மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

அரேபியாவில் அசத்தும் இந்தியர்கள்
குளச்சல் ஆசிம், 16 - 31 டிசம்பர் 2023


அரேபியாவில் அசத்தும் இந்தியர்கள்

சவூதி அரேபிய நாட்டின் கொடியைக் கைகளில் ஏந்தி காட்சி தரும் இவர்கள் இருவரும் இந்தியர்கள். கேரள மாநிலம் கொடுவள்ளியைச் சேர்ந்த கதீஜா நிஸா, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஷேக் மஹத்ஷா. இருவரின் பெற்றோரும் சவூதி அரேபியாவில் பணியாற்றி வருவதால் இவர்கள் அங்குள்ள பள்ளியில் +2 படித்து வருகிறார்கள். தற்போது இவர்கள் இருவரும் அங்கு நடந்த பேட்மிண்டன் (Badminton) விளையாட்டில் சாதனை படைத்து வருகின்றனர்.

கடந்த மாதம் நடைபெற்ற அரேபிய தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் சாம்பியன் பட்டம் வென்ற கதீஜா நிஸா கோப்பையுடன் பத்து இலட்சம் ரியால் பரிசுத் தொகையும் பெற்றார்.

பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் தனித்தனியாக விளையாடும் கதீஜா நிஸாவும், ஷேக் மஹத்ஷாவும் சவூதி அரேபியாவுக்காக சர்வதேச போட்டிகளில் கலப்பு இரட்டையர் பிரிவில் இணைந்து விளையாடி சாதித்து வருகின்றனர். கடந்த ஒராண்டில் அரேபியாவின் பிரதிநிதியாக ஏழு சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் கலந்து கொண்ட கதீஜா நிஸா உலக தரவரிசைப் பட்டியலில் 1200ஆம் இடத்திலிருந்து 130ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இவர்கள் இருவரின் ஆட்டத் திறமைக்கு அங்கீகாரமாக சவூதி அரேபியாவின் பிரபலமான ரியாத் பேட்மிண்டன் கிளப் ஸ்பான்சராக முன்வந்துள்ளது. இதன் மூலம் கதீஜா நிஸா, ஷேக் மஹத்ஷா விரைவில் தரவரிசையில் உலகின் முதல் நூறு வீரர்கள் பட்டியலில் இடம் பிடிப்பது உறுதி.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கடைசிப் பக்கம்

மேலும் தேடல்