துபாயைச் சேர்ந்த 32 வயதான ஃபாத்திமா அல் அமரி, அண்மையில் துபாய் ஆட்சியாளர் ஷேக் முஹம்மதுக்குத் தனது குதிரையில் நின்று வாழ்த்துச் செலுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அபுதாபியின் அல் வத்பாவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் 53ஆவது தேசிய தினம் (Nச்tடிணிணச்டூ ஞீச்தூ) கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் ஷேக் முஹம்மது அல் மக்தூம் அவர்களுக்கு குதிரையில் நின்று வாழ்த்துச் செலுத்தினார் அமரி.
தனது பயணத்தை நினைவுகூர்ந்த ஃபாத்திமா அமரி ‘நான் ஓர் அரசு அதிகாரியாக வேலை செய்து வருகிறேன். கோவிட் பெருந்தொற்று முடக்கத்தின் போது வீட்டில் குதிரை பராமரிப்பு வேலை செய்பவர் வரவில்லை. எனவே நான் குதிரையைப் பராமரித்து வந்தேன். எனக்குக் குதிரை, ஒட்டகச் சவாரி நன்றாகத் தெரியும். ஆனாலும் நான் பல முறை உள்விளையாட்டு அரங்கில் போட்டியில் கலந்து கொள்ளச் சென்றபோது எனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.
அத்துடன் அந்த முயற்சியைக் கைவிட்டு விட்டேன். ஆனால் கோவிட் காலத்தில் என்னுடைய வீட்டு வரண்டாவில் நானே மீண்டும் பயிற்சி செய்தேன். குதிரை எனக்குக் கட்டுபட்டது. ‘மூச்சி றைக்கப் பாய்ந்து ஓடுகின்ற (குதிரைகள்) மீது சத்தியமாக!’ என்ற திருக்குர்ஆனின் ஆதியாத் அத்தி யாயத்தில் குதிரை கட்டுப்படுவதை இறைவன் குறிப்பிடுகின்றான். அதுபோல நாமும் படைத்த இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்பதைக் குதிரைப் பயிற்சி உணர்த்தியது.
பொழுதுபோக்காகக் கற்றுக்கொண்ட குதிரைச் சவாரி விரைவில் எனது ஆர்வமாக மாறியது. ஏதாவது பெரிய சாதனை செய்ய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. பின்னர் புதிய சவால்களை எதிர் கொள்ள வேண்டிய நிலை வந்தது. தொடர்ந்து நான் பயிற்சியில் ஈடுபட்டேன். அதிக நேரத்தையும் முயற்சியையும் முதலீடு செய்தேன். துபாய் யூனியன் அணிவகுப்பில் பங்கேற்க எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. துபாயின் ஓர் ஓரத்தில் வசித்து வந்த எனக்கு வாய்ப்பு கிடைத்தத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
‘டிசம்பர் 2இல் யூனியன் அணிவகுப்பில் பங்கேற்றபோது எனது தந்தை போல் என்னைக் கவனித்துக் கொண்ட ஷேக் முஹம்மது அவர்களுக்கு வாழ்த்துச் செலுத்தும் மரியாதை எனக்கு கிடைத்தபோது என்னுடைய கடின உழைப்புக்குப் பலன் கிடைத்தது’ என்று மனம் நெகிழும் அமரிக்கு ‘எமிரேட்ஸ் குதிரையேற்ற வீர மங்கை’ என்ற பட்டம் கிடைத்தது. குதிரையேற்றத்துடன் தனது அரசாங்க வேலை யையும் சமநிலைப்படுத்திக் கொண்ட ஃபாத்திமா அமரி இலட்சியக் குதிரையில் தனது பயணத்தை உற்சாகத்துடன் தொடர்கிறார்.
தகவல்: https://www.khaleejtimes.com/uae/uaemeet-woman-whose-horseback-salute-to-sheikh-mohamed-while-standing-up-captured-hearts