரை கண்டறிந்த பயணத்தையும் பகுப்பாய்வு செய்கிறோம். அதற்கேற்ப திட்டத்தை இறுதி செய்கிறோம்.

நமது நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றீர்கள். இன்றைய நாட்டுச் சூழலை ஜமாஅத் எப்படிப் பார்க்கிறது?

இது நம் நாட்டிற்கு மிகவும் பொருத்தமான நேரம். உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளது. இது ஒரு பெரிய வாய்ப்பு, ஏனெனில் இது மிகப்பெரிய மனித வளத்தை நமக்கு வழங்குகிறது. உலகின் ஒவ்வொரு பகுதியிலும் நம் இருப்பு உள்ளது. இந்தியத் தொழிலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஒவ்வொரு பெரிய, வளர்ந்த பணக்கார நாட்டிலும் வேலை செய்கிறார்கள். எனவே நமது மக்கள்தொகை மனிதவளம் பெரிய பலமாக மாறியுள்ளது.

அதேபோன்று கடந்த இரண்டு தசாப்தங்களில் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சி ஒரு பெரிய வாய்ப்பாக உள்ளது. உலகின் ஒவ்வொரு பகுதியிலும் ஊழல், ஒழுக்கச் சீரழிவு இருந்தபோதிலும், நம் நாட்டில் நிலவும் பண்பாட்டு விழுமியங்கள், உலகம் முழுவதையும் சிறைப்படுத்தியிருக்கும் உலகாயத அலையிலிருந்து பாதுகாக்கின்றன. எனவே இவை நம்மிடம் உள்ள மிக முக்கியமான பலம் என்று உணர்கிறோம். இந்தப் பலம் சரியாக ஆராயப்பட்டு பயன்படுத்தப்பட்டால், உலகம் முழுவதற்கும் உத்வேகத்தின் ஆதாரமாக நாம் மாறியிருக்கலாம்.

மகத்தான வாய்ப்புகள் நமக்குக் கிடைத்த அதே நேரத்தில் வாய்ப்புக்கேடாக வெறுப்பையும் பிளவையும் ஏற்படுத்தும் வகுப்புவாதம், ஃபாசிஸம் நம் நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் தடையாக மாறியுள்ளது. இந்த வகுப்புவாதத்தையும் ஃபாசிஸத்தையும் சமாளிக்காவிட்டால், நாம் முன்னேறிய, வளமான நாடாக மாற முடியாது. வகுப்புவாதத்தையும் ஃபாசிஸத்தையும் பெரிய பிரச்னையாகவும், நாடு இப்போது எதிர்கொள்ளும் முக்கியச் சவாலாகவும் நாங்கள் அடையாளம் காண்கிறோம்.

நாட்டில் உள்ள முஸ்லிம் சமுதாயம் நீதி, சமாதானத்தின் ஒளியாக இருந்திருக்க வேண்டும். முஸ்லிம் சமுதாயம் தனது முழுமையான பலத்தை உணர்ந்திருந்தால் நாட்டிற்கு முகவராக மாறியிருக்கலாம். இனவாதம், பிளவு, பொருளாதார சமத்துவமின்மை, அநீதி போன்ற பிரச்னைகளின் தாக்குதலில் இருந்து நாட்டை விடுவித்திருக்கலாம். ஆனால் வாய்ப்புக்கேடாக முஸ்லிம் சமுதாயம் பல பிரச்னைகளை எதிர்கொள்கிறது. பிரச்னைகளின் முதல் தொகுப்பு தார்மிக வீழ்ச்சி, பலவீனத்துடன் தொடர்புடையது.

இரண்டாவது பிரச்னைகள், அதற்கு எதிராக நடக்கும் அதன் இழப்பு, சுரண்டல், ஒடுக்குமுறை தொடர்பானது. எனவே முஸ்லிம் சமுதாயம் இப்போது மிகவும் பலவீனமாகவும், பாதிக்கப்படக்கூடியதாகவும் உள்ளது. வகுப்புவாதத்தின் தாக்குதல் முக்கியமாக முஸ்லிம் சமுதாயத்தைக் குறிவைக்கிறது. இந்தப் பிரச்னைகளால் அது நீதி, இஸ்லாமிய விழுமியங்களின் ஒளியாக மாறும் நிலையில் இல்லை. எனவே, நாம் முஸ்லிம் சமுதாயத்தை வலிமையாக்கி, இஸ்லாமிய விழுமியங்களின் ஒளியாக அதன் பங்கை நிறைவேற்றுவதற்கு உதவ வேண்டும் என்று உணர்கிறோம். இது நாட்டிற்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கும் முன்னால் உள்ள சூழ்நிலை, பிரச்னைகளாக உணர்கிறோம். இதைக் கருத்தில் கொண்டு நான்காண்டுத் திட்டத்தை வகுத்துள்ளோம்.

தீனை நிலைநாட்டும் ஜமாஅத்தே இஸ்லாமியின் குறிக்கோள் அப்படியே உள்ளது. இன்றைய இந்தியச் சூழலைக் கருத்தில் கொண்டு எந்தமாதிரியான மிஷனை முன்வைக்கின்றீர்கள்?

தீனை நிலைநாட்டும் குறிக்கோளை அடிப்படையாக வைத்து மக்கள் கருத்தை இஸ்லாத்திற்குச் சாதகமாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். உலகெங்கிலும் அதிகரித்து வரும் இஸ்லாமோஃபோபியா, நம் நாட்டில் உள்ள வகுப்புவாத ஃபாசிஸப் போக்குகள் போன்ற காரணங்களால் இஸ்லாம் குறித்த தவறான புரிதல்கள் பரவலாக இருப்பதை உணர்கிறோம். இஸ்லாத்தின் மீது வெறுப்பு கூட உள்ளது. தவறான புரிதலின் விளைவாக சமூக மோதல்கள், அணிதிரள்தல் போன்ற பல சமூகப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. மதவாத அரசியல் சக்திகள் அவநம்பிக்கையையும் தவறான புரிதலையும் பரப்ப முயற்சிக்கின்றன.

இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதும், இஸ்லாம் தொடர்பான மக்கள் கருத்தில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வருவதும் நம் அத்தியாவசிய, மிக முக்கியமான முன்-னுரிமை என்று கருதுகிறோம். எனவே இந்த நான்காண்டுத் திட்டத்தை மக்கள் கருத்தை இஸ்லாத்திற்குச் சாதகமாக மாற்றுவதையே மிஷனாக வைத்துள்ளோம். இஸ்- லாமிய போதனைகளை விளக்குவோம். இஸ்லாமிய சமுதாயத்தில் சீர்திருத்தத்தைக் கொண்டு வர முயற்சிப்போம். இந்த இரட்டை வழிமுறையின் மூலம் இஸ்லாம் குறித்த நாட்டு மக்களின் கருத்தில் தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறோம்.

(அடுத்த இதழில் முடியும்...)


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தலையங்கம்

மேலும் தேடல்