மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

அரசியல்

இப்படியெல்லாமா ஒரு பிரதமர் பேசுவார்?
வி.எஸ்.முஹம்மத் அமீன், எஸ். சாகுல் ஹமீது, மே 01 - 15, 2024இப்படியெல்லாமா ஒரு பிரதமர் பேசுவார்?
தொகுப்பு: வி.எஸ்.முஹம்மத் அமீன், எஸ். சாகுல் ஹமீது

இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பன்ஸ்வாடாவில் ஏப்ரல் 21ஆம் தேதி நடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்டப் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி ‘மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது இந்த நாட்டின் சொத்துகளில் முதன்மை உரிமை முஸ்லிம்களுக்குத்தான் உள்ளது என்று கூறினார். இதன் பொருள் என்ன? அவர்கள்(காங்கிரஸ்) யாருக்குச் சொத்துகளைப் பிரித்துக் கொடுப்பார்கள்? யார் அதிகமான குழந்தைகளைப் பெற்றுக் கொண்டிருக்கின்றார்களோ, யார் இந்த நாட்டின் மீது படையெடுத்து ஆக்ரமித்தார்களோ அவர்களுக்குச் சொத்துகளைப் பிரித்துக் கொடுப்பார்கள். நீங்கள் கடினமாக உழைத்துஈட்டிய பணத்தையெல்லாம் ஆக்ரமிப்பாளர்களுக்குத் தருவதை ஏற்றுக் கொள்வீர்களா? வேடிக்கை பார்க்கப் போகின்றீர்களா?

இந்த நகர்ப்புற நக்சல்கள் நமது தாய்மார்களின், சகோதரிகளின் தாலிக் கொடிகளில் உள்ள தங்கத்தைக் கூட விட்டுவைக்க மாட்டார்கள். அவற்றையும் பறித்து முஸ்லிம்களுக்குக் கொடுத்து விடுவார்கள்’ என்று பேசியுள்ளார்.
மிகப் பிழையான தகவல்களைச் சொன்னதுடன், வெறுப்பின் உச்சத்திலிருந்து இவ்வளவு தரம் தாழ்ந்து ஒரு பிரதமரால் பேச முடியுமா? மோடியால் முடியும். பொய்பேசுவதும், வெறுப்பை உமிழ்வதும் அவருக்கு வாய் வந்த கலை. பிரதமரின் இந்த வெறுப்புப் பேச்சுக்கு நாடு முழுவதும் கடுமையான கண்டனங்கள் எழுந்திருப்பதுடன், அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் புகார் மனுக்களாகக் குவிந்து வருகின்றன. அவர் பேசிய 24 மணி நேரத்தில் இருபதாயிரத்திற்கும் அதிகமான புகார் மனுக்கள் தேர்தல் ஆணைய மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டன. தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காது என்ற தைரியத்தில் மீண்டும் மோடி தான் பேசியதை நியாயப்படுத்திப் பேசி வருகிறார்.

பிரதமரின் இந்த வன்முறையைத் தூண்டும் வெறுப்புப் பேச்சுக்கு எழுந்த கண்டன அலைகளில் சிலவற்றை இங்கு பதிவு செய்கின்றோம். இடதுசாரி ஜனநாயக சக்திகள் மட்டுமின்றி மோடியை ஆதரிக்கும் வலதுசாரி மனங்கொண்ட ஸ்ரீதர் சுப்ரமணியன், மாலன் போன்றவர்களும் இந்த வெறுப்புக்கு எதிராகத் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்கள்.

‘வாஜ்பாய் தந்தைக்கு ஏழு பிள்ளைகள். யோகி ஆதித்யநாத்தின் தந்தைக்கு ஏழு குழந்தைகள். அமித்ஷாவின் உடன் பிறந்தவர்கள் ஆறுபேர். பிரதமர் மோடியின் தந்தைக்கு ஐந்து பிள்ளைகள். அசோக் சிங்காலுடன் பிறந்தவர்கள் ஆறுபேர். இந்தப் பட்டியலை இன்னும் விரித்துச் செல்லலாம். ஆனால் இவர்கள் சொல்கிறார்கள் அதிகம் பிள்ளை பெறுபவர்கள் முஸ்லிம்கள் என்று..!’ என்பன போன்ற பல வீடியோக்களும், எதிர்வினைகளும் வலைதளம் முழுவதும் நிரம்பிக்கிடக்கின்றன.

தாலியின் முக்கியத்துவம் மோடிக்கு என்ன தெரியும்?
- பிரியங்கா காந்தி

வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போரா டிய 600 விவசாயிகள் உயிரிழந்தார்கள். அந்த விவசாயிகளின் மனைவிகளின் தாலி குறித்து பிரதமர் யோசித்தாரா? மணிப்பூரில் ஒரு பெண் நிர்வாணமாக அடித்து இழுத்துச் செல்லப்பட்டார். அந்தப் பெண்ணின் தாலி குறித்து பிரதமர் யோசித்தாரா? இன்று ஓட்டுக்காக, இழிவான கருத்துகளை மோடி பேசி வருகிறார். இந்திரா காந்தி தனது தாலி உட்பட அனைத்துத் தங்கத்தையும் நாட்டிற்காகத் தியாகம் செய்தார். என் தாயின் தாலி இந்த நாட்டிற்காகத் தியாகம் செய்யப்பட்டது. காங்கிரஸ் யாருடைய தங்கத்தையாவது பறித்துள்ளதா?

வெறுப்பும் பாகுபாடும் மோடியின் உத்தரவாதம்
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பிரதமர் மோடியின் நச்சுப் பேச்சு மிகவும் மோசமானது, மிகவும் வருந்தத்தக்கது. இந்த வெறுப்புப் பேச்சை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. தன் மீதான பொதுமக்களின் கோபத்திற்கு அஞ்சி, மோடி மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு, வெறுப்பூட்டும் பேச்சைப் பேசியுள்ளார். வெறுப்பும் பாகுபாடும்தான் மோடியின் உண்மையான உத்தரவாதம். பிரதமரின் அப்பட்டமான வெறுப்புப் பேச்சுக்குக் காது கேளாத வகையில் தேர்தல் ஆணையம் நடுநிலையைக் கைவிட்டு விட்டது.

எந்த ஒரு பிரதமரும் இப்படி நடந்து கொண்டதில்லை
- மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் தலைவர்

பதவிக்காகப் பொய் பேசுவது, ஆதாரமற்ற விஷயங்களை எடுத்துரைப்பது, எதிரிகள் மீது பொய்க் குற்றச்சாட்டுகளை அடுக்குவது ஆகியன ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் பயிற்சியின் சிறப்பாகும். இந்திய வரலாற்றில் எந்த ஒரு பிரதமரும் மோடியைப் போன்று பிரதமர் பதவியின் கண்ணியத்தைக் குறைத்துக் கொண்டதில்லை.

வரலாறு உங்களை மன்னிக்காது
- பீட்டர் அல்போன்ஸ், மாநில சிறுபான்மை ஆணையத் தலைவர்

இந்த தேசத்தில் இந்துக்கள் 87 கோடி மக்கள். இஸ்லாமியர்கள் 27 கோடி. யார் யாரை மிரட்டி சொத்துகளை அபகரிக்க முடியும்? எதற்காக ஒருதாய் மக்களாக வாழும் மக்களைப் பிளவுபடுத்தும் இந்த அநியாய முயற்சி? தேர்தல் முடிவதற்குள் இதை விடவும் மோசமாக நீங்கள் பேசுவீர்கள். வரலாறு உங்களை மன்னிக்காது.

இந்தக் கீழ்த்தரமான பேச்சையும் வரலாறு பதிவு செய்யும்
- நடிகர் பிரகாஷ் ராஜ்

இந்தக் கீழ்த்தரமான பேச்சையும் வரலாறு பதிவு செய்யும். அரசருக்கு அறிவுரை சொல்லி எந்தப் பயனும் இல்லை. அதிகாரத்திற்கு அவர் அலைவது வெளிப்படையாகத் தெரிகிறது. முதல் கட்ட வாக்குப் பதிவு அவரை அச்சுறுத்தி விட்டது. இன்னும் கொஞ்ச நாள்களில் மக்கள் அவர் களுக்குப் பாடம் புகட்டுவார்கள்.

வெட்கக்கேடு
- சீத்தாராம் யெச்சூரி, பொதுச்செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

பிரதமர் மோடியின் வெறுப்புப் பேச்சு கொடுமையானது. தேர்தல் ஆணையத்தின் மௌனம் அதைவிடக் கொடுமையானது. வெறுக்கத்தக்க பேச்சு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தார்மிக நெறிமுறை களை மொத்தமாக மீறியிருக்கிறார். ஒருணசமூகத்துக்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் பதவியில் உள்ள மோடி பேசியது வெட்கக் கேடானது. நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுப்பதுடன், கடும் நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

கேவலமான மனிதர்
- க. கனகராஜ், சிபிஎம், மாநில செயற்குழு உறுப்பினர்

இவ்வளவு கேவலமான மனிதரை உலகம் கண்டதேயில்லை. மோடி தேர்தலில் போட்டியிடவும், பரப்புரை செய்யவும் தேர்தல் ஆணையம் உடனே தடை விதிக்க வேண்டும்.

அபாண்டமாகப் பொய் பேசும் பிரதமர்
- காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்

இதுவரை இருந்த பிரதமர்களில் மோடியைப் போன்று தரம்தாழ்ந்து பேசியவர்கள் யாரும் இல்லை. பிரதமர் பேசியது அபாண்டமான பொய். மக்களின் பணம், நகை, சொத்துகளைப் பறித்து இஸ்லாமியர்களிடம் காங்கிரஸ் எப்போது கொடுத்தது? பழங்குடியினரிடமுள்ள வெள்ளி, நகைகளைக் கணக்கெடுப்போம் என்று காங்கிரஸ் எப்போது சொன்னது? அரசு ஊழியர்களின் சொத்துகளைப் பிரித்து மக்களுக்குக் கொடுப்போம் என்று காங்கிரஸ் எப்போது சொன்னது?

இந்துக்களின் சொத்தைப் பிடுங்கியது யார்?
- பேராசிரியர் அருணன்

இப்படி ஒரு கேவலமான பேச்சைப் பேசக் கூடியவர் நமது நாட்டின் பிரதம மந்திரியா? உண்மையில் அவர் ஓர் அவமானச் சின்னம். மோடி ஆட்சி இந்திய அத்தியாத்தின் கறுப்புப் பக்கங்கள். அதனை இந்த ஒரு பேச்சு உணர்த்துகிறது. கடந்த 10 ஆண்டுகளில் ஏழை இந்துக்களின் சொத்தை எடுத்து பெரும் முதலாளிகளான அம்பானிக்கும் அதானிக்கும் மோடி கொடுத்துவிட்டார். இந்துக்களிடம் சொத்து இல்லை.

ஏற்றத்தாழ்வை அகற்றி எல்லாருக்குமான வளர்ச்சியைப் பேசிய தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்கள் என்று எங்கும் குறிப்பிடப் படவில்லை. அது எப்படி முஸ்லிம் லீகின் தேர்தல் அறிக்கை போல் உள்ளது? இது பொய்யான பேச்சு. இவர் பிரதமராக இருக்க தகுதியற்றவர். ‘அவர்கள் இவர்கள்’ என்ற பிரிவினையை ஏற்படுத்த முனைகிறார். மத பகைமையை பிரதமர் பேசும் போது தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டிருக்கிறது?

மோடியை ஆதரித்ததற்காக வருத்தப்படுகிறேன்
- ஸ்ரீதர் சுப்ரமணியம்

பிரதமர் மோடி இராஜஸ்தான் மாநிலத்தில் பரப்புரை மேடையில் நேரடியாக முஸ்லிம்களை அவமதித்துப் பேசி இருக்கிறார். ‘அவர்கள் ஊடுருவலாளர்கள். அதிகம் பிள்ளை பெறுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்துக்களின் சொத்துகளை எல்லாம் ஆட்டையைப் போட்டு அவர்களுக்குக் கொடுத்து விடுவார்கள்’ என்று பேசியுள்ளார்.

முஸ்லிம்களுக்குச் சொத்தை எல்லாம் பிரித்துக் கொடுத்து விடுவோம் என்று காங்கிரஸ் எங்குமே சொல்லவில்லை. இதில் இன்னொன்றையும் மோடி குறிப்பிடுகிறார். இந்தியாவின் வளங்களில் முஸ்லிம்களுக்குத்தான் முன்னுரிமை என்று மன்மோகன் சிங் சொன்னதாகச் சொல்கிறார். மன்மோகன் சிங் அப்படி எங்குமே பேசியதாகவும் தகவல் இல்லை. அது ஒரு வாட்சப் ஞூச்டுஞு ணஞுதீண். ஆனால் பிரதமர் பதவியில் இருப்பவர் கொஞ்சமும் யோசிக்காமல் அதையே செய்தியாக அடித்து விடுகிறார்.

உண்மையில் இந்தியாவின் வளங்கள் யாரிடம் இருக்கின்றன? ஜோதிராவ் புலே பல்கலைக்கழகம், ஜேஎன்யூ இணைந்து சாதி ரீதியாகப் பொருளாதார நிலை குறித்து ஒரு சர்வே நடத்தியது. ஒவ்வொரு சமூக மும் தேசத்தின் மொத்த செல்வத்தில் எவ்வளவு தங்கள் வசம் வைத்திருக்கிறார்கள் என்று அந்த அறிக்கை கணக்கிடுகிறது. அதன்படி,
முன்னேறிய சாதி இந்துக்கள்: 42%
இதர பிற்படுத்தப்பட்ட சாதி இந்துக்கள்: 30.7%
இதர சிறு குறு மதத்தினர்: 9%
முஸ்லிம்கள்: 8%
பட்டியலினத்தவர்: 7.6%
பழங்குடியினர்: 3.7%
(இதர சிறு குறு மதத்தினர் கேட்டகரியில் சீக்கிய, பௌத்த, ஜெயின் மதத்தினர் வருகிறார்கள்.)

அதாவது சாதி இந்துக்கள் மட்டுமே இந்தியாவின் செல்வங்களில் சுமார் 73 விழுக்காட்டைத் தங்களிடம் வைத்துக் கொண்டு மேலும் மேலும் ஆட்டையைப் போட்டுக் கொண்டு, இதெல்லாம் பத்தாது என்று ‘அய்யய்யோ என் சொத்தை எல்லாம் கொண்டு போகப் போறான்!’ என்று ஒப்பாரியும் வைக்கிறார் பிரதமர்.

அடுத்ததாக அதிகக் குழந்தைகள் பெற்றுக் கொள்வது குறித்துப் பேசியது இன்னொரு அவலம். காரணம், இந்தியாவில் அனைத்து மக்கள் தொகை வளர்ச்சியும் குறைந்து கொண்டுதான் வருகிறது. கஞுதீ கீஞுண்ஞுச்ணூஞிட இஞுணணாணூஞு நடத்திய ஒரு ஆய்வின்படி 1951இல் இந்துக்களின் வருடாந்திர மக்கள் தொகை அதிகரிப்பு 20.7 விழுக்காடாக இருந்தது 2011இல் 16.7 விழுக்காடாகக் குறைந்திருக்கிறது. போலவே 1951இல் முஸ்லிம்களின் வருடாந்திர அதிகரிப்பு 32.7 விழுக்காடாக இருந்தது 24.7 விழுக்காடாகக் குறைந்திருக்கிறது.

ஒரு சமூகத்தில் ஒரு பெண் சராசரியாக எவ்வளவு குழந்தைகள் பெற்றுக் கொள்கிறாள் என்பதை கூணிணாச்டூ ஊஞுணூணாடிடூடிணாதூ கீச்ணாஞு (கூஊகீ) என்று கணக்கிடுகிறார்கள். மதவாரியாக கூஊகீ கணக்கை இங்கே கொடுத்திருக்கிறேன்:

மதம் 1992 2015
முஸ்லிம் 4.4 2.6
இந்து 3.3 2.1
கிறித்தவர் 2.9 2.0
பௌத்தர் 2.9 1.7
சீக்கியர் 2.4 1.6
ஜெயின் 2.4 1.2

அதாவது இந்து, முஸ்லிம் இருவரும் தங்கள் கூஊகீஐக் குறைத்துக் கொண்டே வந்திருக்கிறார்கள். இருவருக்கும் இடையில் 2015இல் 0.5 புள்ளிகள்தான் வித்தியாசம் இருந்திருக்கிறது. குறைந்து வரும் விகிதத்தைப் பார்த்தால் 2021 சென்சஸில் இரு மதங்களும் ஒரே புள்ளியைத் தொட்டு விட்டிருக்கும் சாத்தியம் அதிகம். அடுத்த சென்சஸ் எடுக்கப்படும் போது நமக்கு அது தெரிய வரும்.

சரி, 0.5 தான் வித்தியாசம் என்றாலும் முஸ்லிம் விகிதம் அதிகமாகத்தானே இருக்கிறது என்று வாதிடலாம். அதைப் புரிந்து கொள்ள இதே கூஊகீஐ வேறு ஒரு கோணத்தில் பார்க்க வேண்டும். அதாவது, மதவாரியாகப் பார்த்தோம். இப்போது மாநில வாரியாகப் பார்க்கலாமா?

மேலே இந்துக்கள் 2.1 என்று குறிப்பிட்டது இந்தியா முழுமைக்கும் சேர்த்து. ஆனால் மாநில வாரியாகப் பார்த்தால் அதீத வித்தியாசங்கள் இருக்கின்றன.

பீகார் - 3.2
உபி - 3
மபி - 2.7
ராஜஸ்தான் - 2.6
அதாவது மேலே குறிப்பிட்ட இந்த மாநிலங்களின் கூஊகீ இந்திய முஸ்லிம்களின் கூஊகீஐ விட அதிகம். மோடி பரப்புரை செய்த ராஜஸ்தான் மாநிலத்தின் கூஊகீம் இந்திய முஸ்லிம்களின் கூஊகீம் ஒரே பாயிண்டில் தான் இருக்கின்றன.

குறைவான கூஊகீ உள்ள சில மாநிலங்களின் பட்டியலைப் பார்க்கலாமா:

கேரளா - 1.7
தமிழ்நாடு - 1.6
கர்நாடகா - 1.7
மேற்கு வங்கம் - 1.6

இப்போது யோசித்துப் பாருங்கள்: கேரளா அல்லது தமிழ்நாட்டுத் தலைவர் யாராவது மேடை ஏறி ‘இந்த வடக்கன்ஸ் இருக்கானுங்களே, வதவதன்னு பெத்துப் போட்டுக்கிட்டே இருக்கானுங்க. எல்லா வரிப்பணமும் அவனுங்களுக்குத்தான் போகுது!’ என்று பேசினால் எப்படி இருக்கும்?

அது புள்ளி விவரப்படி துல்லியமான பேச்சாக இருக்கும். ஆனால் அப்படிப் பேசினால் அது எப்பேர்ப்பட்ட எதிர்வினைகளை உருவாக்கும் என்று யோசித்துப் பாருங்கள்? மோடியும் அவரது சகாக்களும் எந்த அளவுக்கு அதனைக் கொண்டு போவார்கள்? அப்படி எந்த தென்னகத் தலைவரும் பேசவில்லை.

ஆனால் மோடியோ மேடையில் முஸ்லிம்கள் பற்றிக் கூசாமல் பொய்கள் சொல்கிறார். மத ரீதியாகக் கேவலமாகப் பேசுகிறார். அவமதிக்கிறார். அவர் ராஜஸ்தானில் பேசியது எல்லா வகைகளிலும் நடவடிக்கைக்கு ஏற்ற பேச்சு. அந்த வீடியோவை மட்டுமே வைத்து தேர்தல் ஆணையம் அவரை முழுத் தேர்தல் முடியும் வரையும் பரப்புரை செய்யக் கூடாது என்று தடை செய்ய இயலும். அந்த அளவுக்கு வன்மம் நிறைந்த பேச்சு அது. ஆனால் தேர்தல் ஆணையம் கிணற்றில் விழுந்த கல் போல அமைதியாக இருக்கிறது. 

பிரதமர் பதவியைத் தொடர்ந்து அசிங்கப்படுத்தி வரும் நரேந்திர மோடிக்கு வன்மையான கண்டனங்கள். மோடி எனது பிரதமர் என்பதற்காக நான் வெட்கப்படுகிறேன். 2014இல் அவரை ஆதரித்து எழுதியதற்காக அடிக்கடி வருத்தப்பட்டிருக்கிறேன். நேற்று அந்த ராஜஸ்தான் வீடியோவைப் பார்த்த போது இன்னும் வெட்கினேன்.

இந்த மதவெறிக்கும், வெறுப்புக்கும் 2024 ஒரு முடிவைக் கொண்டு வரும் என்று ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

பிழையான தகவல்கள்
- எழுத்தாளர் மாலன்

ராஜஸ்தானில் உள்ள பன்ஸ்வாராவில் மோடி ஆற்றிய உரை வியப்பளிக்கவில்லை. ஆனால் வருத்தமளிக்கிறது. அந்த உரை கண்டனத்திற்குரியது.

வியப்பளிக்கவில்லை என நான் சொல்லக் காரணம் பிரதமரோ, முதல்வரோ, பேரவைத் தலைவரோ அவர்கள் யாராயினும் அரசியல்வாதிகளே. அதுவும் தேர்தல் நேரத்தில் முழுக்க முழுக்க அரசியல்வாதிகளாகவே ஆகிவிடுவார்கள். அரசியல்வாதிகளின் நோக்கம் வாக்கு. வாக்கு மட்டுமே.
அந்தப் பேச்சை மக்கள் நம்பத் தொடங்கினால் அது மக்களிடையே பரஸ்பரம் நம்பிக்கையின்மையையும், ஐயத்தையும் ஏற்படுத்தும்; நல்லிணக்கத்தைப் பாதிக்கும். அது இந்தியா வளர்ச்சியை நோக்கி முன் செல்ல உதவாது என்பதால் கண்டனத்திற்குரியது. மதம், ஜாதி, மொழி, பிராந்தியம் என்ற எந்த அடிப்படையிலும் இந்திய சமூகத்தில் பிளவு ஏற்படுத்துகிறவர்கள், அவர்கள் யாராயினும் கண்டனத்திற்குரியவர்கள்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் எந்த இடத்திலும் தனியாரது செல்வம் கையகப்படுத்தப்பட்டு மறுவிநியோகம் செய்யப்படும் என்று சொல்லியிருக்கவில்லை. அது தகவல் பிழை. எனவே மகளிரது தங்கத்தைப் பற்றிய கருத்து, மன்மோகன் சிங் கூறியதைப் பற்றிய கருத்து இரண்டும் தேவையற்றது. பிழையானது.

2001க்கும் 2011க்கும் இடைப்பட்ட காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் மக்கள்தொகைப் பெருக்கத்தின் வளர்ச்சி விகிதம் அதே காலகட்டத்தில் இந்து சமூகம் கண்டிருக்கும் வளர்ச்சி விகிதத்தை விடக் குறைவு. இந்தக் காலகட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் வளர்ச்சி விகிதம் 4.7 சதவீதப் புள்ளிகள் குறைந்தது. இந்து சமூகத்தின் வளர்ச்சி 3.1 சதவீதப் புள்ளிகள் குறைந்தது.


மனுஷ்ய புத்திரன் கவிதை

வேந்தரே
அதற்குள் பயந்துவிட்டீர்களா?
நீங்கள் பார்க்கவேண்டியது
இன்னும் நிறைய இருக்கிறது
நீங்கள் பயப்படவேண்டியது
இன்னும் நிறைய இருக்கிறது

பதற்றத்தில்
உங்கள் துருப்பிடித்த வாளை
மீண்டும் தூக்கிக்கொண்டு வருகிறீர்கள்
வாள்கூட அல்ல
துருப்பிடித்த பிளேடை
எடுத்துக்கொண்டு கரம் உயர்த்துகிறீர்கள்

வேந்தரே கேளுங்கள் இதை
இஸ்லாமியர்கள் அல்ல
கோடானு கோடி மக்களின்
பணத்தை இரவோடு இரவாக
எடுத்துக்கொண்டவர் நீங்கள்தான்

கறுப்புத் தங்கம் எனப்பட்ட
பெட்ரோலின் வழியே
மக்களின் மஞ்சள் தங்கத்தை
பறித்துக்கொண்டதும் நீங்கள்தான்

கணவர்கள் வேலை இழந்தபோது
மனைவிகளின் தாலிகள்
அடகுக் கடைக்குப்போனது
அம்மாக்களுக்கு வேலை கிட்டாதபோது
குழந்தைகளின் கொலுசுகள் விற்பனையானது

இஸ்லாமியர்கள்
எவருடைய சொத்துகளையும்
எடுத்துக்கொள்ளவில்லை
எவருடைய வீட்டையும்
எடுத்துக்கொள்ளவில்லை
நீங்கள் எடுத்துக்கொண்டீர்கள்
புல்டோசர்களின் வழியே
உங்கள் எதிரிகளின் வீட்டை

இஸ்லாமியர்கள்
ஊடுருவி இங்கு வரவில்லை
இலட்சக்கணக்கான இஸ்லாமியர்கள்
இங்கிருந்து வெளியேறி
பாலைவனங்களில் கண்ணீரால்
தங்கள் வாழ்வைப் பயிர்செய்கிறார்கள்

குழந்தைகளை அதிகம் பெற்றுக்கொண்டது
இஸ்லாமியர்கள் மட்டுமல்ல
மனிதக் கரங்களைத் தவிர
எந்தச் செல்வமும் இல்லாத
எல்லா மக்களும் பெற்றுக்கொண்டார்கள்
பிறகு குழந்தைகளை வளர்க்க முடியாதவர்கள்
குழந்தைகள் பெறுவதை
நிறுத்திக்கொண்டார்கள்

வேந்தரே
நீங்கள்தான் எல்லாவற்றையும்
பறித்துக்கொண்டீர்கள்
சமாதானத்தைப் பறித்துக்கொண்டீர்கள்
சகோதரத்துவத்தைப் பறித்துக்கொண்டீர்கள்
உரிமைகளைப் பறித்துக்கொண்டீர்கள்
வங்கிக் கணக்கின்
கடைசிப் பைசாவைப் பறித்துக்கொண்டீர்கள்

இஸ்லாமியர்கள்
எதையும் எடுத்துக்கொள்ளவில்லை
யாரும் அவர்களுக்கு
எதையும் தந்ததில்லை
அவர்கள் வானில் தோன்றிய
எந்தப் பிறையும் முழு நிலவாக
வளரவேயில்லை

வேந்தரே
அந்தத் துருப்பிடித்த பிளேடை
உங்கள் நாவுக்கடியில்
எப்போதும் மறைத்து வைத்திருக்கிறீர்கள்
பொய்களின் எச்சிலில் ஊறி ஊறி
அதன் துரு இன்னும் கனத்துவிட்டது
எளிய மக்களை நோக்கி
அந்த வன்மத்தின் கருவியை
கூச்சமின்றி உயர்த்துகிறீர்கள்

வேந்தரே
இன்னும் பேசுங்கள்
நீங்கள் எவ்வளவு சிறிய மனிதர் என்பதை
உலகிற்குக் காட்டுங்கள்
நீங்கள் எவ்வளவு பயப்படுகிறவர் என்பதை
எல்லோருக்கும் காட்டுங்கள்


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தலையங்கம்

மேலும் தேடல்