மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சட்ட அமைப்பைச் சீர்குலைக்கும் புதிய குற்றவியல் சட்டங்கள் - பத்திரிகையாளர் சந்திப்பில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கண்டனம்

பெண்ணுலகம்

குதிரையேற்றத்தில் உலக சாதனை படைத்த நிதா அன்வர்
குளச்சல் ஆசிம், September 16-30, 2023


குதிரையேற்றத்தில் உலக சாதனை படைத்த  நிதா அன்வர்

 

பிரான்சில் நடைபெற்ற சர்வதேச குதிரையேற்றப் போட்டியில் பங்கேற்று சாம்பியன் பட்டம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார் மலப்புரம் மாவட்டம் திரூரைச் சேர்ந்த அன்வர் அமீன் - மின்ஹத் தம்பதியர் மகளான நிதா அன்வர்.

25 நாடுகளைச் சேர்ந்த 70 பேர் கலந்து கொண்ட போட்டியில் இந்தியாவிலிருந்து கலந்து கொண்ட ஒரே நபர் எனும் சிறப்புக்குரியவர் 21
வயதான நிதா.

சர்வதேச அளவில் மிக நீண்ட தூரத்தைக் கொண்ட இந்தப் போட்டியில் நிதா அன்வர் 120 கி.மீ தூரத்தை ஏழு மணி நேரத்தில் கடந்து சாம்பியன் பட்டத்தை வென்று உலக சாதனை படைத்துள்ளார். கூடவே குறைந்த நேரத்தில் அதிக தூரத்தைக் கடந்ததற்காக கூடThree Star Rider எனும் சிறப்பையும் பெற்றுள்ளார்

120கி.மீ தூரமுள்ள குதிரையேற்றப் போட்டியை நான்கு கட்டங்களாக ஓடி முடிக்க வேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும் குதிரையை கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்து குதிரையின் ஆரோக்கியம் ஓடுவதற்குத் தகுதியாக இருந்தால் மட்டுமே அடுத்த கட்டத்துக்கு அனுமதிப்பர் எனும் நிலையில் ஒரே குதிரையில் ஓடி சாதனை படைத்த முதல் நபர் எனும் பெருமையும் இவருக்கு உண்டு.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கடைசிப் பக்கம்

மேலும் தேடல்