தரிசு நிலமாய்க் கிடந்தோம்
நல்லுரமாய் வந்து
வாழ்வை வளமாக்கினீர்
பட்ட மரமாய்ப்
போயிருப்போம்
அறிவு நீரூற்றி
வெற்றிக் கனிகளைத் தந்தீர்
முகவரி இல்லாமல்
இருந்தோம்
கேள்வி வழியே
ஞானத்தின் விலாசம் சொன்னீர்
பருவ வயதில்
பாவம் செய்திருப்போம்
பிரம்பு வடிகட்டியால்
கறை படியாமல் காப்பாற்றினீர்
என் பிள்ளை
என்னைப் போலவே
வளர்கிறது
நிஜமாய்
நினைவில் வருகிறீர்