மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

பொறுமையும் விவேகமும் இன்றைய காலத்தின் தேவை மௌலானா இஜாஸ் அஹ்மது அஸ்லம்
வி.எஸ்.முஹம்மத் அமீன், 01-15 - March - 2019


உங்களுக்கும்  ஜமாஅத்தே  இஸ்லாமி இயக்கத்திற்குமான அறிமுகம் எப்படி ஏற்பட்டது? இஸ்லாமிய இயக்கம் உங்களை ஈர்த்தது எப்படி ? நான்  பிறந்தது  பெங்களூரில், பி ற கு சென்னைக்கு குடிபெயர்ந்தேன். சென்னையில் 1950 ஆம் ஆண்டு முதல் 1954 வரை இருந்தோம். பிறகு சென்னையிலிருந்து பீகார் மாநிலத்திற்கு எனது பெற் றோர்களுடன் குடிபெயர்ந்தேன். 1958 ஆம் ஆண்டு வாக்கில் பீகாரில் இருந்தபோது எனது 14 ஆம் வயதில் வாசிப்பில் ஆர்வம் ஏற்பட்டிருந்த தருணத்தில்தான் மௌலானா அபுல் அஃலா மௌதூதி அவர்களின் குத்பா பேருரையின் மூன்றாம் பகுதியை நான் படிக்க நேர்ந்தது. அந்த புத்தகத்தின் மீது எனக்கு மிகுந்த ஈர்ப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மௌலானா மௌதூதி அவர்களின் ஆக்கங்களைத் தேடிப் படித்த தன் விளைவாக அவரை அறிந்திடவும், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இயக்கத்தைப் பற்றியும் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. நீங்கள் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இயக்கத்திற்குள் வந்த பின் தொடக்கத்திலிருந்து நீங்கள் வகித்த பொறுப்புகள் குறித்து?

1959 ஆம் ஆண்டு எனது M.A.பட்டப்படிப்பு முடிவடைந்ததுடன் தமிழகம் திரும்பினேன். மேல்விஷாரத்தில் உள்ள சி.அப்துல் ஹக்கீம் கல்லூரி யில் மேல்படிப்பிற்காகச் சேர்ந்தேன். இங்கு நான் இரண்டு ஆண்டுகள் இருந்தேன். இந்த காலகட்டத்தில் முதல் நாள் தொட்டே ஜமாஅத்தே இஸ் லாமி ஹிந்தின் செயல்பாட்டாளராக இருந்தேன். எல்லாப்புகழும் இறைவனுக்கே! அதன்பின் 1970 ஆம் ஆண்டு எனது 28 ஆம் வயதில் நான் ஜமாஅத்தின் உறுப்பினரானேன். எனக்கு 1971 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அந்த நேரத்தில் நான் வாணியம்பாடி கிளை யின் தலைவரானேன். அதனைத் தொடர்ந்து, வட ஆற்காடு மாவட்டத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டேன். 1975 ஆம் ஆண்டில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டிருந்த காலத்தில் நானும் கைது செய்யப்பட்டு 19 மாதங்களைச் சென்னை மத்திய சிறையில் கழிக்க நேர்ந்தது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மௌலானா அப்துல் அஜீஸ் அவர்கள் அப் போதைய தமிழகத் தலைவராக இருந்தார். அவருடன் நான், மௌலானா ஜமீல் அஹமது, அப்போதைய அலுவலகச் செயலாளராக இருந்து தற்போது வாணி யம்பõடியில் வசிக்கும் அதீக், வணிகராக இருந்த இப்ராஹிம் ஆகியோர் உட்பட ஜமாஅத்தின் எட்டு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டோம். இதில் மௌலானா அப்துல் அஜீஸ் சாஹிப் மூன்று அல்லது ஆறு மாதங்களுக்குப் பின் ஆந்திர மாநிலத்திற்குத் தன்னை மாற்றிக்கொண்டார்.

சிறையில் இருந்த காலகட்டத்தில் எங்களுக்குள் குடும்ப உறுப்பினர்கள் போன்ற பிணைப்பு ஏற்பட்டது. ஆறு மாதத்திற்குப் பின் என்னையும் மௌ லானா ஜமீல் அஹமது சாஹிப் அவர்களையும் தவிர மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். நானும் ஜமீல் அஹமது சாஹிப் அவர்களும் அவசர நிலை விலக்கிக்கொள்ளப்பட்ட 1977 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை சிறையில் இருந்தோம். பின்னர் 1977ஆம் ஆண்டு நான் தமிழகத் தலைவராக பொறுப்பேற்றேன். 1977 முதல் 1990 வரை 13 ஆண்டுகள் தமிழகத் தலைவராக இருந்தேன். நீங்கள் ஜமாஅத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டபொழுது தமிழகச் சூழல் எவ்வாறு இருந்தது? ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இயக்கம் உருது மக்களுக்கான இயக்கம், என்ற முத்திரை, ஆலிம்களின் கடும் எதிர்ப்பு போன்ற தொடக்க காலத் தடைகளை மீறி ஜமாஅத்தை மக்களிடம் எவ்வாறு கொண்டு சென்றீர்கள்? உருதுபேசும் மக்களிடம் ஜமாஅத் குறித்த புரிதல் அதிகம் இருந்ததற்கு பெரும்பான்மையான அதன் இலக்கியங்கள் உருது மொழியிலே இருந்தது ஒரு காரணம். தென்னிந்தியா அதிலும் குறிப்பாக தமிழகம் தவிர இந்தியாவின் அனைத்து முஸ்லிம் மக்களிடமும் ஜமாஅத் குறித்தும் அதன் குறிக்கோள் குறித்துமான ஆழமான புரிதல் இருந்தது.

அதனோடு தமிழகத்தை ஒப்பீடு செய்தால் தமிழ் மொழி தமிழக மாநிலத்தில் மட்டுமே தாக்கம் பெற்றிருந்தது. அதிலும் முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் ஆறு சதவிகிதமாக இருந்ததால் அவர்களுக்கு ஜமாஅத் குறித்து போதிய தகவல்களும் இலக்கியங்களும் தமிழ் மொழியில் புழக்கத் தில் இல்லாமல் இருந்தன. அந்தக் காலகட்டம் மட்டுமல்லாது வெகு சில ஆண்டுகளாக ஜமாஅத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 30 முதல் 40 என்றே இருந்தது. வடஇந்தியாவைக் காட்டிலும் ஆலிம்களின் எதிர்ப்பு இங்கு குறைவாகவே இருந்தது. இருந்தும் ஜமாஅத்தே இஸ்லாமி தொடர்ந்து பரவலாக வளர்ச்சி யடைந்து வந்துள்ளது. மக்களும் ஜமாஅத்தை புரிந்துகொள்ள முற்பட்ட அதே வேளையில் அர்ப் பணிப்புடன் செயலாற்றிய உறுப்பினர்களாலும் ஈர்ப்புமிக்க நமது இலக்கியங்களாலும் அவர்கள் ஜமாஅத்தின்பால் ஈர்க்கப்பட்டனர். குறிப்பாக ஜமாஅத்தின் இலக்கியங்கள் முன்னிறுத்தும் கருத்துப் பூர்வமான வாதங்களையும், அதன் கருத்துகளை யார் மீதும் திணிக்காத, தேவையற்ற தர்க்கங்களில் ஈடுபாத அடிப்படை அம்சங்களும் அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்தன.

குறிப்பாக ""இதுதான் இஸ்லாம்'' நூல் இஸ்லாமிய மார்க்கத்தைக் குறித்த தெளிவான விளக்கத்தை வழங்கியது. அதோடல்லாமல், வாசிப்பவருக்கு எழும் கேள்விகளுக்கும் பதிலளிப் பதாக அந்நூல் அமைந்திருப்பது அதன் தனிச் சிறப்பு. நெடுங்காலமாக, அதாவது 1990இல் நான் தமிழகத் தலைவராக இருந்த வரையில் தமிழில் 40 முதல் 50 புத்தகங்களே இருந்தன. நாங்கள் மேற்கொண்ட இந்த ஆரம்பகட்ட பணிகளின் தொடர்ச்சியாக ஜனாப். அப்துர் ரகீப் சாஹிப் அவர்கள் தமிழகத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு இஸ்லாமிய நிறுவனம் வளர்ச்சியடைந்து.

தற்போது இந்நிறுவனம் 350 வரை புத்தகங்களை பதித்துள்ளது அதனோடு சமரசம் இதழின் விற்பனையும் ஏறக்குறைய மும்மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது. அதன்பின்னர் 1999 ஆம் ஆண்டு மானுட வசந்தம் தொலைக்காட்சித் தொடரும் தொடங்கப்பட்டது. அவசர நிலையின் போது நீங்கள் சிறை யில் கழித்த 19 மாதங்களின் அனுபவம் எவ்வாறு இருந்தது? அரசு எங்களைத் தவறுதலாக கைது செய்துள்ளது என்றும் ஓரிரு மாதங்களில் நாங்கள் விடுதலை செய்யப்படுவோம் என்றும் நினைத்தோம். அதன் பின்னர் நாள்கள் செல்லச்செல்ல அனைவரும் குறிப் பாக நான் மிகவும் ஏமாற்றத்திற்குள்ளானேன். நான் கைது செய்யப்பட்டபோது எனது மனைவி எனது மூன்றõவது மகளை கருவுற்றிருந்தார்.

அந்த சிறு தயக்கத்தைத் தவிர இறைவனின் மார்க்கத்திற்காக கைது செய்யப்படுவதில் மிகவும் மகிழ்வடைந்தேன். மௌ லானா மௌதூதி, சையத் குதுப் போன்ற அறிஞர்களின் தியாகத்தை இந்தத் தருணத்தில் நான் நினைவில் நிறுத் திக்கொண்டதுடன் என்னளவிலும் இந்த தியாகத்தை மேற்கொள்ள முடிந்ததை எண்ணி இன்புற்றேன். தடை செய்யப்பட்ட பின்னர் ஜமாஅத்தை எவ்வாறு அன்றைய அரசு அங்கீகரித்தது? இஸ்லாம் எல்லாக் காலகட்டத்திலும் பரவலாக அனைவரிடத்திலும் சென்றடையக்கூடிய தன்மை யினைக் கொண்டது. இதனையே ஒரு உருதுக் கவிஞன் இவ்வாறு கூறினான், ""கடினமான காலத்தின் போது ஒருவரது மறைவான தன்மைகள் வெளிப்படும்'' என்று. இதற்கொப்பவே ஜமாஅத்தின் பணிகள் அதன் தடை செய்த காலம் தொட்டு மக்களிடையே வீரியத்துடனும் புத்துணர்வுடனும் ஜமாஅத்திற்கு அந்த காலகட்டத்தில் பொருளாதாரம், அடிப்படை கட்டுமானங்கள் உட்பட எந்தவித வளங்களும் இல்லாத சூழ லில் கூட ஜமாஅத் எவ்வாறு மிகுந்த அர்ப் பணிப்புடன் செயலாற்றியது? ஒரு உதாராணத்தைச் சொன்னால் நீங்கள் எளிமையாக விளங்கிக் கொள்ள முடியும். இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை ஐஊகூ தொடங் கப்பட்டதைத் தொடர்ந்து 1980 ஆம் ஆண்டு சமரசம் இதழும் தொடங்கப்பட்டது.

எனது மனைவியின் பாட்டி ஜைனப் பீ அவர்கள் அன்பளிப்பாக வழங்கிய ஐந்தாயிரம் ரூபா øயக் கொண்டு இப்பணிகள் தொடங்கப்பட்டதை நான் இன்றும் நினைவுகொள்கிறேன். அவசர நிலை விலக்கப்பட்ட பின் இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்டிற்கு ஒரு நண்பர் இருபதாயிரம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார். 1977இல் இருபதாயிரம் ரூபாய் என்பது மிகப்பெரிய தொகையாக இருந்தது. இந்தத் தொகை யினைக் கொண்டு நாங்கள் 12 புத்தகங்களை மறுபதிப்பு செய்ததோடு எங்களிடம் அப்போது இருப்பில் இருந்த புத்தங்கங்களையும் அனைத்துத் தரப்பினருக்கும் விநியோகம் செய்தோம். எங் களுக்கு இந்தத் தருணம் உற்சாகமூட்டுவதாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து இஸ்லாமிய நிறுவனமும் சமரசமும் வளர்ச்சியடையத் தொடங் கியது. இவ்வாறான தாக்கங்களைக் கண்ட சகோதரி ஒருவர் தனது தங்க நகையை ரேடியன்ஸ் ஆங்கில இதழுக்காகவும் அன்பளிப்பாக வழங்கினார்.

தமிழகத்தில் மட்டுமே இருபதுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவற்றிலிருந்து ஜமாஅத் எவ்வகையில் தனித்துவமாக இருக்கிறது? ஜனநாயகத் தன்மையுடைய மார்க்கத்தை அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ளான். அனைவருக்கும் அவரவர் கருத்துகளை வெளிப்படுத்திடவும் நடைமுறைப்படுத்திடவும் சுதந்திரத்தை அது வழங்குகிறது. ஜமாஅத்தே இஸ்லாமி மார்க்கத்தின் கிளைகளை முன்னிறுத்தும் அமைப்பல்ல, ஒட்டுமொத்த இஸ்லாமிய அடிப்படைகளை முன் வைக்கிறது. தொடக்கம் முதலே இஸ்லாத்தை ஒட்டு மொத்த மனித சமுதாயத்திற்குமான வாழ்வியலாக ஜமாஅத்தே இஸ்லாமி முன்னிறுத்தியதும் அதன் தனித்துவமாகும். அதனாலேயே ஜமாஅத்தின் செய்தியும் அதன் கொள்கைகளும் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்சொன்ன செய்தியுடன், மனித சமூகத்தின் ஒட்டுமொத்த நலனையும் முன்னிறுத்தியே ஜமாஅத் பணியாற்றி வருகிறது. மனிதர்களின் சிந்தனைப் போக்கு ஒரேமாதிரி இருப்பதில்லை. அது போலவே, இஸ்லாத்தின் ஏதாவது ஒரு பகுதி ஒருவருக்கு முக்கியமான ஒன்றாய்த் தெரியலாம், ஆனால் ஜமாஅத் முழுமையான இஸ்லாமியப் பார்வையில் செயலாற்றுகிறது. இத்தகைய தன்மையைக் கொண்டதாலேயே அனைவருடனும் நல்ல இணக்கத்துடனும், ஒத்துழைப்புடனும் செயலாற்றி வருகிறது. அவர்களை அரவணைப்பதோடு மட்டுமல்லாது அவர்களுக்கு உறுதுணையாக இருந்துவருகிறது. உதாரணமாக, தப்லீக் ஜமாஅத் குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றில் மிகக் குறுகிய புரிதலைக் கொண்டதாக இருந்தபோதிலும் அவர்களை நாம் எதிர்ப்பதில்லை. அவர்களது குறுகிய புரிதலைக் குறித்து நாம் அறிந்திருந்தாலும் அவர்களுடன் நல்லுறவைக் கடைப்பிடிக்கிறோம்.

இதன்மூலம் அவர்களது இஸ் லாமியப் பார்வையை அதிகப்படுத்தக்கூடிய தாக்கத்தை நம்மால் ஏற்படுத்திட முடியுமாயின் அதுவே நமது வெற்றியாகும். இதன்மூலம் இஸ்லாமிய மார்க்கமே லாபமடையும். அனைத்து முஸ்லிம் களையும் ஒரே சிந்தனையின் கீழ் கொண்டுவர யாராலும் முடியாது என்பதை நாம் உணரவேண்டும். வேறுபட்ட பார்வைகளும் செயல்பாடுகளும் எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கும். நமது இணக்கமான செயல்பாடுகளின் மூலமாகவே அவர்களது மனங்களை நாம் வெற்றிகொள்ள முடியும். அது நிகழாவிடினும், ஜமாஅத்தின் விசாலமõன பார்வை குறித்தும், அதன் ஊழியர்கள் தன்னலமற்றவர்களாக மட்டுமல்லாது இஸ்லாத்தின் உண்மையான பார்வையுடையவர்கள் என்பதையும், அடுத்தவர்களுக்கு உதவக்கூடியவர்கள் என்ற வகையிலும் அவர்கள் பார்க்கக்கூடும். ""எப்பணி நல்லதாகவும் இறையச்சத்திற்கு உரியதõகவும் உள்ளதோ அதில் எல்லோருடனும் ஒத்துழை யுங்கள்''என்று திருமறைக் குர்ஆன் (5:2) வழிகாட் டுகிறது.

இதுவே ஜமாஅத்தின் பார்வையாகும். பாசிசம் ஆட்சியில் அமர்ந்திருக்கும் இவ் வேளையில், முஸ்லிம்களின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும்? வாய்ப்புக்கேடாக முஸ்லிம்கள் இன்று ஒற்றுமை யில்லாமல் இருக்கிறார்கள். முஸ்லிம்களின் மீது பழிசுமத்துவதும், இந்தியச் சமூகத்திலிருந்து ஒதுக்கிவைப்பதும், அவர்களை ஒடுக்குவதும் அச்சுறுத்துவதுமே பாஜகவின் குறிக்கோளாக இருக்கிறது. அதற்காகத்தான் அவர்கள் பாபரி மஸ்ஜிதைத் தகர்த்தனர். ராமர் கோவில் அந்த இடத்தில் எப் போதும் இருந்ததில்லை. அவ்வாறு இருந்தும் குறிப்பிட்ட அந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என வதந்திகளின் மூலம் பள்ளியை இடித்திடவும் செய்தனர். மக்களிடையே ஒருவித குழப்பத்தை விதைப் பதே இவர்களின் முக்கிய செயல்பாடாக இருக்கிறது. அதனை அவர்கள் அனைத்து இடங்களிலும் செயல் படுத்திடவே முனைகின்றனர். பிரவீன் தொகாடியா போன்றவர்கள் இதனை மக்களிடம் பரப்பிட 40 ஆண்டுகளுக்கும் மேலாக முயன்றுவருகின்றனர். ஆனால், முஸ்லிம்கள் பொறுமையுடனும் விவேகத்துடனும் செயலாற்றிட வேண்டிய தேவை இருக்கிறது.

முஸ்லிம்கள் எளிதில் உணர்ச்சிவசப் படக்கூடியவர்கள் என்பதாலேயே அவர்கள் அடிக் கடி சீண்டப்படுகின்றார்கள் என்பது உண்மைதான். அத்தகைய சீண்டல்களுக்கு முஸ்லிம்கள் எப் போதுமே எதிர்வினையாற்றக்கூடாது. யாரிடம் மனவலிமை குன்றி, அறிவாற்றல் நலிவுற்று, பொருளாதார வலிமையில்லையோ, அவர்களிடம்தான் உணர்ச்சிவசப்படும் தன்மை அதிகமாக இருக்கும். அத்துடன் பாதுகாப்பற்ற மனோநிலையும் சேர்ந்துகொள்வதால் அவர்களிடம் ஆத்திரம் அதிகமாகக் காணப்படும். தமிழகத்திலும் இதே மனோநிலை தான் நிலவுகிறது. இப்படி உணர்ச்சிவசப்படுத்துவதன் மூலம் இளைஞர்களின் கவனத்தை ஈர்ப்பதுடன், செல்வாக்கு, பணம் ஆகிய வையும் அவர்களுக்கு எளிதில் கிடைக்கிறது. ஆனால், நீண்ட காலவோட்டத்தில் இது தவறான ஒரு கண்ணோட்டமாகும்.

இதனை நாம் தவிர்ப்பதே சிறந்தது. இறைவன் தனது திருமறையில் மூஸா (அலை) அவர்களின் மக்களைப் பார்த்து ""இறைவனது வழியினை இறுகப்பிடித்துக் கொள்ளுங்கள், பொறுமையை மேற்கொள்ளுங்கள், ஆட்சியதிகாரம் அனைத்தும் இறைவனிடமே இருக்கிறது. அவன் நாடியவர்களிடமே அதனை கொடுக்கிறான்'' என விடுக்கும் செய்தியை படிப்பினையாக பார்க்கவேண்டும். இறுதியான முடிவு என்பது நம்பிக்கை கொண்டவர்களுக்கும் சரியான வழி முறையைப் பின்பற்றியவர்களுக்குமே வெற்றிகர மானதாக இருக்கும்.

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர நேர்காணல்

மேலும் தேடல்