மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

ஃபலஸ்தீன் விடுதலைக்கான இறுதி மூச்சும் எழுத்தும்
குளச்சல் ஆசிம், நவம்பர் 1 - 15, 2023


ஃபலஸ்தீன் விடுதலைக்கான இறுதி மூச்சும் எழுத்தும்

அக்டோபர் 21ஆம் தேதி அவரது வலைதளத்தில் இதைப் பதிவு செய்த போது அவருக்குத் தெரியாது இதுதான் தனது இறுதி  எழுத்துகள் என்று.

ஃபலஸ்தீனைச் சேர்ந்த 32 வயது எழுத்தாளரான ஹிபா அபூ நதா காஸா பிராந்தியத்தில் இஸ்ரேல் நடத்தி வரும் மனிதவேட்டைகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தவர்

இறுதியாக அவர் எழுதிய உருக்கமான வார்த்தைகள் இவை

‘நாம் இப்போது ஏழாவது சுவனத்தில் இருக்கிறோம்

காஸாவின் மக்களுக்குச் சுவனத்தில் ஓர் இடம் தனியாக உருவாகி வருகிறது

அங்கே நோயாளிகளையும், இரத்தக் கறையையும் பார்க்காத டாக்டர்கள் இருப்பார்கள்

அங்கே அடக்குமுறைக்கு ஆளான மாணவர்களைப் பார்க்காத ஆசிரியர்கள் இருப்பார்கள்

அங்கே சுவனத்தின் இனிய செய்திகளையும் படங்களையும் மட்டுமே பகிரும் பத்திரிகையாளர்கள் இருப்பார்கள்

கவலைகள், வேதனைகள் மறந்த குடும்பங்கள் கூட அங்குண்டு

இவர்கள் எல்லோரும் காஸாவைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்

மரணம் என்பது காஸாவாசிகளுக்கு ஒரு பொருட்டே கிடையாது

எந்த நிமிடமும் மரணத்தைக் காத்துக் கிடப்பவர்கள் தான் ஃபலஸ்தீனர்கள்

சுகந்தம் மணம் வீசும் புத்தம் புதிய காஸா நகரம் சுவனத்தில் உருவாகிறது. 

என்று எழுதி ஹிபா பதிவிட்ட சில நிமிடங்களில் இஸ்ரேலின் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பலியாகி ஃபலஸ்தீன் விடுதலைப் போருக்காகத் தம் உயிரைத் தியாகம் செய்துள்ளார்.

ஃபலஸ்தீனின் யூனிஸ் பகுதியைச் சேர்ந்த ஹிபா காஸா இஸ்லாமியப் பல்கலையில் இளங்கலை பயோ கெமிஸ்ட்ரியும், காஸா அல் அஸ்ஹர் பல்கலையில் கிளினிக்கல் கெமிஸ்ட்ரி முதுகலை படிப்பையும் முடித்து கல்விப்புலம் சார்ந்து பணியாற்றி வந்தவர்.

கூடவே ஃபலஸ்தீன் இலக்கியத்தின் நவீன முகமாகவும் அறியப்பட்ட ஹிபா எழுதிய OXYGEN Is Not For The DEAD எனும் நாவலுக்கு அண்மையில் ஷார்ஜா சர்வதேச இலக்கிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கடைசிப் பக்கம்

மேலும் தேடல்