மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

பவுசுல் ஆலியா: வலையுலகின் புது நம்பிக்கை!
M.பவ்சுல் ஆலியா, நவம்பர் 16- 30, 2024



தென்காசி மாவட்டம் வல்லத்தைச் சேர்ந்த முஹம்மது ரஃபீக், ஹமீதா பேகம் தம்பதியரின் இரண்டு மகள்களில் இளையவரான M.பவ்சுல் ஆலியா திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் M.குஞி நியூட்ரிஷன் அண்ட் டயட்டிக்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.


ஆ.குஞி இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது கொரோனா காலகட்டம். வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் தமக்கு விருப்பமான ஆர்ட் அண்ட் கிராஃப்டில் பல்வேறு டிஸைன்கள் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றினார். ஆலியாவே எதிர்பார்க்காத அளவிற்கு அந்த டிஸைன்களுக்கு வரவேற்பு கிடைத்தது மட்டுமின்றி சப்னா என்பவர் ஒரு கிராஃப்டை ஆர்டர் செய்திருந்தார்.


ஆர்வத்துடன் சப்னாவிற்கு ஃப்ளோரல் டிஸைன் டிராயிங் செய்து அனுப்பியதும் ஆலியாவிற்குப் பணம் அனுப்பினார் சப்னா. அங்கிருந்து தொடங்கியது ஆலியாவின் பிஸினஸ். முதல் ஆர்டரை இன்ஸ்டாவில் பதிவேற்றினார். ஆர்டர்கள் குவியத் தொடங்கின. இப்போது கல்லூரிப் படிப்பைப் படித்துக் கொண்டே விடுமுறை நாள்களில் பிஸியாக பிஸினஸ் செய்கிறார் ஆலியா.


சிறுவயதில் குட்டிக் குட்டி கிராஃப்ட் செய்து பழகிய ஆலியா இப்போது யூடியூப் மூலமாக எம்ப்ராய்டரி பெயிண்டிங், உட் பெயிண்டிங், கேன்வாஸ் பெயிண்டிங்,
கஸ்டமைஸ்டு ஆல்பம் என நிறையவே அப்டேட் ஆகிவிட்டார். மட்டுமின்றி காலியோகிராஃபியும் ஆலியாவுக்குக் கை வந்த கலை. இதுவரை 300க்கும் மேற்பட்ட ஆர்டர்கள் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் அவருக்கு வந்திருக்கிறது. ஞணிதீtடிஞுண்.டிண என்ற ஆலியாவின் இன்ஸ்டாவைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை மள மளவென அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை 80 ஆயிரம் ஃபாலோயர்ஸ் இணைந்திருக்கின்றார்கள். வருங்காலத்தில் தனி பிராண்டாக இதையே முழுநேரத் தொழிலாகச் செய்வதற்கு எண்ணம் கொண்டிருக்கும் ஆலியா படிப்பை முடிப்பதற்காகக் காத்திருக்கிறார்.


சமூக வலைதளத்தைச் சரியாகப் பயன்படுத்தி சம்பாதிக்கும் முன்னுதாரணமாய்த் திகழும் பவுசுல் ஆலியா மிகப் பெரும் வெற்றி பெறுவார். வாழ்த்துகள் ஆலியா!

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கடைசிப் பக்கம்

மேலும் தேடல்