காவல் வாகனம் போபாலின் ஒரு சாலையோரக் காய் கறிக் கடை அருகே வந்தது. காரிலிருந்து டெப்டி சூப்பரெண்ட் போலீஸ் அதிகாரி மிடுக்குடன் இறங்கி காய் கறிக் கடை உரிமையாளர் சல்மான் அருகே வந்தார். ‘என்னைத் தெரிகிறதா?’ என வினவினார். ‘சந்தோஷ் பட்டேல்’ என்று கூறி ஆரத் தழுவிக்கொண்டார் சல்மான் கான்.
மத்தியப் பிரதேசம் தேவ்காந்த் கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் சந்தோஷ் பட்டேல். 14 ஆண்டுகளுக்கு முன்பு போபாலில் பொறியியல் படித்த காலத்தில் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல், உணவிற்குப் போராடிக் கொண்டிருந்த சூழலில் சல்மான் கானின் கடையில் காய் கறி வாங்குவார். அவரது சூழல் அறிந்த சல்மான் இலவசமாகவே காய் கறிகளை பட்டேலுக்கு வழங்கினார்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அங்கிருந்து இடம்பெயர்ந்த பட்டேல் காவல் துறையில் இணைந்தார். இப்போது காவல்துறை ஈகுகஆகப் பணிபுரிந்து வருகிறார். தொடக்கத்தில் அலைப்பேசியில் அவ்வப்போது இருவரும் பேசி வந்த நிலையில் சல்மானின் அலைப்பேசி உடைந்து எண் அழிந்துவிட தொடர்பும் அறுந்து போனது.
நட்பின் நினைவலைகள் அவ்வப்போது வந்தாலும் தனக்கு இலவசமாய் காய் கறி வழங்கிய சல்மானைச் சந்திக்க எண்ணிக்கொண்டிருந்த சந்தோஷûக்கு போபாலுக்கு பணி நிமித்தமாகச் செல்லும் வாய் ப்புக் கிடைத்ததும் துள்ளிக் குதித்தார். தன் பழைய நண்பனை நன்றி உணர்வோடு சந்திக்கச் சென்றார். சல்மானின் உதட்டருகே இருந்த தழும்பை அடையாளம் கண்டு ஆரத்தழுவி பணமும், இனிப்புகளும் வழங்க சல்மான் அதனை வாங்க மறுத்து விட்டார். ஆனாலும் உறுதியாய் அதனை அவரிடம் தந்துவிட்டு பழைய நினைவுகளை நன்றியுடன் தனது ஙீ தளத்தில் பட்டேல் பகிர்ந்தார்.
பல இலட்சம் பார்வையாளர்களின் வாழ்த்தைப் பெற்ற சந்தோஷ் பட்டேலும், சல்மானும் சொல்லும் செய் தி, ‘வெறுப்பின் காலத்தில் அன்பும் நன்றியுமே வெல்லும்’ என்பதுதான். ஆம்..! இவர்கள்தான் உண்மையான இந்தியாவின் முகவரி.