மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

பள்ளிவாசலுக்கு வாருங்கள் ஒருமா வழிகாட்டுகிறது
16 - 29 பிப்ரவரி 2024


பள்ளிவாசலுக்கு வாருங்கள் ஒருமா வழிகாட்டுகிறது

சென்னை கீழ்ப்பாக்கத்திலுள்ள ஒருமா தொண்டு அறக்கட்டளை (Oruma Charitable Trust Chennai) கேரளாவைச் சார்ந்த ஜமாஅத்தினரால் 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கேரளச் சகோதரர்கள் நடத்தினாலும் இங்குள்ள சென்னைவாசிகளுக்கான பல்வேறு நலத்திட்டங்களை, அறக்காரியங்களை முன்னின்று நடத்தி வருகிறார்கள். திருவாலங்காடு முஹம்மதியாபுரம் என்ற ஊரில் கல்விக் கூடங்களை நிறுவியுள் ளார்கள். கல்வி, மருத்துவம், முதியோர் நலன், மகளிர் உதவி போன்ற பல தளங்களில் விரிவான சேவைகளை ஆற்றி வருகிறார்கள்.

ஒருமா அறக்கட்டளையின் கீழ் ஜும்ஆ பள்ளிவாசல் ஒன்றும் இயங்குகிறது. இந்தப் பள்ளிவாசலில் ஜனவரி 26ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையைப் பார்வையிடுவதற்காக சகோதர சமுதாயச் சொந்தங்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இந்த அன்பு அழைப்பை ஏற்று 35 இதர மத அன்பர்கள் பள்ளிவாசலுக்கு வருகைபுரிந்து வெள்ளிக்கிழமை தொழுகையைப் பார்வையிட்டதுடன் ஜும்ஆ உரையையும் கேட்டு மகிழ்ந்தனர்.

குடியரசு தின சிறப்பு ஜும்ஆ உரையை சமரசம் இதழின் பொறுப்பாசிரியர் வி.எஸ்.முஹம்மத் அமீன் நிகழ்த்தினார். தொழுகை முடிந்ததும் வருகை புரிந்த சகோதர, சகோதரிகள் தங்கள் மகிழ்வைப் பகிர்ந்து கொண்டதுடன், இஸ்லாம் குறித்த ஐயங்களை எழுப்பி தெளிவு பெற்றனர். வருகை தந்த அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்யப் பட்டதுடன் நூல்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

மதவெறுப்பும். துவேஷமும் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த இருண்ட காலத்திலிருந்து நல்லிணக்கத்தின் நம்பிக்கை ஒளியை ஒருமா ஏற்றிவைத்து வழிகாட்டியிருக்கிறது.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கடைசிப் பக்கம்

மேலும் தேடல்