மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

35 உயிர்களைக் காப்பாற்றிய ரியல் ஹீரோ ஆரிஃப்
- மொய்தீன், 1-15 ஜனவரி 2025


35 உயிர்களைக் காப்பாற்றிய ரியல் ஹீரோ ஆரிஃப்


டிசம்பர் 18ஆம் நாள் மும்பை இந்திய நுழைவாயிலுக்கு அருகில் மாலை 4 மணி அளவில் கடற்படையின் வேகப்படகு ஒன்று இயந்திர சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் படகின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 13 பேர் உயிரிழந்தனர். 115 பேர் மீட்கப்பட்டுள்ளனர். படகு விபத்துக்கு உள்ளாகி பல உயிர்கள் ஆபத்தில் இருக்கும் செய்தியை கேட்ட MBT படகின் தலைவர் ஆரிஃப் பமானே வழக்கமாக 18 முதல் 20 நிமிடங்களில் கடக்கும் தூரத்தை வெறும் 8 நிமிடங்களில் கடந்து விபத்து நடந்த இடத்தைச் சென்றடைந்தார்.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பலர் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். அதில் சிலர் லைஃப் ஜாக்கெட்டுடன் மிதந்து கொண்டும், சிலர் லைஃப் ஜாக்கெட் இன்றி தத்தளித்துக் கொண்டும் இருந்தனர். இதைக் கண்ட ஆரிஃப் உடனே அங்கு கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களைத் தன் மீட்புப் படகில் ஏற்றினார். மூன்று வயதுக் குழந்தை எந்த அசைவும் இன்றி மூழ்குவதைக் கண்டு உடனே கடலில் குதித்து அந்தக் குழந்தையை மீட்டு மூச்சுப் பேச்சு இன்றி இருந்த அந்தக் குழந்தைக்கு முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றினார்.

தம் உயிரையும் துச்சமாக மதித்து 35 உயிர்களைக் காப்பாற்றிய ஆரிஃப், அவருடைய குழுவினருக்கு காப்பாற்றப்பட்டவர்கள் நெகிழ்வுடன் நன்றி நவின்றனர். முஸ்லிம் என்பவன் உயிரை அழிப்பவன் அல்ல. உயிர் காப்பவன். ஓர் உயிரைக் காப்பாற்றுபவர் முழு மனித சமுதாயத்தையும் காப்பாற்றியவர் என்ற இறை வழிகாட்டுதலுக்கேற்ப செயல்பட்ட ஆரிஃப்களால் நிறைந்திருக்கிறது இஸ்லாமிய உலகம்.

- மொய்தீன்


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கடைசிப் பக்கம்

மேலும் தேடல்