மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

AI மருத்துவப் பங்களிப்பு: மானியம் பெறுகிறார் டாக்டர் காலித் ராசா
மொய்தீன், 16 - 31 டிசம்பர் 2024


டாக்டர் காலித் ராசா



டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின்(JMI) கணினி அறிவியல் துறையின் இணைப் பேராசிரியரான டாக்டர் காலித் ராசா, மார்பகப் புற்றுநோய் க்கான சிகிச்சைக்கு AI தொழில்நுட்பம் மூலமாகத் தீர்வுகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார். காலிதின் இந்த அரிய முயற்சிக்கு இந்திய மருத்துவ ஆராய் ச்சிக் கவுன்சில் (ICMR)

டாக்டர் காலித் ராசாவால் உருவாக்கப்பட்ட காப்புரிமை பெற்ற மருந்துக் கலவை, இந்த மானியத்தின் கீழ் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். AI வழிகாட்டுதலால் மருந்துத் தயாரிப்புக்கான மேம்பட்ட கருவிகளை உருவாக்குவதன் மூலம் மார்பகப் புற்றுநோய்ச் சிகிச்சையின் சவால்களுக்கு மிகப் பயனுள்ள மருத்துவத் தீர்வைப் பெறுவதே இத்திட்டத்தின் நோக்கமாக உள்ளது. டாக்டர் காலித் ராசா, சுகாதாரப் பாதுகாப்பில் AI பங்களிப்புகளுக்காக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டவர். இந்த மானியம் குறித்து அவர் கூறுகையில் ‘ICMRஇன் மானியத்தைப் பெறுவதில் மகிழ்கிறேன். நன்றியை உரித்தாக்குகிறேன். AI மூலம் மருந்து வடிவமைப்பு குறித்த எங்கள் ஆராய் ச்சியை முன்னெடுத்துச் செல்வதற்கும், கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறுவதற்கும் இந்த வாய் ப்பு அமையும்’ என்றார்.

மார்பகப் புற்றுநோய் பொது சுகாதாரப் பிரச்னையாக உள்ளது. அஐ மூலம் மருந்து ஆராய்ச்சி மேற்கொள்வதன் மூலம் வளர்ச்சி செயல்முறையை நெறிப்படுத்தலாம், செலவுகளைக் குறைக்கலாம், புற்றுநோய் போன்ற சிக்கலான நோய் களுக்கான சிகிச்சையின் தனித்துவத்தை மேம்படுத்தலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.டாக்டர் ராசா 140க்கும் மேற்பட்ட ஆய் வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். எகிப்தின் ஐன் ஷம்ஸ் பல்கலைக்கழகத்தில் ICCR தலைமை வருகைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

இந்தத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்புகள், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தால் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக(2021-2023) உலக அளவில் முதல் 2% விஞ்ஞானிகளில் அவருக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளது. இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் உலகளாவிய சுகாதார நடைமுறைகளில் தொலைநோக்கு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இது எதிர்காலத்தில் மிகவும் பயனுள்ளமார்பக புற்றுநோய் சிகிச்சை உத்திகளுக்கான நம்பிக்கையை அளிக்கிறது.

-மொய்தீன்


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கடைசிப் பக்கம்

மேலும் தேடல்