மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

சிறந்த மருத்துவ ஆளுமை டாக்டர் அப்துல் காசிம் ஜலீல் அஹமது
K. ரியாஸ், ஆகஸ்ட் 1-15, 2025


இந்தியா முழுவதும் 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களையும் 1800 கிளைகளையும் கொண்ட உலகின் மிகப்பெரிய மருத்துவர்களின் சங்கமான இந்திய மருத்துவ சங்கம்(IMA), ஜூலை 14 அன்று நாட்டின் தலைநகரான டெல்லியில் அதன் மதிப்பு மிக்க தேசிய விருது வழங்கும் விழாவை நடத்தியது.

இதில் பல்வேறு பிரிவுகளில் மருத்துவ நிபுணர்கள் மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர கொயில், டெல்லி எம்.எல்.ஏ டாக்டர் அணில் கொயில் ஆகியோரால் கௌரவிக்கப்பட்டனர். அதில் கோயம்புத்தூரைச் சேர்ந்த அப்துல் காசிம் ஜலீல் அஹமது 2025 ஆண்டிற்கான சிறந்த மருத்துவ ஆளுமை விருதைப் பெற்றார்.

நான்கு தசாப்தங்களுக்கு மேலான அவரது சேவையில் புகழ்பெற்ற ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் தலைமை குழந்தை மருத்துவராகவும் நியோனாட்டாலஜிஸ்டாகவும் 34 ஆண்டுகள் பணியாற்றியவர். இப்போது கோயம்புத்தூர் நகரின் ஆர்.எஸ்.புரம் மேற்கு பொன்னகரம் சாலையில் உள்ள கிளவுட் ஒன் ஸ்மார்ட் கிளினிக்கில் குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளார்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் தலைமை குழந்தை மருத்துவராகவும் நியோனாட்டாலஜிஸ்டாகவும் பணியாற்றியபோது 800 கிராம் எடையுள்ள சோதனைக் குழாய் குழந்தைக்கு டாக்டர் ஜலீல் சிகிச்சை அளித்தார். இது அப்போது அவருக்குப் பாராட்டுகளைக் குவித்தது. இந்தச் சம்பவம் பெட்டகம் எனும் புத்தகத்தில் இடம் பெற்றது.

டாக்டர் ஜலீல் அஹமது மருத்துவம் சார்ந்த குழுக்களில் முக்கியப் பொறுப்பு வகித்தது மட்டுமின்றி மருத்துவம் சார்ந்த பட்டறைகளையும் நடத்தி வருகிறார். பல்வேறு சர்வதேச, தேசிய, மாநில அளவிலான மாநாடுகள், பட்டறைகள், நியோனாட்டாலஜியில் CME திட்டங்களில் கலந்து சிறப்பித்து வருகிறார்.

மூத்த குழந்தை நல மருத்துவர் விருது, IAPTNSC மூத்த நியோனாட்டாலஜிஸ்ட் விருது, NNFTN கல்விச் சிறப்பு விருது, IMA சமூக சேவை விருது க்எ, 1976 முதல் 1981, 19831985 வரை கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரியில் முதுகலை பட்டம் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். நியோனாட்டாலஜி குழந்தை மருத்துவத்தில் பெல்லோஷிப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

2012ஆம் ஆண்டு அமெரிக்காவின் டெக்சாஸ் குழந்தைகள் மருத்துவமனையில் நியோனாட்டாலஜியில் பார்வையாளர் பெல்லோஷிப்பைப் பெற்றார். இதுபோல் உலகம் முழுவதும் பல அங்கீகõரங்களைப் பெற்றிருக்கும் டாக்டர் அப்துல் காசிம் ஜலீல் அஹமது அவர்களுக்கு வாழ்த்துகள்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கடைசிப் பக்கம்

மேலும் தேடல்