மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

அரசியல்

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு தமிழ்நாடு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஆதரவு
வி.எஸ்.முஹம்மத் அமீன், 1-15 ஏப்ரல், 2024



வருகின்ற 2024 மக்களவைத் தேர்தல் நிலைப்பாடு குறித்த ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு-புதுச்சேரி மாநில சிறப்பு ஆலோசனைக் கூட்டம் மார்ச் 22ஆம் நாள் நடைபெற்றது. வருகின்ற மக்களவைத் தேர்தலில் வகுப்புவாதிகள் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு அதற்கு எதிரான வலிமையான கூட்டணிக்கு வாக்களிக்க ஜமாஅத் முடிவு செய்துள்ளது. அந்த அடிப்படையில் தமிழ்நாடு, புதுச்சேரியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்துள்ள இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்பது என தீர்மானிக்கப்பட்டது.

எதிர்வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் கட்சிகளுக்கிடையேயான தேர்தல் அல்ல. ஜனநாயகத்திற்கும் வகுப்புவாதத்திற்குமான தேர்தல். சிறுபான்மை, தலித்களுக்கு மட்டுமே எதிரானது அல்ல ஃபாசிஸம். ஒட்டுமொத்த மனித குலத்திற்கே எதிரானது. ஃபாசிஸ சக்திகளை வீழ்த்துவதன் மூலமே நம் நாட்டை வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுக்க முடியும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் என்பதை உணர்ந்துதான் ஜனநாயக சக்திகள் பல்வேறு சமரசங்களுடனும், விட்டுக் கொடுப்புகளுடனும் கைகோர்த்து இந்தத் தேர்தலை எதிர்கொள்கின்றன.

சமுதாய நலனை மட்டுமே முன்னிறுத்தாமல் தமிழ்நாட்டின், இந்தியாவின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டே தமிழ்நாடு-புதுச்சேரி மாநில ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளது.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தலையங்கம்

மேலும் தேடல்