வெறுப்பை மக்களிடையே விதைக்கும் வகையில் பேசுவது இப்போது அதிகம் நடந்து வருகிறது. தமிழகத்திலும் அந்தச் சூழல் காணப்படுகிறதே? ஆழப்பதியக் கூடிய வகையில் மக்களின் எண்ணத்தில் நஞ்சை விதைப்பதே ஆர்எஸ்எஸ், பாஜ கவின் தந்திரமாகும். அதன் மூலமாக முஸ்லிம் களின் மீது ஐயத்தைத் தோற்றுவிப்பதுடன் அவர்கள்மீது குரோதத்தை வளர்க்கவும் இத்தகைய தந்திரங்களைக் கையாளுகின்றனர். ஒருவர்மீது மற்றொருவரை ஐயம்கொள்ளும்படிச் செய்வதன் மூலம் இனவாதத்தை மக்கள் மத்தியில் பரப்பு கின்றனர். இதே திட்டத்தைத்தான் 19301935 களில் ஹிட்லரும் கையாண்டான். முதலில் கம்யூனிஸ்ட்டுகள் நாடாளுமன்றத்தை தீயிட்டனர் எனக்கூறி மக்களை நம்பவைத்து ஆட்சியைப் பிடித்தான். பின் கம்யூனிஸ்ட்டுகளுக்குத் தடை விதித்தான். அத்தோடு நில்லாமல், 1939 முதல் 1945 வரை 5 லட்சம் மக்களின் உயிரைப் பறித்த இரண்டாம் உலகப் போருக்குக் காரணமாகவும் இருந்தான். இதே வழிமுறையைத்தான் இங்கிருப்பவர்களும் கடைப்பிடிக்கின்றனர். மொழி ரீதியிலான பிரச்னைகள் இயக்க வளர்ச்சிக்கும் சரி நாட்டின் வளர்ச்சிக்கும் சரி தொடக்ககாலம் தொட்டு ஒரு தடையாகவே இருக்கிறது. இதனை நீங்கள் எப்படி காண்கிறீர்கள்? மொழி ரீதியிலான சிக்கல்கள் தமிழகத்தில் வேண்டுமானால் இருக்கலாம், ஆனால் 99% முஸ்லிம்கள் மலையாளம் பேசும் கேரள மாநிலத்தில் இந்தப் பிரச்னை இல்லை. அந்த மக்களின் அரபுலகத் தொடர்புகளின் மூலம் இந்தி மொழி அவர்களுக்கு அறிமுகமான ஒன்றாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், மேல்நிலை வகுப்பு வரை அங்கு பள்ளிகளில் இந்தி மொழியும் கற்றுத்தரப்படுகிறது.
தமிழகம் இதிலிருந்து மாறுபட்டதாக இருக்கிறது. உருது மொழிக்கு ஏன் இந்த முக்கியத்துவம் என்றால், இம்மொழியில்தான் மிகவும் புகழ்பெற்ற பல இஸ்லாமிய இலக்கியங்கள் இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் உருது இந்தியாவில் வாழும் பெரும்பான்மை முஸ்லிம்களை மட்டுமல்லாது பாகிஸ்தானியர்களையும் பிணைக்கும் ஒரு பால மாகவும் இருக்கிறது. பாகிஸ்தானின் மக்கள் தொகை 21 கோடியாகும். இந்திய முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் 20 கோடியாக இருக்கலாம். அங்கே அவர்களுக்கிடையில் சிந்தி, பலூச்சி, சராக்கி, பஞ்சாபி என பல்வேறு மொழிகள் வழக்கில் உள்ளன. அதிலும் குறிப்பாக 57% பாகிஸ்தானிய முஸ்லிம்கள் பஞ்சாபில்தான் இருக்கிறார்கள். அவர்களது தாய்மொழி பஞ்சாபியாக இருந்தாலும் அவர்கள் வாசிப்பது உருதுவாகவே இருக்கிறது. நமது தேசத்தில் குஜராத் மாநிலத்தை எடுத்துக்கொண்டாலும், அங்கே மக்கள் தொகையில் 10% முஸ்லிம்கள் இருக்கின்றனர், அதாவது கிட்டத்தட்ட 60 லட்சம் பேர். அவர்களின் மார்க்க ரீதியிலான மொழியாக உருது இருக்கிறது.

அவர்கள் உருது மொழியைப் புரிந்துகொள்வது போல நானும் குஜராத்தி மொழியினைப் புரிந்துகொள்கிறேன். வங்காளத்தை எடுத்துக்கொண்டாலும், அங்கு பேசப்படும் வங்க மொழி உலகில் அதிக மக்களால் பேசப்படக்கூடிய மொழியாக உள்ளது. இந்தியா, வங்கதேசம் என ஒட்டுமொத்தமாக சுமார் 26 கோடி மக்கள் பேசும் மொழியாக அது இருக்கிறது. அவர்களில் கல்வியறிவு பெற்றவர்களால் உருது, இந்தி மொழியினைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆகவே, உருது மொழியினைப் புரிந்துகொள்ள எந்தச் சிக்கலும் இல்லை. இயற்கையிலேயே உலகின் ஒட்டுமொத்த முஸ்லிம்களால் அரபு, பாரசீக, துருக்கி அல்லது உருது மொழியில் புலமை பெறுவது சாத்தியமற்ற ஒன்றாகவே இருக்கும். பல்வேறு மொழிகளின் தேவை இருந்துகொண்டேதான் இருக்கும். தமிழகத்தில் முஸ்லிம்கள் 6% அதாவது சுமார் 45 லட்சம் பேர் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு சொல்கிறது. அதில் சுமார் 80% முஸ்லிம்களின் தாய்மொழி தமிழாகவே இருக்கிறது. இந்தி மொழி பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படாததால் தான் உருது மொழி குறித்து இங்கே பிரச்னை எழுகிறது.
ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினர் உருது மொழி பேசுபவர்களாகவே இருக்கின்றனர். இது ஒருபுறம் என்றால், மறுபுறம் வட இந்தியாவில் உருது மொழி நாள்பட பலவீனம் அடைந்து வருகிறது. 1962ஆம் ஆண்டு பல்கலைக்கழகத் திற்கான முந்தைய வகுப்புகளில் ஒருசில பாடங்கள், குறிப்பாக மனோதத்துவம், பொருளாதாரம் குறித்த புத்தகங்கள் இந்தியில்தான் இருந்தன. உருது மொழியில் அதற்கான புத்தகங்கள் இல்லை. இதனைப்போன்ற காரணங்களால் பிறமொழி வழக்குகள் உருது மொழியில் நுழைக்கப்பட்டு அது பலவீனம் அடைந்து வருகிறது. இன்றைய நவீன வளர்ச்சியின் நன்மையை அதன் தீமை மிகைத்துவிடும் போலிருக்கிறதே...! சமூகத்தில் எப்போதுமே நன்மையும் தீமையும் இருந்துகொண்டே இருப்பது போல ஆக்கப்பூர்வ மான, அழிவுப்பூர்வமான நேரெதிர் சிந்தனைகள் சமூகத்தில் இருந்துகொண்டுதான் இருக்கும். சிலசமயம் ஏதேனும் ஒன்று மற்றொன்றை விட பலம்வாய்ந்ததாக இருக்கும். இப்போது சமூக செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் கல்வியறிவு உடையவர்களாக இருப்பதோடு பல விஷயங்கள் குறித்து நன்கு அறிந்தவர்களாக இருக்கிறார்கள். மக்களின் தேவைகளும் இதற்குத் தகுந்தாற்போல் அதிகரித்துள்ளது.
மக்களின் நேரம் விலைமதிப்பற்ற ஒன்றாக மாறியுள்ளது. நேரத்தை சேமிக்கவே அவர்கள் விரும்புகின்றார்கள். உதாரணமாக, விரைவாக பயணிப்பதில் அவர்கள் ஆர்வம்கொண்டுள்ளனர். இன்றைய வானூர்தி சேவை இதற்கு வழிவகை செய்கிறது. அத்தோடு இந்தக் காலகட்டத்தில் தொலைக்காட்சி வந்தபிறகு ரேடியோவின் தேவை குறைந்துள்ளது. புத்தகங்கள், இதழ்கள் பல வெளியிடப்பட்டு வருகின்றன. அதிலும் தற்போது சமூக வலைதளங்களின் தாக்கம் அளப்பரியது. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரத்தின்படி இந்தியாவின் மக்கள் தொகை 134 கோடியாகும். ஆனால், இன்று அலைப்பேசி களை உபயோகிப்போர் 120 கோடி பேர்களாக இருக்கிறார்கள். இவையனைத்தும், இஸ்லாத்தின் செய்தியினை மக்களுக்கு முன் சமர்ப்பிப்பதில் நமக்கõன வாய்ப்புகளைக் காட்டுகிறது. சில பின்னடைவுகளும் இருக்கவே செய்கின்றன. மக்கள் சுயநலமுடையவர்களாகவும், தன்னலத்தை மட்டுமே கருத்தில் கொண்டவர்களாகவும் அவர்களது சுகபோகங்களையும் ஆடம்பரங்களையும் மட்டுமே சிந்திப்பவர்களாகவும் மாறிவிட்டனர்.
அஹ்லாக்கை மாட்டிறைச்சியின் பெயரால் கொன்றார்கள், முத்தலாக் விவகாரம், பாபரி மஸ்ஜித் விவகாரம், முஸ்லிம்களின் சட்டங்கள் குறித்து பேசுகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் நாம் பொறுமையாகவே இருக்கவேண்டுமா அல்லது எவ்வாறு செயல்பட வேண்டும்? அமைதியான, சட்டபூர்வமான நடைமுறைகளையே நாம் முன்னெடுக்க வேண்டும். முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் திருப்பத்தூரைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் வழக்கறிஞர் (பெயர் நினைவில்லை) இரண்டு விஷயங்களைக் கூறியதை இப்போது நினைவுகூர்கின்றேன். ஒன்று முஸ்லிம்களின் தனிப் பட்ட பிரச்னைகளுக்கு நீங்கள் நீதிமன்றத்தை அணுகிடத் தேவையில்லை. நீங்கள் உங்களது உள்ளூர் ஜமாஅத்தார்களைத் தொடர்புகொண்டாலே உங் களது பிரச்னை சீக்கிரம் தீர்ந்துவிடும். இரண்டாவதாக, வன்முறையில் இறங்குவது தற்கொலைக்குச் சமம். பெரும்பான்மையினருக்கு வேண்டுமானால் அது சாத்தியப்படும். நாம் எண்ணிக்கையில் குறைந்தவர்கள், நம்மிடம் அதிகாரம் இல்லை, நம்முடைய வளங்கள் மிகவும் குறைவு, அறிவுத் தளத்தில் பின்தங்கிஇருக்கிறோம். மேற்சொன்ன காரணங்களோடு அதிகாரமும் நீதிமன்றமும் பெரும்பான்மையினருக்குச் சாதகமாகவே இருக் கும். எனவே, பொறுமையும் விவேகமும் முஸ்லிம் களுக்குத் தேவை.
இந்துக்களை முஸ்லிம்களிடமிருந்து பிரித்துவைப்பதில் பாசிஸ்டுகள் நிபுணத்துவமிக்கவர்கள். இன்றைய செய்தித்தாளில் பீகார் மாநிலத்தின் ஏதோவொரு கிராமத்தில் முஸ்லிம்கள் ""பாகிஸ்தான் ஜிந்தாபாத்'' என கோஷமிட்டனர் என்ற செய்தியை வெளியிட்டுள்ளனர். எந்த முஸ்லிம் அப்படிச் சொன்னார் என்பதை யாரும் தெளிவு படுத்தவே இல்லை. இந்திய முஸ்லிம்கள் எதற்காக இப்படியொரு அறிவற்ற செயலைச் செய்யவேண்டும்? இதன் மூலம் அவர்களுக்கு என்ன பயன் கிடைக்கப்போகிறது? இப்படித்தான் அவர்கள் முஸ்லிம்கள் மீது ஏதாவது ஒரு அவதூறை தொடர்ந்து பரப்பி வருகின்றனர். இதன்மூலம் ஏதாவதொரு பிரச்னையை புதிதாக உருவாக்கிவிட முயலுகின்றனர். இந்திய சுதந்திரத்திற்குப்பின் இரண்டு பிரச்னைகளை முஸ்லிம்களுக்குக் கொடுக்க அவர்கள் தவறிய தில்லை. ஒன்று, மஸ்ஜிதுகள் முன்பு கொட்டு முழக்கமிடுவது. மற்றொன்று, தென் பகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில் காணப்படும் மாட்டுக்கறி குறித்த பிரச்னைகள். நாள்கள் செல்லச்செல்ல புதிய பிரச்னைகளை இவர்கள் உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள்.
அவர்களுடைய நோக்கமே சிறுபான்மையினரை ஒருவித பதட்டத்தில் வைத்திருப்பதுதான். நாம் கவனத்தைச் சிதறவிட்டுவிடக்கூடாது. நேர்வழியில், வழிபாட்டில், ஒழுக் கத்தில், உயர் கல்வியில், வல்லுநர்களைப் பெருக்குவதில், பொருளாதாரம், சமூக உணர்வில் நமது குடும்பவியல் ஆகியவற்றில் கவனத்தைக் குவித் திட வேண்டும். மதம், சாதிய அரசியல், ஊழல் என பல்வேறு காரணிகளை இன்றைய அரசியல் சார்ந்துள்ள நிலையில் விழுமம் சார்ந்த அரசியல் என்ற முழக்கத்தை முன்னெடுப் பதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? மூஸா(அலை) அவர்களிடம் இறைவன் ""வல்ஆகிபத்து லில்முத்தகீன்'' என்று கூறியதுபோல. இங்கே உண்மை மிகவும் கடினமானதாகத் தெரிய லாம். ஆனால் அதுதான் நிரந்தரமானது. ஆடை யின்றி வீதிகளில் திரியும் சமூகத்தில் ஆடை களை எவரும் வியாபாரம் செய்ய மாட்டார்கள். அதனைப்போன்றுதான் இத்தகைய கொள்கைகளை நடைமுறைப்படுத்திட கடினமாகத்தான் இருக்கும், இத்துடன் நடைமுறைச் சிக்கல்களையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். உதாரணமாக, டெல்லியில் ஜமாஅத்தின் அலுவலகத்திற்கு நெடுங்காலமாக மின்சார மீட்டர் பொருத்தப்படாமல் இருந்தது.
நேரான வழியில் மின்சார இணைப்பைப் பெற்றிட ரூபாய் பதினைந்தாயிரம் கட்ட வேண்டும் என்று தெரிந்தபோது உடனே அந்தத் தொகையைச் செலுத்தி முதன்முதலில் இந்தப்பகுதியில் முறை யாக இணைப்பைப் பெற்றதும் ஜமாஅத் தான். ஒட்டுமொத்தமாக ஜமாஅத் அலுவலக வளாகத்திற்கு 15 இணைப்புகள் தேவைப்பட்டன. அதற்காக ரூபாய் ஒன்றரை லட்சம் கொடுத்து இந்த இணைப்புகள் பெறப்பட்டன. இப்படிப்பட்ட நடைமுறைச் சிக்கல் கள் எல்லாத் துறைகளிலும் காணப்படுகின்றன. நீங்கள் தமிழகத் தலைவராக இருந்த போதுதான் மீனாட்சிபுரம் என்ற கிராமம் ரஹ்மத் நகராக மாறியது. அழைப்பியல் ரீதி யாக தமிழகத்தில் எவ்வாறான உத்திகளை கையாளவேண்டும்? இடத்திற்கும் காலத்திற்கும் தகுந்தாற்போல நிலவரங்களும் வேறுபடும். அல்ஹம்துலில்லாஹ், தமிழகத்தில் முதன்மையான மிக முக்கியமான ஒன்றாக நான் காண்பது இந்து முஸ்லிம் களுக்கிடையே நல்ல தொடர்பு இருக்கிறது. அவர்களிடையே நல்ல உறவு நிலையும் புரிந்துணர்வும் இருக்கிறது. இந்தச் சூழலை உருவாக்குவதில் தந்தை பெரியாரின் பங்களிப்பு அளப்பரியது.
அவர் பலதெய்வ வழிபாடு, சாதியக் கட்டமைப்,பு மூடநம்பிக்கை ஆகிய வற்றுக்கு எதிரான கருத்தோட்டங்களை இங்கு கொண்டுவந்தார். இதனால் மக்களின் சிந்தனையில் ஒரு விசாலத்தன்மை உருவானது. வடஇந்தியர்களைப் போன்று தென்னிந்திய மக்கள் உணர்ச்சிவசப்படுபவர்களாக இல்லாததால் இங்கே வடஇந்தியா போன்ற பூசல்கள் நிறைந்த நிலை இல்லை. தென்பகுதி மக்கள் பொறுமையானவர்களாக அமைதியை விரும்பக்கூடியவர்களாக இருப்பதால் இங்கு சிந்திக்கும் ஆற்றலை அவர்கள் கொண்டுள்ளனர். இஸ்லாத்தினை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டவர்களில் பெரும்பான்மையினர் சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாகிய மக்களாகவே இருக்கின்றனர். காஷ்மீர் மாநிலத்தை எடுத்துக்கொண்டால். பதிமூன்றாம் நூற்றாண்டில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் நாடுகளில் இருந்து வந்த சூஃபி போதனையாளர்களின் மூலம் அங்கு இஸ்லாம் பரவியது. எந்த அளவிற்கு என்றால், பிராமணர்களைத் தவிர மற்ற அனைவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். பிராமணர்களிலும் சிலர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். அவர்களுள் அல்லாமா இக்பால் அவர்களது மூதாதையரும் குறிப்பிடத்தக்கவர்களாவர். அவர்கள் கல்வியில் மட்டுமின்றி, வேதங்களில் தேர்ச்சிபெற்றவர்களாக, இஸ்லாத்தின் நிதர்சனமான செய்தியை உணரக்கூடிய நிலையில் இருந்தும் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அன்றைய சமூகச்சூழலும் மக்களை இஸ்லாத்தின் பக்கம் தள்ளிடவே, அவர்கள் முஸ்லிம்களாகவும், அரசியல் ரீதியாக செயல்படக்கூடியவர்களாகவும், எழுத்தாளர்களாகவும், சமூக ஆர்வலர்களாகவும் மாறினர்.
இதற்கு அன்றைய சூழலும் பங்காற்றியது. இஸ் லாம் மக்களுக்கு அறிவை மட்டுமே போதிக்கிறது. உதாரணத்திற்கு, 1981 மீனாட்சிபுரம் சம்பவத்திற்குப்பின் எவ்வாறான மக்கள் இஸ் லாத்தை ஏற்றுக்கொண்டனர் என்பதைப் பார்த்தால் பெரும்பான்மையானவர்கள் சமூகத்தின் அடிமட்டத்தில் இருப்பவர்களே..! என்னுடைய 15 ஆண்டு தமிழகத்தினுடனான தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, இந்த மக்கள் இஸ்லாத்தின் பால் வருவதற்கு முதல் காரணி சமத்துவமாகும். இரண்டாவதாக, இறைவனைக் குறித்து இஸ்லாம் முன்வைக்கும் ஈர்ப்புமிக்க தெளிவான கோட்பாடுகளாகும். மூன்றாவதாக, இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை, அவரது உபதேசங்கள். நான்காவதாக, முஸ்லிம்களிடம் இருக்கும் தூய்மை, பர்தா முறை, ஒருவருக்கொருவர் உதவும் தன்மை. ஐந்தாவதாக, தமிழகத்தில் இருந்த முஸ்லிம்கள் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருந்ததும், புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்கு அவர்கள் உதவியாக இருந்ததுமாகும். வாசிப்புப் பழக்கம் இன்றைய காலகட்டத்தில் குறைந்துள்ளது. கேரளாவை தவிர்த்து, வேறெங்கும் நமக்கான ஒரு நாளிதழ் இல்லையே? கேரள மாநிலத்தின் சமீபத்திய மக்கள்தொகை சுமார் நான்கு கோடி. இதில் சுமார் 27விழுக்காடு முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.
அவர்கள் அனைவரும் மலபார் பிரதேசத்தில் பெரும்பான்மையாக இருக் கிறார்கள். மற்ற மாநில மக்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் கேரள மக்கள் கடினமாக உழைக்கக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். தமிழக முஸ்லிம்கள் அதிகப்படியாக 6 விழுக்காட்டினராக இருக்கின்றனர். சற்றேறக்குறைய அதே அளவிலான கிறித்தவர்கள் சமூக சேவை, கல்வி என பல்வேறு பணிகளைச் செய்துவந்தாலும் அவர்களிடம்கூட ஒரு நாளிதழ் இல்லை. வாசிப்பு அறிவை வளர்ப்பதில் அடிப்படையான ஒன்றாக இருக்கிறது. ஒரு காணொளியைப் பார்த்தோ அல்லது ஒரு உரையைக் கேட்டோ அவற்றின் கருத்துகளை நாம் தக்கவைத்துக்கொள்ள முடியாது. கற்பதன் மிகவும் அடிப்படையான வழிமுறைகளில் வாசிப்பு மிக முக்கியமானது. குறைந்தபட்சம் நம்மிடம் புத்தகங்களின் சிறிய தொகுப்பாவது இருக்கவேண்டும். நான் எழுதுவதற்கு புத்தகங்கள் மிகவும் உதவுகின்றன. எப்போதெல்லாம் எனக்கு மறதி ஏற்படுகிறதோ அப்போது புத்தகங்களை வாசிப்பதன் மூலம் நான் மறந்தவைகளை நினைவூட்டிக்கொள்கிறேன். புத்தகங்களின் தொகுப்பு இல்லாமல் இது சாத்தியப்படாது, வாசிப்பின் சுவையையும் நாம் அறியமுடியாது. ஆகவே முஸ்லிம்கள், அதிலும் குறிப்பாக ஜமாஅத்தின் அங்கத்தவர்கள் வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். சிறு சிறு குழுக்களாக ஒருங்கிணைந்து புத்தக ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். ஒரு புத்தகத்தை வாசிப்பதன் மூலம் சில தகவல்களை நாம் பெற முடியும்.
அப்படி மூன்று நான்கு பேர் ஒன்றிணைந்து ஆய்வு மேற்கொள்ளும்போது பல்வேறு கருத்துகளையும் பார்வைகளையும் நாம் பெறமுடியும். இஸ்லாமிய இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளவர்கள் தொடர் வாசிப்பை மேற்கொள்ள வேண்டும். அத்தோடு, குறிப்புகளையும் எழுதி வைக்க வேண்டும். முஸ்லிம்களின் பிரிவாகக் கருதப்படும் சன்னி பிரிவின் பெயர்க்காரணம் கூட கேள்வியறிவின் அடிப்படையில் வந்ததுதான். நபிகளாரின் சொற்களைக் கேட்டு நடக்கக்கூடியவர்களை நாம் இவ்வாறு குறிப்பிடுகிறோம். எனவே, வாசிப்பும் குறிப்புகளை மேற்கொள்வதும் மிகவும் முக்கியமானவை. நான் புத்தகங்களை வாசிப்பதுடன் அதன் இடையில் எனக்குத் தேவைப்படும் தகவல்களைக் குறிப்பாகவும், அந்த புத்தகம் குறித்த எனது கருத்துகளையும் எழுதி வைத்துக்கொள்கிறேன். அப்படிச் செய்வதன்மூலம் எப்போதாவது எனக்கு இந்த தலைப்பு குறித்து தகவல்களை எளிதில் திரட்ட முடிகிறது. இப்படியாகத்தான் புத்தகங்கள் மூலமாக நம்மை நாம் செறிவூட்டிட முடியும்.