நாள்தோறும் ஐந்தாறு கிலோமீட்டர் காலையிலும், மாலையிலும் மாணாக்கர்கள் நடந்து வந்து கல்வி பயில்கின்றனர். இவர்களுக்கான பேருந்து வசதி செய்து கொடுப்பது யார்? பசியோடு கிளம்பி வருவதால் மயங்கி விழும் மாணவிகளின் துயர் தீர்ப்பது எப்போது?
அது பழங்குடியினர் வாழும் மலைக்கிராமம் அல்ல. சாலை வசதியோ, பேருந்து வசதியோ இல்லாத கற்காலத்திலும் நாம் வாழவில்லை. ஆனா லும் மாணவிகள் நாள்தோறும் பள்ளிக்கு நடந்தே வருகிறார்கள். செல்கிறார்கள். சேலத்திலிருந்து சென்னைக்கு எட்டுவழிச் சாலைக்காக மலை களையும், இயற்கை வளங்களையும் அழிக்கத் துணிந்தவர்கள் அடிப்படை பேருந்து வசதிக்கு வழிவகை செய்ய எந்த முயற்சியும் மேற்கொள்ள வில்லை. இந்தியா வளர்கிறது என்ற ஓயாத ஓலத்திற்கு மத்தியில் இந்த எளிய மக்களின் குரல் எப்போது உயரே எழப்போகிறது? திருச்சி மாவட்டத்திலுள்ள வெங்கடநாயக்கன் பட்டி, அதிகாரம் பகுதியிலுள்ள மாணாக்கர்கள் 7 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மலைப்பாதை வழியாக மருகாபுரிக்குச் செல்லவேண்டும். இல்லையென்றால் 5 கிலோமீட்டர் தொலை விலுள்ள துவரங்குறிச்சிக்கு வரவேண்டும். செவப் பட்டிக்கு முன்னாலுள்ள கிராமங்களிலிருந்தும், புத்தாநத்தத்திற்கு முன்னாலுள்ள கிராமங்களி லிருந்தும் மருகாபுரி, இதயப்பட்டி, கல்லுப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களிலிருந்தும் துவரங்குறிச்சி அரசுப் பள்ளிக்குத்தான் மாணவர்கள் வருகிறார்கள். 8:45க்கு பள்ளி பிரார்த்தனைக்கு மாணவிகள் வந்துவிட வேண்டும். அவர்கள் வீட்டிலிருந்து 8 மணிக்குக் கிளம்பினாலே போதுமானது. ஆனால் காலை 7 மணிக்கும் இரவு 9 மணிக்கும் இரண்டு நேரங்களில் மட்டுமே பேருந்து இயக்கப்படுகிறது. 7 மணிக்கே கிளம்பி வரவேண்டியிருப்பதால் 6 மணிக் கெல்லாம் அவர்கள் தயாராகி வரவேண்டும். எனவே பட்டினியுடன் கிளம்பி வருகின்றார்கள் மாணவிகள். வெங்கடநாயக்கன்பட்டியிலிருந்து பேருந்து வசதி இல்லை. ஒருகிலோமீட்டர் ஊருக்குள் சென்று வந்தால் 35 மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வந்துவிடலாம். ஆனால் பேருந்து நிற்பதில்லை. பைபாஸ் சாலையில் வந்துவிடுகிறது. நடந்தே வருவதால் காலையில் உணவு உட்கொள்ளாமல் வருகின்ற மாணவிகள் வெயில் அதிகமானால் காலை ஒன்றுகூடலில் மயங்கி விழுவது தொடர் கதை. காலையில் 6 மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பும் மாணவிகள் மாலை 5:30க்கு வகுப்பு முடிந்து கிளம்பி 7 மணிக்கு வீடுபோய்ச் சேர்கிறார்கள்.
வெயிலில் வருவது சிரமம் என்றால், மழைவந்தாலோ இன்னும் சிரமமாகிவிடுகிறது. நடந்தே வந்து நடந்தே செல்லும் மாணவிகள் பெரும் மனஉளச்சலுக்கு ஆளாகின்றார்கள். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும், உயர் அதிகாரிகளுக்கு எடுத்துரைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. நடந்துவரும் மாணவிகளைச் சந்தித்துப் பேசி னோம். "பேட்டி குடுத்தா பேருந்து வரும்னு சொன்னாங்க... பத்திரிகைக்கு பேட்டியும் குடுத் தோம். பேருந்துதான் வரல... ரொம்ப கஷ்ட மாயிருக்கு... நீங்க சொன்னாவாவது பஸ் உடுவாங்களா?' என ஏக்கத்துடன் கேட்கிறார்கள். "வெள்ளனே கிளம்பறதால வீட்ல சாப்பாடு எதுவும் ரெடி பண்ணமாட்டாங்க. பட்டினியோட வருவோம். ரொம்ப வெயிலாயிருந்தா மயக்கம் வந்திடும்' என்கின்றனர் கோரஸாக...! "சரி நடந்து வருபவர்கள்தான் பட்டினியுடன் வருகிறார்கள் உங்களுக்கு என்னாச்சு?' என பேருந்தில் வரும் மாணவிகளிடம் கேட்டோம். "7 மணி பஸ்ஸ பிடிச்சாத்தான் ஸ்கூலுக்கு வர முடியும். அடுத்த பஸ் 9:30க்குத்தான். நாங்களும் சீக்ரமே வரவேண்டி இருக்கு' என்கிறார்கள்.

சானிட்டரி நாப்கின் எரியூட்டும் இயந்திரம் முன்மாதிரி தலைமையாசிரியை நூலகத்தில் மாணவிகள் இந்திராணி முன்மாதிரி அரசுப் பள்ளி "பஸ் பாஸ் இன்னும் வரல. ஸ்கூல் யூனிஃபார்ம் போட்டிருக்கோம். எங்க ஸ்கூல்ல ஐடி கார்டும் கொடுத்திருக்காங்க.. டிக்கெட் எடுக்க வேண்டாம். டிப்போ மேனேஜர்ட பேசிட்டோம்னு மேடம் சொன்னாங்க. ஆனாலும் டிக்கெட் எடுக்கச் சொல் றாங்க..' என்கிறார்கள் மாணவிகள். முன்மாதிரி அரசுப் பள்ளி துவரங்குறிச்சி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியையைச் சந்தித்தோம். உள்ளே நுழைந்ததும் "இது அரசுப் பள்ளியா, தனியார் பள்ளியா'என நமக்கு வியப்பு மேலிட்டது. பள்ளி மிகவும் தூய்மையாக இருப்பதுடன் பளிச்சென இருந்தது. தலைமை ஆசிரியை இந்திராணியை சந்தித்தோம். 2017 ஆம் ஆண்டு நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியை இன்முகத்துடன் வரவேற்றுப் பேசினார்.

"கடந்த ஆண்டுக்கு முன்புவரை இருபாலர் படிக்கும் உயர்நிலைப் பள்ளியா இருந்துச்சு. இப்ப அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியாகி உள்ளது. 600 பிள்ளைகள் படித்த இந்தப் பள்ளியில் இப்போது 826 மாணவிகள் படிக்கிறாங்க. பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்துவதைப் போலவே பள்ளியுடைய சுகாதாரத்திலும் கவனம் செலுத்துகிறோம்.' என்று சொல்லிவிட்டுத் தொடர்கிறார் தலைமை ஆசிரியை. "இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்கு தூய்மை யான இடம் தேவை. இங்கே ரொம்ப மோசமõன நிலையிலிருந்த கழிப்பறைகளை சரிசெய்ததுதான் எங்கள் முதல்பணி. கழிவறை மோச மாக இருப்பதால் இயற்கைத் தேவையை அடக்கி வைத்து பல்வேறு நோய்களுக்கு மாணவிகள் ஆளாகிறார்கள். எனவேதான் அதில் கூடுதல் கவனம் செலுத்தினோம். 826 மாணவிகள் இங்கு பயில்வதால் நூற்றுக்கணக்கான சானிடரி நாப்கின்களை பயன்படுத்துகின்றனர். இவற்றால் சுகாதாரக்கேடு ஏற்படக்கூடாது என்பதற்காக இரண்டு சானிடரி நாப்கின்கள் எரி யூட்டும் இயந்திரங்களை வாங்கி இருக்கின்றோம்' என்றார். கழிவறையைச் சென்று பார்த்தோம்.
மிகத் தூய்øமயாக இருப்பதுடன் கை கழுவுவதற்கான சோப்பு உள்ளிட்ட வசதிகளும் இருந்தன. இந்தப் பள்ளியில் சுகாதாரத்துறைத் தலைவராக நியமிக்கப்பட்ட மாணவியின் தலைமையில்
தொடங்கியது சிற்றுண்டி வழங்கும் திட்டம்

சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திருவான்மியூரில் 25.02.2019 அன்று தொடங்கி வைத்தார். அட்சய பாத்ரா தொண்டு நிறுவனம் சார்பில் திருவான்மியூரில் உள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 1000 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. அதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது: நாட்டிலேயே முதல் முறையாக பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. குழந்தைகள் ஆரோக்கியமாக இருந்தால்தான் பாடங்களை சிறப்பாக கற்க முடியும். எனவே தமிழக அரசு, கொடையாளர்கள், தன்னார்வலர்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து, இத்திட்டத்தை சென்னை முழுவதும் செயல்படுத்துவதுடன், திட்டம் தமிழகம் முழுவதும் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள் கிறேன். இத்திட்டம் நடப்பு கல்வியாண்டில் 50 ஆயிரம் மாணவர்களுக்கும், அடுத்த கல்வியாண்டில் 20 ஆயிரம் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நாளும் காலையில் இட்லி, உப்புமா, பொங்கல் உடன் சாம்பார் என மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த உணவு அட்சய பாத்ரா நிறுவனத்தால் தயாரித்து மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், சமூக நலத்துறை அமைச்சர் வி.சரோஜா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் ஹர்மந்தர் சிங், மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷ், துணை ஆணையர் பி.குமாரவேல் பாண்டியன், ஆல்பி ஜான் வர்கீஸ், அட்சய பாத்ரா நிறுவன துணைத் தலைவர் ஸ்ரீ சஞ்சலப்பதி தாசா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமும் கழிவறை சுத்தம் செய்யப்படுகிறது. இது போல மாணவிகள் உணவுத்துறை, விளையாட்டுத் துறை என துறை வாரியாக பிரிக்கப்பட்டிருக் கின்றார்கள். தண்ணீர் தொட்டியில் அழுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக வண்ணம் பூசியிருக்கின்றார்கள். நூலகமும் மிகச் சிறப்பாக வண்ணத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. மாணவிகள் நூலகத்திலிருந்து நூல்களை எடுத்து பயன் பெறுகின்றனர். "இப்ப கூட விளையாட்டுக்காக 200 பிள்ளைங்க பயிற்சியில சேர்ந்திருக்காங்க. 84 பிள்ளைங்களுக்குத்தான் விளையாட்டு சீருடை இருக்கு. மீதி நாங்களே வாங்கப் போறோம். 28 ஆசிரியைகள் இருக்காங்க. அவங்க எல்லாருமே இதுல பங்கெடுக்கிறாங்க. அவங்களோட ஒத்துழைப்போடத்தான் இவ்வளவு பணிகள் செய்ய முடியுது' என்கிறார் தலைமை ஆசிரியை இந்திராணி. "அதெல்லாம் இருக்கட்டும். பிள்ளைங்க நடந்தே வர்றாங்களே..!' "ஆமா.. ரொம்ப கஷ்டமா இருக்கு. நான் வரும்போது வழியில தினசரி பாக்கறேன். 9 ஆவது படிக்கற பொண்ணு அவ தம்பிய கூப்பிட்டு நடந்தே வர்றா.. வெங்கட நாயக்கன் பட்டியிலிருந்து வர்ற முப்பதுக்கும் மேற்பட்ட மாணவிகள் நடந்தேதான் வர்றாங்க. கலக்டர்ட மணு குடுத்தாச்சு. நாங்களும் சொல்லிக்கிட்டே இருக்கோம். நாங்க டீச்சரெல்லாம் சேர்ந்து ஒரு வேன் அரேன்ஞ் பண்ணலாமான்னுகூட யோசிக்கிறோம்.'என்கிறார். "பள்ளியில் மாணவிகள் மயக்கம் போட்டு விழுந்துடுறாங்களாமே...!' "ஆமா... நேரத்திலே கிளம்பி வர்ற பிள்ளைங்க சாப்பிடாம வந்திடுறாங்க.
இதுல இன்னும் வருத்தம் என்னன்னா நாலஞ்சு பிள்ளைங்களுக்கு சுகர் இருக்கு. ரொம்ப பலவீனமான பொண்ணுங்க.. நாங்க எங்க செலவிலேயே புரோட்டீன் டின் எடுத்து வெச்சிருக்கோம். 11:30 மணிக்கு சத்துணவிலுள்ள முட்டையும், புரோட்டீனும் கொடுக்குறோம். இதுக்குன்னு ஒரு மாணவியை பொறுப்பா போட்டிருக்கோம். காலை உணவுக்கு என்ன செய்யலாம்னு யோசிச்சப்ப ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணியினர் வந்தாங்க. அவங்கதான் இப்ப காலை உணவ பாத்துக்கறாங்க. இப்ப பிரச்னை இல்லாம போவுது. இதுபத்தி நான் சொல்றதவிட அவங்ககிட்ட கேட்டா இன்னும் சொல்வாங்க'என்றார். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிரணி பொறுப்பாளர்கள் ரஹ்மத் ரில்வானா, ஜீனத் பேகம் ஆகியோருடன் ராபியத்துல் பஸரியா, ஜன்னத் பேகம், நஸ்ரின் பானு, வாஜி ஆகியோர் பள்ளிக்கே வந்தார்கள். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மண்டலப் பொறுப்பாளர் ஜி.சையத் முஹம்மத் உடனே இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். "ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி யின் சார்பாக நாங்க நிறைய பணிகள் செய் றோம். அதுபோல பல நிகழ்ச்சிகளும் நடத்து றோம். அதுபோல ஒரு நிகழ்ச்சிக்காக இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியையை சிறப்பு விருந்தினராக அழைக்க வந்தோம். அப்ப ப்ரேயர் நடந்திட்டிருந்திச்சு.
திடீர்னு ரெண்டு மாணவிங்க மயங்கி கீழே விழுந்திட்டாங்க. நாங்க ரொம்பவே பயந்திட்டோம்.'என்று ரஹ்மத் பேசி முடிக்க ஜீனத் தொடர்ந்தார். "ஆனா.. இது வழக்கமா நடக்றதுதான்னு மேடம் சொன்னாங்க.., ஏன் எதனால்னு விசாரிச்சோம். காலைல சாப்பிடாம பசியோட பலகிலோமீட்டர் தூரம் நடந்துவர்றதுனாலதான் இப்படி நடக்குதுன்னு சொன்னாங்க.. சரி நாமே சாப்பாடு கொடுக்கலாம்னு முடிவு பண்ணி ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில மக்கள் சேவைச் செயலாளர் ஐ.ஜலாலுதீன் அவர்களோட ஆலோசனை பண்ணுனோம்.

ஜமா அத் அகில இந்திய அளவில் மக்கள் சேவைப் பணிகளை முன்னெடுத்து வருகிறது.' "தினசரி என்னவெல்லாம் தர்றீங்க... எத்தனை பிள்ளைங்க சாப்பிடுறாங்க?' "தினசரி 60 முதல் 70 பிள்ளைங்கவரை சாப் பிடுறாங்க... கேப்பக்கூழ், கம்பங்கூழ், கோதுமை கஞ்சி, நோன்புக் கஞ்சி, உப்புமா, சேமியான்னு ஒவ்வொரு நாளும் ஒன்னு கொடுப்பாங்க... முதல் வகுப்புல 70 கிளாஸ் வாங்கி வெச்சிருக்கோம். இதுக்கு தனி பொறுப்பாளரை நியமிச்சிருக்கோம். 8:30 மணிக்குப் பிறகு வர்ற பிள்ளைங்களுக்குத் தர்றதில்லை' என்கிறார் தலைமை ஆசிரியை. "எவ்வளவு நாளா கொடுக்கறீங்க?' "ஆறு மாசமா கொடுக்குறோம். நாங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நாள் பொறுப் பேற்றிருக்கிறோம். இதுக்குன்னு தனியே ஆள் போட்டிருக்கோம். அவங்க சமைச்சதும் எங்கள்ல ஒரு ஆள் போய் அதைச் சாப்பிட்டுப் பார்த்துட்டுத்தான் அனுப்புவோம்.' என்று ஜமாஅத் மகளிர் அணியினர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே தலைமை ஆசிரியை குறுக்கிட்டார். "ஆமா.. இது ரொம்ப முக்கியம். இதனால ஸ்கூலுக்கு கெட்ட பெயர் வந்திடக்கூடாது. ஒரு பிள்ளைக்கு சாப்பாடு ஒத்துக்கலன்னாலும் பெரிய பிரச்னை ஆயிடும். எங்க டீச்சர் யாராவது சாப்பிட்ட பிறகுதான் பிள்ளைங்களுக்குக் கொடுப்போம்.' "மாணவிகள் என்ன சொல்றாங்க..?' "இதுக்கு ஹெல்த் ட்ரிங்க்ஸ்னு பேர் வெச்சிருக்காங்க.
எல்லாமே கிராமத்தைச் சேர்ந்த எளிய பிள்ளைங்க. வாரத்துல ஒரு நாள் இட்லி போட்டாங்க... அந்த பிள்ளைங்களுக்கு அது ரொம்ப பிடிச்சிருந்தது. பாவம் பிள்ளைங்க பசியினால அதிகம் சாப்பிட்டாங்க... இட்லின்னு தெரிஞ்சதும் நூற்றுக்கும் அதிகமான பிள்ளைங்க வந்திடுறாங்க.. பத்தாம போயிடுது.. அதனால அதை நிறுத்திட்டு இப்படியான ஹெல்த் ட்ரிங்க்ஸ் மட்டுமே கொடுத்துட்டிருக்கோம். இப்ப யாரும் மயக்கம் போட்டு விழுறதில்ல..'என்கிறார் தலைமை ஆசிரியை இந்திராணி மனநிறைவாக...! இதுபோன்று இன்னும் எத்தனை பள்ளிகளில் பசியுடன் நம் பிள்ளைகள் பாடம் கற்றுக் கொண்டிருக்கின்றார்கள். இந்தப் பிரச்னைகளுக்கான நிரந் தரத் தீர்வு எப்போது கிடைக்கும்? என்ற கேள்வி நம்மைச் சுழற்றியடித்தது. அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும். அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்த பாடுபடும் ஆசிரியர்கள் இன்னும் ஆர்வமுடன் இருக்கின்றார்கள்.
இவர்களிடம் அந்தப் பள்ளியின் தேவையைக் கேட்டறிந்து உதவி செய்ய வேண்டும். பேருந்து வசதியில்லாத பகுதிகளைக் கணக்கெடுத்து உடனடியாக பேருந்து வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். உயர்கல்வி நிறுவனங்களில் பெண்கள் தங்கும் விடுதிகளில் சானிடரி நாப்கின் எரியூட்டும் இயந்திரத்தை நிறுவ வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழுவான யூஜிசி அறிவுறுத்தியுள்ளதைப் போல மகளிர் பள்ளிகளில் அரசு செலவிலேயெ சானிடரி நாப்கின் எரியூட்டும் இயந்திரத்தைப் பொருத்த வேண்டும். மதியம் சத்துணவுத் திட்டத்தைக் கொண்டுவந் ததைப் போல காலைச் சிற்றுண்டி ஏற்பாடுகளையும் அரசு உடனடியாகச் செய்ய வேண்டும். அரசுப் பள்ளிகள், அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும்போதுதான் மக்கள் அரசுப் பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் தேடி வருவார்கள். அரசும் தொடர்புடைய அதிகாரிகளும், ஆட்சியரும் இந்தப் பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வைத் தர வேண்டும்.