இறைவனைப் போற்றுவோம்
இன்னலைப் போக்குவோம்
கவிமொழி நாயகம்
சொன்னவழி நடப்போம்
ஐவேளைத் தொழுகையை
அனுதினமும் தொழுவோம்
எவ்வேலை இருந்தாலும்
தொழும் வேளையை மறவோம்
சூரியனும் சந்திரனும்
வருவது போவதெல்லாம்
கடமையைச் செவ்வனே
செய்வதை உணர்த்தும்
பணம் பொருள் சேர்ப்பதே
கடமை என்கிறோம்
ஈமான் கொள்வதும்
இபாதத் செய்வதும்
கடமைகள் என்றே
கட்டாயம் உணர்வோம்