மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

கம்யூனிஸ சீனாவில் இஸ்லாமிய அனுபவங்கள் ஷேக் இப்ராஹீம் நூருத்தீன் மா
அபூசுஹைல், 16-31 - July - 2019


சீனாவைச் சார்ந்த இஸ்லாமிய அழைப்பாளர்தாம் ஷேக் இப்ராஹீம் நூருத்தீன்
மா. பொறியியல் பட்டதாரியான இவர், பீஜிங் அயல்மொழிகள் கற்றல்
பல்கலைக்கழகத்திலிருந்து அரபி மொழியிலும் பட்டம் பெற்றுள்ளார். ஈரானிலும்,
பாகிஸ்தானிலும் இஸ்லாமியக் கல்வியைப் பயின்ற இப்ராஹீம் மா, இப்போது கனடா
குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறார். குவைத், ஐக்கிய அரபு அமீரகம்,
வடஅமெரிக்கா முதலிய பல நாடுகளிலும் வாழும் சீன வம்சத்தினரிடையே அழைப்புப்
பணி ஆற்றி வருகிறார். அவர் "பிரபோதனம்' மலையாள வார இதழுக்கு அளித்த
நேர்காணல் சமரசம் வாசகர்களுக்காக...

 

கம்யூனிஸ சீனாவிலிருந்து, பொறியியல் பட்டதாரியான நீங்கள் இஸ்லாமிய அழைப்பாளராக மாறியது எப்படி? மத்திய சீனாவில் மக்கள்தொகை அதிகமுள்ள ஹெனன் மாகாணத்தில் நான் பிறந்தேன். டாங்க் ஆட்சிக்காலத்திலேயே முஸ்லிம்கள் வாழுகின்ற மாகாணம் இது. பிறகு ஸங் ஆட்சிக்காலத்தில் இங்குள்ள முஸ்லிம் மக்கள்தொகையில் வளர்ச்சி ஏற்பட்டது. இங்குள்ள ஒரு பாரம்பரிய முஸ்லிம் குடும்பத்தில் நான் பிறந்தேன். எனது பெயரிலுள்ள "மா' என்பது எனது குடும்பப் பெயராகும். எனது தந்தை நூருத்தீன் பள்ளிவாசலில் இமாமாக இருந்தார். எனது தாத்தா இஸ்லாமியக் கல்விஞானத்தில் நல்ல தேர்ச்சி பெற்றவராக இருந்தார் என என் தந்தை கூறியதுண்டு. ஹெனன் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திலிருந்து 1983 இல் நான் பொறியியல் பட்டம் பெற்றேன்.

இரயில் என்ஜின் தயா ரிப்புதான் எனது துறை. ஆனால், ஒருநõள்கூட அத்துறையில் நான் பணியாற்றவில்லை. அப்போதுதான் இஸ்லாமிய அறிஞர் ஒருவரைச் சந்தித்தேன். அவரது அறிவுரைப்படி, இஸ்லாம் பற்றி படிக்க சில மாதங் களை பள்ளிவாசலில் செலவிட் டேன். பிறகு, பீஜிங் அயல்மொழிகள் கற்றல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து அரபி மொழியைக் கற்றேன். அத்துடன் இஸ்லாமிய விவகாரங்கள் தொடர்பான பல நூல்களையும் வாசித்தேன். சையத் அபுல் அஃலா மௌதூதியின் சில நூல்களையும் நான் வாசித்துள்ளேன். அவை இஸ்லாத்தின் அடிப்படைகளை விளக்கும் நூல்களாகும். சீனாவில் கல்வியறிவும், வாசிக்கும் ஆர்வமும் கொண்ட முஸ்லிம்களுக்கிடையே மௌதூதி நன்கு அறிமுகமானவர். 1300 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட இஸ்லாமியப் பாரம்பர்யம் வாய்ந்த சீனõவில், உன்னதமான கல்லூரிகள் உள்பட நல்ல இஸ்லாமியக் கல்வி நிறுவனங்கள் எதுவும் இல்லை.

பள்ளிவாசல்கள்தாம் மதரசாக்கள் போல மார்க்கக் கல்விக்கு பயன்படுத்தப்பட்டிருந்தன. அயல்மொழிகள் கற்றல் பல்கலைக்கழகத்திலிருந்து படிப்பை நிறைவு செய்த பிறகு, எனது கவனம் ஓர் இஸ்லாமியக் கல்வி நிறுவனத்தைத் தொடங்குவதில் குவிந்திருந்தது. அப்படித்தான் பீஜிங்கில் அரபிக் அன்ட் இஸ்லாமிக் ஸ்டடீஸ் ஸ்கூலை 1987இல் தொடங்கினேன். 1987 ரம ளான் முதல் நாளன்று இதன் திறப்பு விழா நடைபெற்றது. 48 நாடுகளைச் சார்ந்த பிரதிநிதிகள் தொடக்க விழாவுக்கு வந்திருந்தனர். பீஜிங்கில் செயல்படுகின்ற பல்வேறு நாடுகளின் தூதரகங்களுடன் நல்ல உறவை ஏற்படுத்த நான் முயன்றேன். எல்லா ö வ ள் ளி க் கி ழ ø ம ய ன் று ம் தூதரகங்களுக்குச் செல்வேன். இதனால்தான் இந்த அளவுக்கு தூதர்கள் தொடக்க விழாவுக்கு வருகை தந்தனர். தூதர்களும் அதிகாரி களும் விருந்தினர்களாக வந் திருந்தனர்.

* குழந்தைப் பருவத்தில் உங்களுக்கு மார்க்கக் கல்வியைப் பயில்வதற்கான வாய்ப்பு கள் இருந்தனவா? மாவோ சே துங்கின் காலத்தில்தான் நான் பிறந்து வளர்ந்தேன். இஸ்லாம் உள்பட எல்லா மதங்களும், மதச்சுதந்திரமும் தடை செய் யப்பட்ட நாள்களாகத்தான் அவரது ஆட்சிக் காலம் இருந்தது. கிறித்துவபுத்தஇஸ்லாம் மதங் கள் ஒடுக்கப்பட்டன. மத நிறுவனங்கள் தகர்க் கப்படவில்லை. ஆனால் இழுத்து மூடப்பட்டன. அருங்காட்சியகங்களாக அவை மாற்றப் பட்டன. சில பள்ளிவாசல்கள் பன்றி வளர்ப்பு மையங்களாகவும் இருந்தனவாம். மதக் கல்விக்கு அனுமதி இல்லாததால் அக்காலத்தில் இஸ்லாமியக் கல்விக்கூடங்கள் எதுவும் இருக்கவில்லை. குழந் தைகளுக்கு கம்யூனிசம் கற்றுக் கொடுக்கப்பட்டது.

மத நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் துடைத்தெறியவே சீனா முற்பட்டது. இது இஸ் லாத்துக்கு மட்டுமல்ல, எல்லா மதங்களுக்கும் இந்த நிலைதான். கம்யூனிஸக் கண்ணோட்டத்தில், மதத்தையும் மனிதர்களையும் இறைவன் படைக்கவில்லை. மனிதன்தான் மதங்களையும் தெய்வங்களையும் படைத்தான் என்பதாகும். மதம் ஒரு ஹெராயின் அதாவது போதைப் பொருளாகும். மதங்களிலிருந்து மனிதர்களை விடுவிக்க வேண்டும். இந்தக் கம்யூனிஸக் கோட்பாட்டைத்தான் பொதுவாக சீன அரசு கடைப்பிடிக்கின்றது.

 

மாவோ சேதுங்கின் ஆட்சிக்காலத்தில்தான் மதவெறுப்பு அதிகமாக வலுவடைந்தது. 1949இல் மாவோ சேதுங் சீன அரசில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது முதல் 1976இல் அவரது மறைவு வரையுள்ள காலம் மதங்களைப் பொறுத்தவரை இருள் சூழ்ந்ததாகவும், கடினமானதாகவும் இருந்தது. அன்று இழுத்து மூடப்பட்ட வழிபாட்டுத்தலங்களும் கொல்லப் பட்டவர்களும் ஏராளம். இந்த வரலாறு எல்லோராலும் அறியப்பட்டதும், எழுதப்பட்டதுமாகும். 1976இல் மாவோ இறந்தார். மாவோவுக்கு முன்பும் பின்பும் சீனாவில் மதச் சுதந்திரத்தின் நிலை வேறுபட்டதாகும். அவரது காலத்துக்குப் பிறகு இருண்ட நாள்கள் மாறி வந்தன. பள்ளி வாசல்கள் திறக்கப்பட்டன. அங்கு வழிபாடுகள் நடைபெற்றன. மதக் கல்வி புகட்டப்பட்டது. இவை யாவும் குறைந்த அளவில் நடைபெற்றவை ஆகும். 1980களில் மதச் சுதந்திரம் கொள்கை அளவில் மறுசீரமைப்பு செய்யப்பட்டது என்றாலும், சீனாவின் அதிகாரபூர்வ "மதம்' கம்யூனிசம்தான். அதன் கீழ் நிற்கும் அளவுக்கு மதச்சுதந்திரம் அனுமதிக்கப்பட்டது. பள்ளிவாசல்களும், வழிபாடுகளும், பாரம்பர்யங்களும் சடங்குகளாக நீடிக்கலாம். அதற்கு அப்பாற்பட்ட சமூகத் தலையீடுகள் எதை யும் மதங்கள் மேற்கொள்ளக் கூடாது. 1949க்கு முன்னர் சீனாவில் ஜனநாயகம் இருந்தது.

மதச் சுதந்திரம் இருந்தது. எல்லா மதங் களும் பின்பற்றப்பட்டு, பரப்புரை செய்யப்பட்டு வந்தன. அதற்கு முக்கியத் தடைகள் எதுவும் இருக்கவில்லை. அதுமட்டுமல்ல, 1949க்கு முன்பு சீனாவின் பாதுகாப்புத் துறை அமைச்சராக முஸ்லிம் ஒருவர் இருந்தார். சீனக் குடியரசின் முதல் பாதுகாப்புத் துறை அமைச்சர் முஸ்லிமான பைதுங் ஷி (ஆச்டிஞிடணிணஞ்துடி), தலைசிறந்த ஆளுமையாகவும் மிகச் சிறந்த அரசியல் விற்பன்னராகவும் இருந்தார். 194648 காலத்தில்தான் அவர் அமைச்சராக இருந் தார். சைனிஸ் இஸ்லாமிக் சால்வேஷன் ஃபெட ரேஷன், சைனிஸ் முஸ்லிம் அசோசியேஷன் ஆகிய வற்றின் தலைவராக இருந்த அவர், உள் நாட்டுப் பிரச்னைகளால் தைவானுக்குச் சென்று 1966இல் அங்கு இறந்தார். தாய்பே கிரான்ட் மஸ்ஜிதின் கட்டுமானத்தில் இவர் மிக முக்கியப் பங்காற்றினார். முஸ்லிம்கள் மீது மென்மையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் தைவான் அரசு, பைதுங் ஷியின் இறப்புக்குப் பிறகும் நல்லாதரவு தருகிறது. தாய்பே கிரான்ட் மஸ்ஜிதில் சில மாதங்கள் இமாமாகப் பணிபுரிய எனக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஓரிடத்தில் முடங்கி பணி செய்ய என்னால் இயலாததால், அத்தகைய பணிகளைத் தவிர்த்து விட்டேன். முழு நேர அழைப்பாளராக பல நாடுகளுக்குச் சுற்றித் திரியும் இயல்புதான் என்னுடையது.

* ஒருபுறம் சீனா மூடப்பட்ட நாடாகும்; வெளிநாட்டு மொழி, மதச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம் ஆகிய விவகாரங்களில். மறுபுறம் சீனா மிக அதிகமாகத் திறந்த நாடாகும். உற்பத்தியிலும் வியாபாரத்திலும் உலகச் சந்தையிலும். பல நாடுகளில் உள்ள கிராமங்களைக்கூட சீனா விற்பனைச் சந்தை யாக ஆக்கியுள்ளது. இது எப்படி? இதுதான் சீனா. பொருளியல் துறையில் வளர்ச்சிக்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளும் வசதிகளும் சட்ட ரீதியான சுதந்திரமும் அங்கு உள்ளது. சீனாவில் எந்த மதத்தைச் சார்ந்தவரும் வணிகம் செய்து வளரலாம். பணம் சம்பாதிக்கலாம். சீன முஸ்லிம்களுக்கும் எந்தத் தடையும் இல்லை. வணிகத் துறையில் ஏராளமான முஸ்லிம்களைக் காண முடியும். வெளிநாடுகளிலிருந்து வணிகம் செய்ய வருகின்ற எந்த மதத்தைச் சார்ந்தவருக்கும் சட்ட ரீதியான சுதந்திரமும் வாய்ப்புகளும் இங்கு உள்ளன. இது சீனாவின் பொருளியல் வளர்ச்சி, நாட்டு முன்னேற்றத்தின் விவகாரமாகும். ஆனால், மதமும் நம்பிக்கையும் வேறொரு விவகாரமாகும்.

இரண்டையும் அவர்கள் கூடிக் குழைப்பதில்லை. மதநம்பிக்கையைக் கடைப்பிடிப்பவர்கள் ஆட்சி அதிகாரப் பதவிகளை அடையவோ, அதிகாரத்தில் தாக்கம் செலுத்தவோ இயலாது. அரசு அதனை அனுமதிப்பதில்லை. மதத்தைப் பின் பற்றி வாழ அனுமதி அளிப்பதோடு, கம்யூனி சத்தை ஏற்றுக்கொள்ளும்படி வலியுறுத்திக் கொண்டே யிருக்கும். அதன்படி கம்யூனிஸ்ட்டானால் அதிகார பூர்வ துறையில் வளரலாம். அதிகாரத்தை அடை யலாம். ஒரு மதநம்பிக்கையாளரõக இருந்தால், ஒரு பள்ளிக்கூடத்தின் முதல்வராகக்கூட சீனாவில் ஆக இயலாது. இதன் மற்றொரு முகத்தைத்தான் உய்கூர் முஸ்லிம்கள் அனுபவித்து வருகின்றனர்.

*  வெளிநாட்டுப்  பயணங்களையும் அழைப்பியல் பணிகளையும் எப்படி வளர்த்துக் கொண்டீர்கள்? இஸ்லாமிய விவகாரங்களில் உயர்கல்வி கற்க வேண்டும் என்பதே என் ஆவல். இதற்கான முதல் வாய்ப்பு எனக்கு ஈரானில்தான் கிடைத்தது. பள்ளிக்கூடப் பணிகளைத் தொடங்கிய பிறகு, ஈரான் தூதரகத்தின் தூதரும் அதிகாரிகளும் தொடர்ந்து என்னைத் தொடர்பு கொண்டு வந்தனர். பல நேரங்களில் அவர்கள் பள்ளிக்கூடத்துக்கு வரு வார்கள். ஈரானில் மேற்கல்வி பயில அவர்கள் என்னை உற்சாகமூட்டிக் கொண்டேயிருந்தனர். எனக்கு இமாம் குமைனி மீது நல்ல மரியாதை இருந்தது. கத்தாஃபியும் குமைனியும் அன்று எனது நாயகர்கள். இளைஞனாக இருந்த என்னை ஈரானில் நிகழ்ந்த இஸ்லாமியப் புரட்சியும் வெகுவாக ஈர்த்திருந்தது. அவர்கள் வலிமையானவர்கள். அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக எழுந்து நின்றவர்கள். குமைனி எழுப்பிய முத்திரை முழக்க மான "லா ஷர்கிய்யா, வலா கர்பிய்யா, இஸ்லாமிய்யா, இஸ்லாமிய்யா' (கிழக்கு, மேற்கு என்கிற பாகுபாடில்லை. இஸ்லாம் இஸ்லாம் மட்டுமே) எனும் முழக்கம் எனக்கு உற்சாகமூட்டியது. அதற்கப்பால் ஈரான் பற்றியோ ஷியாயிஸம் பற்றியோ அதிகம் எதுவும் தெரியாது. இவ்வாறு நான் ஈரானுக்குச் சென்றேன்.

மஷ்ஹதில் உள்ள பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடங்கியபோதுதான் ஷியா கொள்கை பற்றி அறிந்து கொண்டேன். அதனுடன் பொருந்திப் போக என்னால் இயல வில்லை. நான் பேராசிரியர்களிடமும் பல்கலைக்கழக அதிகாரிகளிடமும் கேள்விகளை எழுப் பினேன். அவர்கள் என்னை உயர்தரமுள்ள கும் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கும் நான் கேள்விகளை முன்வைத்தேன். வாக்குவாதங் களில் ஈடுபட்டேன். அவர்கள் அளித்த பதில்கள் எனக்கு மனநிறைவைத் தரவில்லை. அவர்கள் என்னிடம் ஷியா வழிமுறையில் இணைந்து கொள்ள வலியுறுத்தினர். சீனாவில் ஷியா கொள்கை பரப்புரையாளராக என்னை நியமிக்க அவர்கள் திட்டமிட்டிருந்தனர். நான் அதற்குத் தயாராக இல்லை. முஸ்லிம்களிடையே ஒரு பிரிவில் சேர எனக்கு விருப்பமில்லை. ஸன்னிஷியா மோதலில் நான் இல்லை. நீங்கள் எந்த மத்ஹபைச் சேர்ந்தவராக இருந்தாலும் அது எனக்குப் பிரச்னை அல்ல. நான் ஸன்னி, நான் ஷியா எனக் கூறுவதிலும் அர்த்தம் இல்லை.

நாம் அதனை வேறுபடுத்திக் கூறக் கூடாது என்பதே எனது கருத்து. இறைத்தூதர்களின் அழைப்பில் மொழியிலும் சில அணுகுமுறைகளிலும் வேறுபாடுகள் இருந்தாலும், இஸ்லாமாகவே இருந்தது. இஸ்லாம் என்கிற ஒரே தலைப்பு. முஹம்மத் நபிக்குப் பிறகு பல சிந்தனைப் பிரிவுகள் முஸ்லிம்களிடையே தோன்றின. அவை பல பெயர்களில் அறியப்படுகின்றன. ஆனால், இஸ்லாம் என்ற ஒரே பெயரில்தான் நாம் ஒருங் கிணைக்கப்பட வேண்டும்.

* ஈரானில் படிப்பை முடித்த பிறகு முன்னேறியது எப்படி? ஈரானில் படிக்கத் தொடங்கிய பிறகு சீன அரசு என்னைக் கண்காணிக்கத் தொடங்கியது. ஈரானி லிருந்து நான் சீனாவுக்குத் திரும்பி வந்தால் பிறகு எனது வெளிநாட்டுப் பயணம் தடைபடும் என்கிற கவலை எனக்கு ஏற்பட்டது. அதனால் ஈரானிலிருந்து பாகிஸ்தானுக்குச் செல்ல நான் முடிவு செய்தேன். பீஜிங்கில் இருந்தபோது முஸ்லிம் தூதர்களோடு எனக்கு ஏற்பட்ட நல்லுறவு எனக்குப் பயன்பட்டது. பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் பலருக்கு நான் அறிமுகமானவனாக இருந்தேன்.

ஈரானிலிருந்து பாகிஸ்தானுக்குச் செல்வது எளிதாக இருந்தது. பெஷாவர், கராச்சி, இஸ்லாமாபாத் ஆகிய இடங்களுக்குச் சென்றேன். இஸ்லாமாபாத்தில் உள்ள இன்டர்நேஷனல் இஸ்லாமிக் யுனிவர்சிட்டி அதிகா ரியாக இருந்த டாக்டர் ஹஸன் ஹாமித் ஹுஸைனுடன் நல்லுறவு கொண்டிருந்தேன். 1986இல் பீஜிங்கில் ராபிதத்துல் ஆலமில் இஸ்லாமி நடத்திய அழைப்பியல் மாநாட்டின்போது அவரது அறிமுகம் ஏற்பட்டது. டாக்டர் ஹாமித் ஹுஸைன் அதில் உரையாற்றினார். அவர் எனக்கு பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்பளித்தார். 1987 முதல் 1991 வரை நான்காண்டுகள் அங்கு பயின்று, பி.ஏ. உஸூலுத்தீன் படிப்பை நிறைவு செய்தேன். * குவைத்தை மையப்படுத்தியும் இதர அழைப்புப் பணிகளையும் பற்றி... பாகிஸ்தானிலிருந்து நான் குவைத்துக்குச் சென்றேன். அழைப்புப் பணிகளுக்கு தலைமை தாங்கும் குவைத் இஸ்லாமிக் சென்டரைத் தொடர்பு கொண்டேன்.

அங்கு நான் அழைப்பாளராக நியமிக்கப்பட்டேன். 12 ஆண்டுகள் அங்கு நான் மார்க்கச் சேவை புரிந்தேன். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களிடையே அழைப்புப் பணி ஆற்ற அந்தந்த நாட்டு அழைப்பாளர்களை நியமிப்பது குவைத்தின் வழக்கம். பிறகு நான் ஷார்ஜா வந்தேன். அங்கும் இதே துறையில் சில காலம் பணியாற்றினேன். கலிமா இஸ்லாமிக் சென்டர் என்கிற அமைப்பின் கீழ் இப்போது எனது அழைப்புப் பணிகள் நடந்து வருகின்றன. அழைப்பு மற்றும் புதிய முஸ்லிம் களின் மார்க்கக் கல்விக்கான அமைப்பு இது. சீனர்களை மையப்படுத்தியே அழைப்புப் பணி செய்து வருகிறேன். அரபு முஸ்லிம் நாடுகளிலும் இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் ஏராளமான சீனர்கள் உள்ளனர். இவர்களுக்கிடையே நடைபெறும் அழைப்புப் பணி மிகுந்த பயனைத் தரு கிறது. பல நாடுகளில் சீன முஸ்லிம்கள் அங்கம் வகிக்கின்ற அமைப்புகளுக்கும் தலைமை தாங்குகிறது. தாராள மனம் படைத்தவர்களின் ஆதரவுடன் பல இஸ்லாமிக் சென்டர்களையும் கல்விக்கூடங் களையும் நிறுவியுள்ளோம். அதிகாரபூர்வமாகப் பணியாற்றத் தக்க குவைத், ஷார்ஜா அரசுகளின் அவ்காஃப் அமைச்சரவையின் அழைப்பியல் சான்றிதழ்கள் எனக்கு உள்ளன.

2005இல் நான் கனடா சென்றேன். 2010இல் எனக்கு கனடா நாட்டு குடியுரிமை கிடைத்தது. இப்போது எனது குடும்பத்தாருடன் கனடாவில் வசிக்கிறேன். ஏழாண்டுகளாக அமெரிக்க அரசின் கறுப்புப் பட்டியலில் இடம் பெற்றிருந்தேன். அழைப் பியல் பணிகள் தொடர்பான ஐயங்களே இதற்குக் காரணம். அதுமட்டுமல்ல, நான் ஒரு சைனாக்காரன் அல்லவா. குவைத்திலிருந்து சிகாகோ நகரத்துக்குச் செல்லும்போதுதான் அவர்கள் என்னைத் தடுத்தனர். "சீன முஸ்லிம், குவைத்திலிருந்து வருகிறார், சிகாகோவுக்கு' இதுதான் அவர்களின் சந்தேகம். அவர்கள் என்னை கறுப்புப் பட்டியலில் உட்படுத்தினர். ஏழாண்டுகளுக்குப் பிறகு கறுப்புப் பட்டியலிலிருந்து என்னை நீக்கினர். ஸாரி என்றனர்.

* எதற்காக இப்படி நடந்தது? "எதற்காக' என்ற கேள்வி அமெரிக்கப் புல னாய்வு அதிகாரிகளிடம் இல்லை. அதுதான் அவர்களின் கொள்கை. அந்த ஏழாண்டு கால அளவில் அமெரிக்காவுக்கு நான் பயணம் செய்துள்ளேன். ஆனால், கடுமையான சோதனைகள் நடத்தப்பட்டன. எனது போர்டிங் பாசில் குறிப்பிட்ட முத்திரை இடப்படும். நீண்ட நேரத்தை எடுத்துக் கொண்டு பல சோதனைகளை நடத்துவர். உடல், சாமான்கள், ஆவணங்கள் ஆகிய அனைத்தையும் ஆய்வு செய்வர். அதற்குப் பிறகே அனுமதி வழங்குவர். * தங்களின் குடும்பம் பற்றி... எனது மனைவி நூர் இஸ்லாத்தைத் தழுவிய சீனப்பெண். குவைத் எண்ணெய் நிறுவனத்தில் பணியாற்றினார். இப்போது கனடாவில் உள்ளார். எனக்கு மூன்று பிள்ளைகள். அமீனா, ஹதியா, ஹிதாயா. அமீனா முதுகலைப் பட்டம் பெற்றுள்ளாள். இப்போது வேலையில் உள்ளாள். பிள்ளைகள் இருவரும் படித்துக் கொண்டிருக்கின்றனர்.

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர நேர்காணல்

மேலும் தேடல்