நாடு மட்டுமல்லாது இந்திய முஸ்லிம் களுக்கும் மிகுந்த சோதனையான கால கட் டத்தில் தாங்கள் ஜமாஅத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுள்ளீர்கள், இந்தப் பொறுப்பினை முன்னெடுத்திட எவ்வாறு திட்டமிட்டுள்ளீர்கள்? ஆம், கண்டிப்பாக இது ஒரு மாபெரும் பொறுப்பு. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஆயி ரக்கணக்கான ஊழியர்கள், சார்பு அமைப்புகள், சங்கங்கள், நிறுவனங்களைக் கொண்ட ஒரு மாபெ ரும் இயக்கமாகும். இந்தப் பொறுப்பினை செவ்வனே செய்திடத் தேவையான ஆற்றலை எனக்கு வழங்கவேண்டும் என எல்லாம்வல்ல இறைவனை நான் பிரார்த்திக்கிறேன். சோதனைகளைப் பொறுத்தவரை, மிகப்பெரும் சவாலுடனும் அதற்குச் சமமான பெரும் வாய்ப்புகளைக் கொண்டதாகவே இருக்கும் என்பதை நான் நம்புகிறேன்.
நாம் வெறுமனே இத்தகைய சவால்களை மட்டுமே நோக்கியவர்களாக இருக்கலாம் அல்லது நமது பார்வையைச் சற்று திருப்பினால் அத்துடன் வரும் வாய்ப்புகளை நாம் காணமுடியும். தற்கால சூழல் நமக்கு பல்வேறு வாய்ப்புகளை அள்ளித்தருவதாக உள்ளது. நமது குறிக்கோள் இவற்றைச் சரியாக பயன்படுத்துவதாகவே இருக்க வேண்டும். தங்களது சொந்தக் கால்களில் நிற்பதன் தேவையை இந்திய முஸ்லிம்கள் உணர்ந்து வரு கிறார்கள். அடுத்தவர் மீதான சார்பும் நம்பிக்கையும் அவர்களுக்கு கடமையாக மாறிப்போனது. அவர்களால் அரசை மட்டுமே நம்பியிருக்க முடிவதில்லை. முஸ்லிம்களை சமூக, அரசியல் ரீதியாக சுய அதிகாரமிக்கவர்களாக மாற்றிட மிகவும் அடிப் படையான தேவையாக கல்வி விளங்குகிறது.

இரண்டாவதாக, இந்தச் சூழல் முஸ்லிம்களை அதிலும் குறிப்பாக அதன் இளைஞர்களை முஸ்லிம் அல்லாத பெரும்பான்மைச் சமூகத்தோடு உறவைக் கட்டமைத்திட ஊக்குவிக்கிறது. இது வெகு நீண்ட காலமாக உணரப்பட்டாலும் புறக்கணிக்கப்பட்டு வரும் ஒரு முக்கியமான தேவையாகும். நாம் பெரும் பான்மை மக்களுடன் சந்திப்புகளை மேற்கொள்ள வேண்டும். இன்று வளர்ந்துவரும் வெறுப்புப் பரப்புரையால் முஸ்லிம் அல்லாத பெரும்பான்மை மக்களுடன் கலந்துறவாடவும் அவர்களிடம் இஸ்லாமிய மார்க்கம் குறித்து விளக்கிடவும் வழிவகுக்கிறது. இத்தகைய சந்திப்புகளை இன்னும் துரிதப்படுத்தவும் வலுப்படுத்தவும் வேண்டும். நீங்கள் கடந்த ஆண்டுகளில் செயல் படுத்தப்படாத எந்த வகையான செயல்களை இப்போது மேற்கொள்ள விரும்புகிறீர்கள்? ஜமாஅத்தில், ஒரு தலைவரோ அல்லது தனி நபரோ அதன் முழு திட்டம், கொள்கை, முன்னுரி மைகளை வடிவமைப்பதில்லை. கூட்டுத் தலைமை என்ற முன்மாதிரியை நாங்கள் பின்பற்றுகிறோம்.
எங்களுக்கான மத்திய ஆலோசனைக்குழு இருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கான கொள்கை, செயல்திட்டத்தின்படி செயல்படும் பாரம்பரியம் எங் களுடையது. ஒவ்வொரு நான்கு ஆண்டிற்கும் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். மத்திய ஆலோச னைக்குழு சமகால சூழலைக் கருத்தில்கொண்டு அதற்கேற்ப தனது கொள்கை, செயல்திட்டத்தை வடிவமைக்கும். எதிர்வரும் ஜூன் மாதம் இந்த நான்காண்டுகளுக்கான கொள்கை, செயல்திட்டம் தயாராகி விடும். அதற்குப் பின்னரே இனிவரும் நான்கõண்டு திட்டம் குறித்து கருத்துச் சொல்ல முடியும். பெரும்பான்மை சமூகத்துடனான தொடர்பை வலுப்படுத்துவது முதன்மையான ஒன்றாகும். இது ஜமாஅத்தின் சார்பில் அல்லாமல் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகம் சார்ந்ததாக அமைய வேண்டும்.
இஸ்லாத்தின் செய்தியை அவர்களுக்கு கொண்டுசெல்லும் பணியைச் செய்திட முஸ்லிம் களை ஊக்குவிப்பதோடு அவர்களுக்குப் பயிற்சி யளித்திடவும் வேண்டும். முஸ்லிம்களை கல்வி, சமூகம், அரசியல் ரீதி யாக சுய அதிகாரமுடையவர்களாக மாற்றுவது இரண்டாவது மிக முக்கியத் தேவையாகும். இந்தியா ஓர் இளைய தேசமாகக் கருதப்படுகிறது. அதிகப்படியான இளைஞர்களின் எண்ணிக்கையை அது கொண்டுள்ளது. ஜமாஅத் இளைஞர்களை இலக்காகக்கொண்டு பல்வேறு அமைப்புகளை நிறுவியுள்ளது. அதில் மிகவும் முக்கியமானது இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) ஆகும். இந்த நான்காண்டுகளில் இளைஞர்களின் மீது சிறப்புக் கவனம் செலுத்தப்படும். வெறுப்பு அரசியல், சமூகப் பிரிவினை வன்முறைகளை நம் நாடு சந்தித்து வரும் சூழலில் ஜமாஅத் எந்த வகையான முயற்சி களை மேற்கொள்ளும்? இம்மாதிரியான சமூகப் பிரச்னைகளை நாம் அரசியல் ரீதியாக மட்டுமே அணுகுவது முக்கியமான ஒரு குறைபாடாகும்.
எப்பொழுதெல்லாம் இனவாத சக்திகள் நமக்குத் தீவிர அச்சுறுத்தலாக வருகிறதோ, அவற்றை நம்மால் முடிந்தவரை அரசியல் ரீதியாக தேர்தல் களத்தில் எதிர்கொண்டு வீழ்த்த முயல்கிறோம். சமீபகாலமாக, இத்தகைய தேர்தல் நேர அரசியல் ரீதியான செயல்பாடுகள் எதிர்வினையான பலனையே தந்துள்ளது. இனவாதம் ஒரு சமூகம் சார் பிரச்னையாகும். அதன் வேர்கள் சமூகக் களத்தில்தான் உள்ளது. சமூக இயங்குதலின் வெளிப்பாடே அரசியலாகும். ஆகவே, சமூகத்தில் நடைபெறும் நிகழ்வுகள் அரசியல் களத்தில் வெளிப்பட்டே தீரும். நெடிய முயற்சிகளின் வாயிலாகவே இனவெறுப்பு சமூகத்தில் பரப்பப்படுகிறது. அதே நெடிய அளவிலான முயற்சிகளின் மூலமாகவே அதனை எதிர்கொள்ள முடியும்.
கலந்துரையாடல்களுக்கான சூழல், விவாதங்கள், சமூகத் தொடர்புகளை வலுப்படுத்துவதே நமது பிரதான நோக்கமாக இருக்கவேண்டும். சமூகங்களுக்கு இடையேயான தொடர்பு வலுப்படுத்தப்பட வேண்டும். இந்திய முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இல்லை. சில வகையில் அது குறையாகத் தெரிந்தாலும் தன்னகத்தே நன்மைகளைக் கொண்டதாவே இருக்கிறது. இந்தியா முழுவதும் பல்வேறு சமூகங்களுடனும் மனிதத் தொடர்பை மேற்கொள்ள இது உதவுகிறது. ஆகவே, சகோதர சமுதாயச் சகோதரர்களிடம் நிலவும் இஸ்லாம், முஸ்லிம்கள் குறித்த தவறான கருத்தோட்டத்தைக் களைய மேற்கொள்ளப்படும் முயற்சிகள் கண்டிப்பாக மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இவ்வகையான தொடர்பின் மூலம் ஊடகங்கள் வெறுப்பை பரப்பும் அமைப்புகளால் முன்னெடுக்கப்படும் தவறான பிம்பத்தை மாற்ற முடியும். அழைப்புப்பணியே நமது கடமையாகும்.
இந்திய முஸ்லிம்களின் தற்போதைய முக்கிய தேவையாகவும் இது இருக்கிறது. இதனை முன்னெடுக்க கடந்த நான்காண்டில் பலவகையான அமைப்பியல் முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டோம். தேசிய அளவிலான ஜனநாயகம், சமூக நல்லிணக்கத்திற்கான மன்றம் (Forum for Democracy and Communal Amity (FDCA)) வலுப்படுத்தப்பட்டது. அதன் மூலம் பல்வேறு சமூகங்களைச் சார்ந்த பல அறிஞர்களை நாம் ஒருங்கிணைத்துள்ளோம். அதனைப் போலவே, தார்மிக் ஜன் மோர்ச்சா மூலமாக சமயத் தலைவர்களை ஒன்றிணைத்து அமைதி நல்லிணக்கத்திற்கான செய்தியைப் பரப்பி வருகிறோம். அடிமட்ட நிலை வரையிலான குடியிருப்புகள் கிராம அளவிலான மன்றங்கள் "சத்பாவனா மன்ச்' எனும் பெயரில் நிறுவப்பட்டு பல்வேறு சமூக மக்களும் ஒன்றாக அமர்ந்து தங் களுக்கிடையேயான பிரச்னைகளை பேசவும் விவாதிக்கவும் களம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவை போன்ற முன்னெடுப்புக்களை வலுப் படுத்த வேண்டும். வெறுப்பு அரசியல் எனும் இயந்திரத்தின் முக்கிய எரிபொருளாக விளங்குவது பிரிவினையும் நம்பிக்கையின்மையுமே ஆகும். சமூக அளவில் இந்தப் பிரச்னைக்கு நாம் முகம் கொடுக்காவிட்டால், நம்மால் இனவாத அரசியலை முறியடிக்க முடியாது. இந்திய முஸ்லிம்கள் சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக தசாப்தங்களாக ஒதுக்கப் பட்டுள்ளனர். இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்? இது மிகவும் சிக்கலான பிரச்னையாகும். இதற்கு பல்வேறு உள் வெளிக் காரணிகள் இருக்கின்றன. இந்தச் சூழலுக்கு இவை இரண்டையும் சரிசமமாக நாம் குறிப்பிடலாம். இந்தியப் பிரிவினையின் போது குறிப்பாக வடஇந்தியாவில் சமூகம் எதிர்கொண்ட கலவரங்களும் அதனைத்தொடர்ந்து ஒட்டுமொத்த மேட்டுக்குடிகளின் இடம்பெயர்தல் பெருமளவிலான பாதுகாப்பின்மை உணர்வும் சுதந்திரத்திற்குப் பின் முஸ்லிம் சமூகத்தின் வளர்ச்சிக்கான ஆர்வத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பல மாநிலங்களின் அரசுகளும் அதிகார வர்க்கமும் அதற்குச் சாதகமாக இல்லாமல் இருந்தன.
எனினும் உள்நாட்டு பிரச்னைகளும் இதற்குக் காரணமாகும். நமது முன்னுரிமைகளும் கவனமும் சரியானதாகவும் நமது வளர்ச்சி, சுய அதிகாரம் பெறுவதிலுமே இருக்க வேண்டும். வெளிக் காரணிகளையும் அமைப்புகளையும் சார்ந்தவர்களாக நாம் இருக்கக்கூடாது. நாம் மாறாத வரை அல்லாஹ் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை என்ற குர்ஆனிய வழிமுறையின்மீது மிகுந்த நம்பிக்கைகொண்டவர்களாக நாம் இருக்க வேண்டும். நமது விவகாரங்களின் மீதான முழுப் பொறுப்பையும் நாம் ஏற்க வேண்டும். அமைப்பியல் நிறுவனங்களில் நிகரான வாய்ப்பு கள் வழங்கப்பட அரசு அளவிலான கோரிக் கையை நாம் முன்வைக்க வேண்டும். சச்சார் இதர கமிட்டிகள் இவ்வாறான வாய்ப்புகள் வழங்கிட பரிந்துரைத்துள்ளன. ஆனால், நமது வளர்ச்சிக் கும் முன்னேற்றத்திற்கும் இவ்வாறான வாய்ப்பு கள் கிட்டாமை ஒரு தடையாக இருக்கக் கூடாது. நமக்குரிய நிறுவனங்களை நாமே நிறுவ வேண்டும். நமது சமூக, பொருளாதார, கல்வித் தேவைகளை பூர்த்தி செய்ய அரசுகளையும் பிற வெளிப்புற சக்திகளையும் எதிர்பாராமல் இருக்கும் வகையிலான அமைப்புகளை நாமே உருவாக்க வேண்டும்.
நம் இளைஞர்களிடம் இத்தகைய வளர்ச்சியை முன்னெடுக்கும் சுதந்திரச் சிந்தனையை வளர்த்திட வேண்டும். இவ்வகையான ஒதுக்கப்பட்ட சூழலில் இருந்து முஸ்லிம்களை மீட்க முடியாமல் போனது நம் சமூகத்தலைவர்களின் தோல்வி யாக நீங்கள் கருதுகிறீர்களா? கண்டிப்பாக, சமூகத்தின் ஒவ்வொரு பின்னடைவிற்கும் தோல்விக்கும் அதன் தலைமையும் ஒரு காரணமாகும். ஆகவே முஸ்லிம்கள் ஒதுக்கப்படும் போதும் அவர்களது அடிப்படை பங்கைப் பெறுவதற்கு முடியாமல் போவதற்கும் அதன் தலைமையும் பொறுப்பேற்க வேண்டும். ஆனால், எத்தகைய இக்காட்டான சூழலில் நமது சமூகத் தலைமை செயல்படுகிறது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். தேசப் பிரிவினைக்குப்பின் நமக்குச் சாதகமான சூழல் அமையவில்லை. ஒருவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் போது அவரால் கல்வி, பொருளாதார சுய அதிகாரத்தில் முனைப்புக் காட்ட முடியாது. நல்வாழ்வும் பாதுகாப்பும் அவரது பிரதான இலக்காக மாறிவிடுகிறது. பல தசாப்தங்களாக சமூகத்தில் நம்பிக்கை, பாதுகாப்பு உணர்வை ஊட்டுவதே சமூகத் தலைமையின் பெரும் சவாலாக இருக்கிறது.
ஆனால் தற்போது, நாம் தன்னம்பிக்கையுடன் நம்மை உயர்த்திக்கொள்வதிலும், குறிப்பிட்ட உலகளாவிய மக்களுக்கான கோட்பாடுகள் மதிப்பு களின் ஜோதியை ஏந்தியவர்கள் எனும் முக்கிய பாத்திரத்தை ஏற்கக்கூடியவர்களாக மாற வேண்டும். முஸ்லிம் சமூகத்திற்குள்ளேயே ஒதுக்கப் பட்டும், வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மறுக்கப் பட்டும், கூட்டு விவகாரங்களில் பங்கேற்பதில் இருந்தும் பெண்கள் ஒதுக்கப்பட்டு வரு கின்றனர். இந்த பிரச்னையை முஸ்லிம் தலைவர்கள் தடுக்கத் தவறியது ஏன்? முஸ்லிம் பெண்கள் ஒதுக்கப்படுகிறார்கள் என்பது மேம்போக்கான வாதமாகும். இதனை முழுவதும் உறுதி செய்திட எந்தத் தரவுகளும் நம்மிடம் இல்லை. கல்வியறிவு முஸ்லிம் பெண்களைச் சென்றடைந்துள்ளது என்பதே எங்களின் அவதானிப்பாகும். முஸ்லிம் இளைஞர்களை விட முஸ்லிம் இளம்பெண்கள் வெகு தொலைவு முன்÷னறியுள்ளனர். முஸ்லிம்களில் நான்கு பேர் தரவரிசையில் இடம்பெற்றால் அதில் மூவர் இளம்பெண்கள் என்ற சராசரியிலேயே இருக்கிறார்கள். ஆகவே கல்வி மட்டுமல்லாது பல தளங்களிலும் முஸ்லிம் பெண்கள் முன்னேறி வருகிறார்கள்.
வேலைவாய்ப்பு பொருளாதார நடவடிக்கை களின் அடிப்படையில் பார்த்தால், இஸ்லாம் அதற்கே உரிய ஒரு நோக்கை கொண்டுள்ளது. இஸ்லாம் பாலின அடிப்படையிலான சமூகப் பங்காற்றுதலில் நம்பிக்கை கொண்டுள்ளது. பெண்களின் நிலை குறித்தும் அவர்கள் வளர்ச்சியடைந்திருக்கிறார்களா இல்லையா, அவர்களுக்கு வாய்ப்புகள் கிட்டுகிறதா இல்லையா என்பதை அளவிடுவதற்கான அளவுகோலாக கல்வியை எடுத்துக்கொள்ளலாம். இந்த அளவுகோலின்படி கடந்த இரண்டு, மூன்று தசாப்தங்களில் முஸ்லிம் பெண்கள் பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளனர். சில பகுதிகளில் பிரச்னைகள் இருப்பதையும் நாம் உணர வேண்டும். இஸ்லாம் பெண்களுக்கு உரிமைகளை வழங்கியுள்ளபோதும் சமூகம் அதனை அவர்களிடமிருந்து பறித்துக்கொள்கிறது. இத்தகைய போக்கு இன்றளவும் நிலவுவதற்கு இந்தியப் பண்பாட்டின் தாக்கமும் இஸ்லாம் காட்டி டாத ஐதீகங்களுமே காரணம் ஆகும். எடுத்துக்காட் டாக, இஸ்லாம் பெண்களுக்கு சொத்துரிமையை வழங்கியுள்ளது. ஆனால் இந்திய முஸ்லிம் குடும்பங்களில் பெண்கள் அவர்களின் சொத்துரி மையைப் பெறுவது அரிதானதாக உள்ளது. இத்தகைய பிரச்னைகள் அறியாமையுடன் தொடர்புடைய தாகவும். இஸ்லாமிய அறிவு, புரிந்துணர்வின் குறை பாட்டினõலேயும் நிலவுகிறது. சமூகம் கல்வியறிவு பெற வேண்டும். இந்த ஒட்டுமொத்த பிரச்øனயும் முஸ்லிம் சமூகத்தின் கல்வியின்மை, அறியாமையுடன் தொடர்புடையது.
கல்வியறிவு, விழிப்பு உணர்வு இஸ்லாம் குறித்த உண்மையான புரிந்து உணர்வைப் பரப்புவதன் மூலமே இதனை எதிர்கொள்ள முடியும். முஸ்லிம் சமூகத்தில் பல குறுங்குழுவாத மோதல்கள் நடைபெற்றுள்ளன. இவை ஏன் இந்த சமூகத்தை விட்டு மாறுவதில்லை? இதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. நடைமுறையிலுள்ள பாரம்பரிய மத குருமார்களின் அமைப்பும் அவர்களின் மரபும் இதற்கு முதற் காரணமாகும். இவை அனைத்தும் முன்னே ஏற்பட்ட குழுவாத பிரிவினைகளின் அடிப்படையிலானவை. இரண்டாவதாக, வெளிப்புற காரணிகளும் இதற்குக் காரணமாகும். இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பெரும் அச்சுறுத்தலாக யார் கருதுகிறார்களோ, அவர்களுக்கு இந்த பிரித்தாளும் சூழ்ச்சி மிகவும் சுலபமான வழிமுறையாக உள்ளது. இது போன்ற பல்வேறு சாதிகளின் மூலமாகவும் இதனை அவர்கள் உருவாக்கினர். இதுபோன்ற வேற்றுமைகளுக்கு அவர்கள் தூபமிடுகின்றனர். இன்றைய உலகளாவிய புவிசார் அரசியலில் ஏற்பட்டுள்ள திருப்பத்தின் அடிப்படையில் ஆதிக்க சக்திகள் அவர்களது நலன்களைப் பெருக்கிக் கொள்ள இத்தகைய சூழ்ச்சியை மேற்கொண்டு பிரிவினையை வளர்க்கிறார்கள். சூழல் எப்படியானாலும், இவற்றை நீக்க முடியும் என நான் மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளேன்.
முந்தைய கால, தற்கால இளைஞர்களை ஒப்பீடு செய்தால் அவர்களுக்கிடையே மாபெரும் வித்தி யாசம் நிலவுகிறது. இவ்வகையான பிரிவினைகள் அவர்களிடம் குறைந்துவருகிறது. மக்கள் ஒன்றிணைந்து வருகின்றனர். பொதுவான காரணிகளுக்காக, பொதுவான நலன்களை அடைய நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என் பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். இத்தகைய செயல்பாட்டில் இந்திய முஸ்லிம்கள் மிகச் சிறந்து விளங்குகின்றனர். அவர்கள் முழு இஸ்லாமிய உலகிற்கும் அதன் பாதையை காட்டும் வல்லமை மிக்கவர்களாகவும் உள்ளனர். அனைவரும் ஒன்றிணைந்து பொது நலனை முன்னெடுக்க பொதுத் தளங்களில் தொண்டாற்றும் நாங்கள் பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் கிளை அமைப்புகளைத் தொடங்கியுள்ளோம். பல்வேறு பிரிவுகள், வெவ்வேறு சித்தாந்தங்கள் குழுக்களைச் சார்ந்த மக்கள் இங்கு ஒன்றாக அமர்ந்து தங்களுக்கிடையேயான பிரச்னைகளுக்கான தீர்வை அடைகின்றனர். அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம், அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸே முஷவ்வரத் ஆகியவை இதில் அடங்கும்.
மாநில அளவில் இவற்றைப் போன்ற பல்வேறு பிற அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இவை மட்டுமின்றி, வட்டார அளவில் சங்கங்கள் பொது கூட்டமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. கருத்து வேறுபாடு என்பது இயற்கையானது. உலகம் முழுவதும் சுமார் 1.5 பில்லியன் மக்களையும் இந்திய அளவில் 200 மில்லியன் மக்களைக் கொண்ட சமூகம் ஒவ்வொரு பிரச்னை யிலும் ஒன்றிணைவது சாத்தியமற்றது. இந்த சமூகத்தில் கருத்து வேறுபாடுகள், செயல்பாட்டு முரண்பாடுகள், வேறுபாடுகள் இருக்கவே செய்யும். எனவே, கருத்துவேறுபாடு என்பது இயற்கையானது. எவ்வாறு இருப்பினும், இத்தகைய கருத்து வேறுபாடுகளுக்கிடையேயும் பொதுத் தளத்தில் நாம் ஒன்றிணைய வேண்டும். இத்தகைய ஒற்றுமையை விரும்புபவர்களாகவே இளைஞர்கள் இருக்கின்றார்கள். எனவே, ஒற்றுமையை அடைந்திட நாம் முயல வேண்டும்.
பெருகிவரும் இஸ்லாம் மீதான அச்ச உணர்வையும் உலக அளவில் முஸ்லிம் களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களையும் நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்? இதன் வேர், காரணிகள் எவை? இதற்கு இரண்டு, மூன்று காரணிகள் உள்ளன. ஒன்று, கம்யூனிசம், முதலாளித்துவத்தின் வீழ்ச் சிக்குப் பின்பும் இஸ்லாம் சித்தாந்த வலிமையுடன் எழுச்சி பெற்றது. மிகவும் முக்கியமான சித்தாந்த சக்தியாக இஸ்லாம் உருவெடுத்துள்ளது. இஸ்லாமிய குடும்பவியல், நம்பிக்கை கோட் பாடுகள், பண்பாட்டு மதிப்பீடுகள், பொருளாதாரம், பொருளாதார அமைப்பு முறைகள் ஆகிய அனைத்தும் ஒட்டுமொத்த உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. எனவேதான், இஸ்லாம் சித்தாந்த வலிமையுடன் எழுச்சி பெற்றுள்ளது எனக் குறிப்பிட்டேன். இதுவே இஸ்லாத்தை வெறுக்கும் பிரிவினருக்கு மத்தியில் பயத்தை உருவாக்கி யுள்ளது. இரண்டாவதாக, உலகின் பேசுபொருளாக இன்று இஸ்லாம் மாறியுள்ளது. அனைத்து இடங் களிலும் இஸ்லாம் குறித்த விவாதங்கள் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், உண்மையான இஸ்லாத்தின் தூதினை அதற்கு ஒப்பான பலத்துடனும் திறனுடனும் கொண்டுசெல்வதற்கு முஸ்லிம்களால் முடிவதில்லை. இஸ்லாம் ஒரு மாற்று சித்தாந்த சக்தியாக உருவெடுத்துவரும் இந்தத் தருணத்தில் இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.
இவ்வாறாக நாம் இழக்கும் ஒவ்வொரு வாய்ப்புகளும் தவறான புரிதல்களை உருவாக்குவதுடன், அவை வேக மாகவும் பரவி விடுகிறது. மூன்றாவது மிக முக்கிய காரணி புவிசார் அரசியல். "தீவிரவாதத்திற்கு எதிரான போர்' என்ற முழக்கத்துடன் செப்டம்பர் 11 க்குப் பிறகு உருவாக்கப்பட்ட ஒட்டுமொத்த சூழலை நாம் உற்று நோக்கினால், இஸ்லாம், முஸ்லிம்கள் மீது அவநம்பிக்கை ஏற்படுத்துவதே தங்களின் பிரதான முன்னுரிமையாக சில உலக ஆதிக்க சக்திகள் கருதினர். அதுவே அவர்களின் புவிசார் அரசியலின் தந்திரமாகவும் இருந்தது. இந்தச் செயல் தவறான புரிதல்களுக்கு வழிவகுத்தது. மேற்சொன்ன அத்துனை காரணிகளும் இன்றைய சூழலிற்கு வழிவகுத்தது. இன்றைய தகவல்தொடர்பு யுகத்தில், நாம் இஸ்லாமிய செய்தியை மக்களுக்கு பரிமாறும்போது இதுவே சிறந்த வாய்ப்பாக அமையும். இந்தியா குறித்த உங்களது கனவு என்ன? இஸ்லாத்தின் செய்தியை பரிமாறுவதும் எனது சக இந்தியர்களிடம் இஸ்லாம் குறித்த சரியான புரிந்துணர்வை ஏற்படுத்துவதும் எனது முதல் கனவாகும். ஏனென்றால், எனது சக குடிமக்களை நான் நேசிக்கிறேன். நான் கண்டறிந்த உண்மையை அவர்களிடம் கொண்டுசேர்ப்பது அவர்களின் மீது என்னுடைய உரிமையாகும். இஸ்லாம் அனைவருக்குமானது.
இது நம் படைப்பாளனின் செய்தி. இச்செய்தி முஸ்லிம் குடும்பங்களில் பிறந்தவர்களுக்கு மட்டுமே உரித்தானதல்ல. இது ஒவ்வொரு மனிதனுக்கும் உரிய செய்தியாகும். இதுவே ஈடேற்றத்திற்கும் வெற்றிக்குமான பாதையாகும். ஆகவே நம் மக்கள் ஒருவரையொருவர் புரிந்துணரவும், இஸ்லாம் எதனைக் குறிக்கிறது அதன் செய்தி என்ன என்பதை உணரவும் முற்பட வேண்டும். இஸ்லாத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் அதற்காக உழைக்க வேண்டும். இரண்டாவதாக, இந்தியா முழுவதும் அமைதி நிலவ வேண்டும். இங்கு வாழும் பல்வேறு சமூகங் களும் பரஸ்பர புரிதல், உரையாடல்கள், நேர்மையான உண்மையின் தேட்டம் ஆகியவற்றின் அடிப்படை யிலான உறவுமுறையினை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வகையான உறவு இங்கு நிறுவப்படவேண்டும். இதன் மூலம் உயர்ந்த பல்சமய உறவு, பரஸ்பர நம்பிக்கை, சகோதரத்துவம் ஆகிய பண்புநலன்கள் கொண்ட இந்தியாவை நான் கனவு காண்கிறேன். நீதி இதன் மூன்றாவது கூறாகும். இதுவே இஸ் லாமிய அடிப்படை நோக்கமாகும். அனைவரும் நீதியை பெற வேண்டும், அதிலும் குறிப்பாக அடித்தட்டு மக்கள், தலித்கள், ஆதிவாசிகள், சிறுபான்மையினர், பெண்கள், ஏழைகள், கிராமவாசிகள் ஆகியோருக்கான நீதி கிடைக்க வேண்டும். பொருளாதார சமத்துவம் நிறுவப்பட வேண்டும். சுதந்திரம் பெற்று 70 ஆண்டு காலம் ஆகியும் உலக அரங்கில் மிகவும் ஏற்றத்தாழ்வுடைய நாடுகளில் ஒன்றாக இந்தியா கருதப்படும் நிலை உருவாகியுள்ளது மிகவும் வாய்ப்புக்கேடாகும். பொருளாதார, சமூக, நீதி நிலைநõட்டப்பட வேண்டும். அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.