மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

கவிதை

உஸ்தாதுகள்
ஜ. ஜாஹிர் உசேன் , September 1 - 15, 2023


 உஸ்தாதுகள்

அலீப், பே, தா வைக்

கவனமாய் கற்றுக்கொடுத்த

ஆலிம்களான ஆசிரியர்களே

 

இம்மைக்கும் மறுமைக்கும்

பலனளிக்கும் கல்வியை

பொறுப்பாய்ச் சொல்லித்தந்த

எங்கள் உஸ்தாத்களே

 

அன்பாய் இருந்தீர்கள்

பண்பாய்ப் பழகினீர்கள்

ஆருயிர் ஆசானாய்

அழகாய்க் கற்றுத் தந்தீர்கள்

 

எங்களின் படித்தரம் உயர

கண்டிப்பாய் நடந்தீர்கள்

 

இலக்கண விதிகளோடு

சரியான உச்சரிப்போடு

எழுத்துகள் கூட்டி

வார்த்தைகள் சேர்த்து

அல்லாஹ்வின் ஆயத்துக்களை

இன்றும் ஓதுகிறோம்

 

நீங்கள் ஓத மட்டும்

கற்றுத்தரவில்லை

வாழக் கற்றுத்தந்தீர்கள்

 

இந்த உலகிற்காக மட்டுமல்ல

மறு உலகிற்கான

வாழ்க்கைப் பாதைகாட்டிய

ஆசான்கள் நீங்கள்


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர இலக்கியம்

மேலும் தேடல்