மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

அரிவாளை அறிவால் வென்ற சின்னத்துரை
-, மே 16-31, 2024


 

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவிலுள்ள பட்டியலினத்தைச் சேர்ந்த +2 மாணவர் சின்னத்துரையை உடன்-படிக்கும் ஆறு மாணவர்கள் 2023 ஆகஸ்ட் 9ஆம் நாள் இரவு வீடுதேடிச் சென்று சாதிவெறியால் சராமாரியாக அரிவாளால் வெட்டினர். தடுக்க வந்த தங்கை சந்திரா செல்வியையும் வெட்டினர்.

(இந்தச் செயலைக் கண்டித்து சமரசம் 2023 செப்டம்பர் 1-15 இதழ் இருபக்கத் தலையங்கம் தீட்டியது)

படுகாயங்களுடன் போராடி மெல்ல மெல்ல மீண்டெழுந்த சின்னத்துரை கல்வியைக் கைவிட வில்லை. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நான்கு மாதங்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அரையாண்டுத் தேர்வை மருத்துவமனையில் இருந்தபடியே உதவியாளர் மூலம் எழுதினார்.

 

 

சின்னத்துரை பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியிலும், அவரது சகோதரி பாளையங்கோட்டையில் உள்ள மேரி சார்ஜென்ட் பள்ளியிலும் சேர்க்கப்பட்டனர். சின்னத்துரைக்கு அவரது ஆசிரியர்கள் மருத்துவமனைக்குச் சென்று பாடங்களைக் கற்றுக் கொடுத்தனர்.


நான்கு மாதச் சிகிச்சைக்குப் பின்னர் பள்ளிக்குச் சென்று கல்வியைத் தொடர்ந்த சின்னத்-துரை இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் 600க்கு 469 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.


சின்னத்துரையின் படிப்புச் செலவை தமிழ்நாடு அரசு ஏற்றுள்ள நிலையில் அவர் பி.காம் முடித்து சி.ஏ படிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். தங்களைத் தாக்கியவர்களும் கல்வி கற்று ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ள சின்னத்துரை அரிவாளை அறிவால் வென்று சாதனை படைத்துள்ளார்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கடைசிப் பக்கம்

மேலும் தேடல்