தீர்ப்புச் சொல்வார்
நீதிபதி - நியாயமாய்
கணக்குப் போடுவார்
கணக்காளர் - பிழையில்லாமல்
நோயைத் தீர்ப்பார்
மருத்துவர் - பரிபூரணமாய்
கட்டிடம் கட்டுவார்
பொறியாளர் - கனகச்சிதமாய்
அள்ளிக் கொடுப்பார்
வள்ளல் - இரக்கத்துடன்
வாங்கி விற்பார்
வியாபாரி - நேர்மையாய்
அனைவருக்கும்
கல்வியளிப்பார்
ஆசிரியர் - தன்னலமில்லாமல்
அனைவரையும்
உருவாக்குவார்
ஆசிரியர் - சிரத்தையோடு
ஆசிரியர் இல்லையேல்
இவர்களும் இல்லையே