மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சட்ட அமைப்பைச் சீர்குலைக்கும் புதிய குற்றவியல் சட்டங்கள் - பத்திரிகையாளர் சந்திப்பில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கண்டனம்

கவிதை

மன்னியுங்கள் மணிப்பூர் சகோதரிகளே!
மு.தமிமுன் அன்சாரி Ex MLA, Aug 1 - 15 2023


 

உங்கள் ஆடைகள்
அவிழ்க்கப்பட்ட
காட்சிகளில் தெரிகிறது
ஃபாசிஸத்தின் கோர முகங்கள்
 
யாரும் தொடாமலேயே
அரைக்கம்பத்தில் பறக்கிறது
தேசியக்கொடி
 
அவமானத்தில் நெளிகிறது
அசோகச் சக்கரம்
 
எதேச்சதிகார மௌனத்தை
உடைத்து கேள்வி எழுப்புகின்றன
நீதியின் சுத்தியல்கள்
 
நிலமெங்கும்
முளை விடுகிறது போராட்டங்கள்
குஜராத்தில் பில்கீஸ் பானு
 
காஷ்மீரில்
ஆசிஃபா
 
உத்ராவில்
ஒடுக்கப்பட்ட சகோதரி
 
அதன் வரிசையில்
இப்போது நீங்கள்
 
ஏகலைவனின்
கட்டை விரலை வெட்டியவர்கள்
 
சம்புகனைக்
கொன்றவர்கள்
 
நாளந்தாவை
எரித்தவர்கள்
நந்தனைக்
கொன்றவர்கள்
 
இப்போது
இம்பாலில்
சுற்றிவருகிறார்கள்
 
உங்கள் கதறல்களைக் கேட்டு
பதறித் துடிக்கின்றன
மலையடிவாரப் புறாக்கள்
 
உங்கள் கண்ணீரில்
நனைந்த ஈர நிலத்தில்
முளைக்கின்றன தீக்குச்சிகள்
 
கிழக்கின் வெப்பத்தில்
பொசுங்கட்டும்
 
வடக்கில் இருக்கும்
ஃபாசிஸத்தின் அரண்மனைகள்
 
மணிப்பூர் சகோதரிகளே
எங்களை மன்னியுங்கள்
 
இதயமற்றவர்களோடு
வாழ்கிறோம் என்பதற்காக
 
காத்திருங்கள்
கரையோரத்தில் கருவாகிவரும்
புயலுக்காக!

உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர இலக்கியம்

மேலும் தேடல்