மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

உயரம் தொட்ட சியாச்சின் போராளி டாக்டர் ஃபாத்திமா வசீம்
குளச்சல் ஆசிம், 1 - 15 ஜனவரி 2024


உயரம் தொட்ட சியாச்சின் போராளி டாக்டர் ஃபாத்திமா வசீம்

இந்திய ராணுவ வரலாற்றில் சியாச்சின் பனிமலை உச்சியில் நியமிக்கப்பட்ட முதல் பெண் மருத்துவ அதிகாரி எனும் பெருமையைப் பெற்றுள்ளார் கேப்டன் ஃபாத்திமா வசீம்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த ஃபாத்திமா வசீம் 2020ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படிப்பைப் பூர்த்தி செய்தவுடன் ராணுவ மருத்துவப் பிரிவுக்கு நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்தார். இமயமலையின் மேல்பகுதியில் உலகின் மிக உயரமான பனிமலைப் பிரதேசமான சியாச்சின் ஒன்றிய அரசின் ஆளுகைக்கு உட்பட்ட லடாக் பிராந்தியத்தில் அமைந்துள்ளது. தரைமட்டத்திலிருந்து 15200 அடி உயரத்தில் அமைந்துள்ள சியாச்சின் பகுதியில் மைனஸ் 20டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகும் ஆபத்தான பகுதி இது.

சியாச்சின் ஒரு போர்முனை. பாகிஸ்தான், சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக 24 மணி நேரமும் ராணுவ வீரர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ள பகுதியில் மருத்துவ அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஃபாத்திமா வசீம் ராணுவத்தில் குறுகிய காலத்தில் வீரதீர சாகசங்களுக்கான பல வெகுமதிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்திய ராணுவத்தின் FIRE FURY CORPS படைப்பிரிவின் கீழ் இயங்கும் ‘சியாச்சி ன் போராளிகள்’ குழுவில் பணிபுரிந்த ஃபாத்திமா வசீம் 25ஆவது வயதில் இந்தப் பதவியில் நியமிக்கப்பட்ட முதல் நபரும் கூட!


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கடைசிப் பக்கம்

மேலும் தேடல்