மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • தொடர் சரிவில் அதானி குழும பங்குகள்
  • அதானி போர்ட், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன், கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ், அதானி வில்மர் நிறுவன பங்குகளின் விலை கடும் சரிவு!
  • அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து அதானி குழும பங்குகள் விலை சரிவைச் சந்தித்துள்ளன.

முழுமை இஸ்லாம்

உச்சநீதிமன்றம் மீட்டெடுத்த நம்பிக்கை
அலீ ஸலாமி, 16-31 ஜனவரி 2023


பாஜக ஆட்சி நடத்தும் உத்தரகாண்ட் மாநிலத்தின் நைனிடால் அருகேயுள்ள ஹல்த்வானி பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் 4000க்கும் மேற்பட்ட இஸ்லாமியக் குடும்பங்களின் வீடுகளை இடிப்பதற்கு உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்றம் 2022 டிசம்பரில் உத்தரவிட்டது.

அப்பகுதி இரயில்வேக்குச் சொந்தமான பகுதி என்றும், ஒருவார காலத்திற்குள் வீடுகளைக் காலி செய்யாவிட்டால் எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லாமல் அகற்றப்படுவார்கள் என்றும் தெரிவித்தது. இதற்கு மறுத்து எதிர்ப்புகள் எழுந்த வேளையில் "50 ஆயிரம் மக்களை ஒரே இரவில் வெளியேற்ற முடியாது. அந்த நிலத்தில் அவர்களுக்கு உரிமை இல்லை என்றாலும், அவர்களை வகைப்படுத்த வேண்டும். இரயில்வேக்கு அந்த நிலம் அவசியம் எனில், பொதுமக்களுக்கு மாற்று இடம் அளிக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தை மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும். இந்தப் பிரச்னைக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும்' என்றுகூறி உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இத்தடை உத்தரவுத் தீர்ப்பை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் வரவேற்றுள்ளது.

இப்பகுதியில் கிட்டத்தட்ட 90 விழுக்காட்டினருக்கும் அதிகமாக இஸ்லாமியர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆக்கிரமிக்கப்பட்ட இடம் எனக் கூறப்படும் பகுதியில் 4 ஆயிரம் வீடுகள், 4 அரசு பள்ளிகள், 11 தனியார் பள்ளிகள், ஒரு வங்கி, 10 பள்ளிவாசல்கள், 4 கோவில்கள் உள்ளிட்டவை உள்ளன. விதிவிலக்கின்றி எல்லா வரிகளையும் அம்மக்கள் தொடர்ந்து செலுத்தி வரும் சூழலில் திடீரென்று இது இரயில்வே துறைக்குச் சொந்தமான இடம் அனைவரும் காலி செய்யவேண்டும் என்ற அநீதியான உத்தரவு அப்பகுதியில் வாழும் முஸ்லிம்களைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தடை உத்தரவின் மூலம் நீதித்துறை மீதான நம்பிக்கையை உச்சநீதிமன்றம் மீட்டெடுத்துள்ளது என அகில இந்தியப் பேரியக்கமான ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் வரவேற்றுள்ளது. அதுமட்டுமின்றி 4000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கியிருக்கிறது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தேசியச் செயலாளர் மலிக் முஹ்தஸிம் கான், மூத்த ஊடகவியலாளர் பிரசாந்த் டன்தன், அகஇகீஇன் தேசியச் செயலாளர் நதீம் கான், குகஉஇகூ நிறுவனத்தின் லயீக் அஹமத் கான், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தேசியத் துணைச் செயலாளர் இனாமுர் ரஹ்மான் ஆகியோர் அடங்கிய உண்மை கண்டறியும் குழு அங்குள்ள மக்களைச் சந்தித்து விரிவான அறிக்கையைத் தயாரித்துள்ளனர்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கடைசிப் பக்கம்

மேலும் தேடல்