மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

சமரசம் வாசகர் வட்ட வாசிப்பு விழா ஆம்பூர் வழிகாட்டுகிறது..!
வி.எஸ்.முஹம்மத் அமீன், 16-31 மார்ச் 2025


2025 பிப்ரவரி 22ஆம் நாள் ஆம்பூர் உமர் ரோடு இஸ்லாமிய தகவல் மையத்தில் சமரசம் வாசகர் வட்டத்தின் வாசிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. உமரபாத் ஜாமியா தாருஸ் ஸலாம் அரபிக் கல்லூரியின் பேராசிரியர் ஜமாலுத்தீன் உமரி ஒருங்கிணைத்த இந்தக் கூட்டத்தில் ஐம்பதுக்கும் அதிகமான வாசகர்கள் கலந்து கொண்டு சமரசம் குறித்த தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

சமரசத்தின்  நீண்டகால  வாசகரான ஓ. முஹம்மது ஜாஃபர் அலீ பேசும்போது ‘ஆபாசம், பொய்ச் செய்தி இல்லாமல் 45 ஆண்டுகளாகப் பத்திரிகையை நடத்த முடியும் என்ற பெரும் நம்பிக்கையை சமரசம் பத்திரிகை உலகிற்கு வழங்கியிருக்கிறது. அரபுச் சொற்களுடன் கலந்தே இஸ்லாமிய இதழ்கள் எழுதிவரும் அன்றைய சூழலில் சமரசம் அரபுச் சொற்களை அழகு தமிழில் எழுதுவதைக் கண்டு வியந்தேன். சமரசம் மூலம் நல்ல தமிழை நான் கற்றுக் கொண்டேன்’ என்று நெகிழ்வுடன் குறிப்பிட்டார். தொடர்ந்து ஓஅகீ பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ராஜமன்னன் சமரசம் குறித்த தமது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.

கிரியேட்டிவ் கம்யூனிகேஷன் சென்னை (CCC) பொதுச்செயலாளரும், சமரசம் இதழின் பொறுப்பாசிரியருமான  வி.எஸ்.முஹம்மத் அமீன் சிறப்பு விருந்தினராகக் கலந்து உரையாற்றினார். சமரசம் கடந்து வந்த பாதை, சமரசம் இதழின் களப்பணிகள், பொதுச் சமூகத்தில் சமரசம் ஏற்படுத்திய தாக்கங்கள், தமிழ்நாட்டிற்கும், இஸ்லாமிய சமுதாயத்திற்கும் சமரசம் வழங்கிய பங்களிப்புகள், சமரசத்தின் கொள்கை, தனித்துவம், சாதனைகள் குறித்து மிக விரிவாகப் பேசிய அவர், ‘சமரசம் என்பது எல்லாவற்றையும் சமரசம் செய்வது என்றே பலர் நினைக்கின்றனர்.

சொல்லுவதைத் தெளிவாக நேரடியாகச் சொல்லும் கொள்கை உறுதியில் சமரசம் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டார். தமிழ்நாடு  வணிகர்  சங்கங்களின் பேரமைப்பு  நிர்வாகிகள்  ஆர்.ஞானசேகரன், சி.கே.சுபாஷ், ஜி.வி.சுந்தர் ஆகியோர் சமரசம் குறித்த தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதுடன் சமரசம் இதழுக்கான நினைவுப் பரிசை வழங்கிச் சிறப்பித்தனர். சமரசம் பொறுப்பாசிரியருக்கு பயனாடை அணிவித்துச் சிறப்பித்தார் பழனியப்பா டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் ரமேஷ். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஆம்பூர் கிளைப் பொறுப்பாளர் ஜுபைர், அப்துஸ் ஸலாம், அஹமது அலீ, ஷமீல் அஹமது, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் திருப்பத்தூர் மண்டலப் பொறுப்பாளார் அப்துல்லா நாஸர் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாட்டை மிகச் சிறப்பாக செய்திருந்தனர். தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலும் சமரசம் வாசகர் வட்டத்தின் வாசிப்பு விழாக்கள் நடத்தப்பட வேண்டும். அதற்கான முதல் படியை ஆம்பூர் எடுத்து வைத்து வழிகாட்டியிருக்கிறது.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கடைசிப் பக்கம்

மேலும் தேடல்