மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

பெண்ணுலகம்

பில்கிஸ் மிர்: இந்தியாவின் முதல் பெண் நடுவர்
அப்துல் சத்தார், ஆகஸ்ட் 16-31, 2024


கோடைக்கால ஒலிம்பிக் போட்டியின் நடுவர் மன்ற (ஜூரி) உறுப்பினராகத்
தேர்வாகி-யுள்ள  ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த பில்கிஸ் மிர் முதல் இந்தியப் பெண் நடுவர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே இந்தியாவின் முதல் நீர் விளையாட்டு பயிற்சியாளர் என்ற பெருமை -யை-யும் பெற்றவர்.

இந்த ஆண்டு கோடைக் கால ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெற்றன. இப்போட்டிக்கான நடுவர் மன்ற உறுப்பினராக இந்தியாவிலிருந்து முதல் முறையாக ஜம்மு, காஷ்மீரைச் சேர்ந்த பில்கிஸ் மிர் தேர் வாகியுள்ளார்.

இந்திய  ஒலிம்பிக் சங்கம் (IKH) ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகத்துக்கு எழுதிய கடிதத்தில் ‘தண்ணீர் விளையாட்டை ஊக்குவிப்பவர், டெவலப்பர், தடகள வீராங்கனை, இந்திய துடுப்புப் படகு சங்க நடுவர் குழு உறுப்பினரான பில்கிஸ் மிர், பாரிஸ் ஒலிம்பிக் போட்டி நடுவர் மன்ற உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். பாரிஸ் ஒலிம்-பிக்கில் நடுவர் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்ட முதல் இந்திய வீராங்கனை இவர் ஆவார்’ எனக் குறிப்பிட்டுள்ளது.

நடுவர் உறுப்பினராகத் தேர்வு செ#யப்-பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள பில்கிஸ் மிர், ‘இது எனக்கோ, ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கோ மட்டுமல்ல; ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் தருணம். பாரிஸ் ஒலிம்பிக்கில் அற்புதமான நடுவர் மன்றத்தில் உறுப்பினராக நம் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதைப் பெருமிதமாகக் கருதுகிறேன். ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டி-களில் நடுவர் மன்ற உறுப்பினராக இருந்-துள்ளேன். இது எனது முயற்சிக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல; விளையாட்டில்
சிறந்து விளங்க விரும்பும் அனைத்துப் பெண்களுக்கும் கிடைத்த வெற்றியாகும்.

ஆசியாவிலிருந்து இரண்டு நடுவர் மன்ற உறுப்-பினர்கள் மட்டுமே இந்த முறை கோடைக் கால விளை-யாட்டுகளுக்கு நடுவர் மன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் நான்; மற்றொருவர் ஜப்பானைச் சேர்ந்தவர். கடந்த 1998ஆம் ஆண்டில், தால் ஏரியில் இருந்து ஒரு துடுப்புப்படகு வீராங்கனையாக வாழ்க்கையைத் தொடங்கினேன். அப்போது ஒரு பெண் டிராக்சூட் அணிவது கூட சவாலாக இருந்தது. 12 ஆண்டுகளாக ஜம்மு - காஷ்மீர் சார்பில் தேசியப் போட்டிகளில் பங்கேற்றேன். அதன் பிறகு உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் நாட்டிற்காகப் பங்கேற்றேன். நான் 10 ஆண்டுகள் பெண்கள் தேசிய அணியின் பயிற்சியாளராகவும் இருந்தேன்.
2008ஆம் ஆண்டில் ஜெர்மனியில் நடுவர் மன்ற உறுப்பினர் தேர்வுக்குத் தகுதி பெற்றேன். அங்கு நான் இரண்டாவது சிறந்த நடுவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன்’ என்று தன் மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தியுள்ளார் மிர்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கடைசிப் பக்கம்

மேலும் தேடல்