மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சட்ட அமைப்பைச் சீர்குலைக்கும் புதிய குற்றவியல் சட்டங்கள் - பத்திரிகையாளர் சந்திப்பில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கண்டனம்

கவிதை

காய்ந்து போன கண்ணீர்
புதுகை சிக்கந்தர், Aug 1 - 15 2023


 

அவமானப்படுத்துவதென்பது 

அவ்வளவு எளிதில் நடந்துவிடுகிறது

 

அமுதழுது காய்ந்து போன 

இறுதிக் கண்ணீரும் 

அவளிடமிருந்து 

அத்தனை கோபமாய் 

வழிந்து கொண்டுதானிருந்தது

 

நிர்வாணப்படுத்தி அழைத்துப் போகும்

வன்முறையை மீறியதொரு துயரத்தை

பெரும்பான்மையாய்

பெண்களுக்கு அமைத்துக் கொடுப்பதில்

அவனுக்குள்ளெழும் வன்மம்

மானுட நிராகரித்தலின் உச்சம்

 

மகிழ்வுச் சாம்பலில் 

கால் விரல் பதித்துப் பழகிப்போன 

ஃபாசிஸத்தின் சித்ரவதைகளை 

அனுபவிக்கவா ஏழையின் பிறப்பு

 

பழங்குடி தொன்மையின் தொடர்ச்சி 

சுற்றுலாத் தலங்களாய் மாற்றப்பட்ட 

பகுதிகளெங்கும் வாழக்கூடிய 

இயற்கையின் இறுதி நம்பிக்கை

 

காண்பவை யாவற்றையும் 

காசாக்க முயற்சிக்கும் சமூகத்தில் 

சிக்கித் தவித்துப் போராடும் 

எளியவர்களுக்காக

கோபமெழாதவரை

 

கோழைகளின் தொண்டைக்குள் 

ஓடுங்கியே கிடக்கின்றன 

உரிமைக்கான குரல்களனைத்தும்


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர இலக்கியம்

மேலும் தேடல்