மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

சியோனிசத்தை எதிர்த்து ஃபலஸ்தீனுக்கு ஆதரவாக யூதர்கள் மாநாடு
K. ரியாஸ், ஆகஸ்ட் 16-31, 2025



முதல் சியோனிச மாநாடு நடந்து 128 ஆண்டுகள் கழித்து இப்போது சியோனிச எதிர்ப்பு மாநாடு நடந்துள்ளது. வியன்னாவில் நடைபெற்ற யூத சியோனிச எதிர்ப்பு முதல் மாநாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சியோனிச எதிர்ப்பு யூதர்கள், யூதர் அல்லாதவர்களால் நடத்தப்பட்டது. 2026இல் அடுத்த மாநாட்டை நடத்தவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள ஃபலஸ்தீனர்கள் சியோனிச இஸ்ரேலை அனைத்து வகையிலும் எதிர்த்துப் போராடுவதற்கு ஆதரவாக இந்த மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. யூதர்களின் பெயரைக் கொண்டு சியோனிஸ்டுகள் ஃபலஸ்தீனர்கள் மீது நடத்திய ஆக்கிரமிப்பு, இனப்படுகொலை, போர்க் குற்றங்கள், பட்டினியை ஆயுதமாக்குதல் கண்டிக்கத்தக்கது. சர்வதேசச் சட்டங்கள், ஐ.நா, ஐ.சி.சி, ஐ.சி.ஜே என அனைத்திற்கும் எதிராக இஸ்ரேல் நடந்த பின்னரும் இஸ்ரேல் மீது எந்தத் தடைகளும் விதிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது.

மேற்கத்திய சக்திகளின் தீவிரமான ஆதரவு இல்லாமல் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்பட்டிருக்கவோ அல்லது நிலைத்திருக்கவோ முடியாது. இஸ்ரேலுக்கு ஆதரவாகச் செயல்பட்டதன் மூலம் இந்த நாடுகளும் இதில் தார்மிகப் பொறுப்பைப் பகிர்ந்து கொள்கின்றன.

காஸா இனப்படுகொலையும் ஃபலஸ்தீன மக்களின் வரலாற்று உறுதியும் ஒவ்வொரு சியோனிச பொய்யையும் உலகிற்கு அம்பலப்படுத்தியுள்ளன. கடந்த 128 ஆண்டுகளில் அடையாததை காஸா இரண்டு ஆண்டுகளுக்குள் சாதித்துள்ளது. ஒடுக்கப்பட்ட ஒரு நாட்டின் விடுதலையை வெளியில் இருந்து வந்து தான் ஒருவர் பெற்றுத் தரவேண்டும் என்ற மாயையையும் இது உடைக்கிறது.

உலகம் சியோனிசத்திற்கு எதிராகத் திரும்பியுள்ள நிலையில், அதிகாரம் பெற்ற சியோனிச எதிர்ப்பு யூத சமூகங்கள் இப்போது சியோனிசத்தை மேலும் அம்பலப்படுத்துவதிலும், ஃபலஸ்தீனர்களுக்கு உலகளாவிய ஆதரவைத் திரட்டுவதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இனவெறி, இனப்படுகொலை ஆட்சிக்கு எதிராக ஃபலஸ்தீனின் காலனித்துவ நீக்கத்திற்கான இயக்கத்தில் சேர அனைத்து இஸ்ரேலிய யூதர்களையும் நாங்கள் அழைக்கிறோம். ஃபலஸ்தீனில் நமது பகிரப்பட்ட வாழ்க்கையையும் சுதந்திரங்களையும் வரலாற்று ரீதியாக மதிக்கப்பட்ட அந்த இடத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய நேரம் இது. ஃபலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் சியோனிஸ இஸ்ரேலுக்கு எதிராகவும் இம்மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கடைசிப் பக்கம்

மேலும் தேடல்