
உடல் ஆரோக்கியமும், மன திடமும் முக்கியமான தகுதிகளாக இருக்கும் கார் பந்தயப் போட்டிகளில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று வந்த நிலையில் முதல் பெண் கார் ரேசர் எனும் பெருமைமிகு இலக்கை எட்டியுள்ளார் 23 வயதே நிரம்பிய ஸல்வா மர்ஜான். சுய முயற்சியால் திறமையை வளர்த்துக் கொண்டு ‘இந்தியாவின் முதல் சர்வதேச பெண் கார் ரேசர்’ எனும் பெருமையைப் பெற்றுள்ளார் ஸல்வா.
கோழிக்கோடு மாவட்டம் சக்கிட்டபாறை கிராமத்தைச் சேர்ந்த குஞ்ஞாமு - சுபைதா தம்பதியின் மகளான ஸல்வா மர்ஜான் 15 வயது முதல் கார் ஓட்டுவதற்குப் பயிற்சி பெற்று வந்தார். கார் பந்தய வீரராக வேண்டும் எனும் ஆசையை பெற்றோரிடம் கூறிய போது அவர்களும் ஸல்வாவிற்கு ஊக்கமளித்தனர்.
18 வயது பூர்த்தியாகி ஓட்டுநர் உரிமம் பெற்றதும் ஸல்வா மர்ஜான் கோவை ஈகூகு ரேசிங் அகாடமியில் சேர்ந்து ஆரம்பப் பயிற்சி பெற்றார். ஊணிணூட்தடூச் ஃஎஆ போன்ற மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று கார் ரேசராகிய ஸல்வா மர்ஜான், சென்னை-யில் நடைபெற்ற ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் கலந்து தகுதிச்சுற்றில் தேர்வு செ#யப்-பட்டார். தொடர்ந்து துபாயில் நடைபெற்ற ஃபார்முலா 4 பந்தயத்திலும் கலந்து கொண்டார்.
ஆண் கார் ரேசர்களுக்குப் பல்வேறு நிறுவனங்கள் ஸ்பான்சர் வழங்கி வரும் நிலையில் முதல் பெண் ரேசரான ஸல்வா மர்ஜானுக்கு எந்தவித ஸ்பான்சர் உதவிகளும் கிடைக்காமல் முழுக்க தனது பெற்றோருடைய ஆதரவுடன் மட்டுமே பல நாடுகளுக்கும் பயணித்து போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
பஹ்ரைனில் பிப்ரவரி 29ஆம் தேதி தொடங்கும் ஃபார்முலா ஒன் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் ஸல்வா மர்ஜான். உலகம் முழுவதுமுள்ள கார் பந்தய ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தப் போட்டியில் ஸல்வா மர்ஜான் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.