நாற்பத்தியோரு உயிர்கள்
என்பது நம் கணக்கு
ஊசலாடியதோ
பற்பல உறவுகளின்
உயிர்களும் சேர்ந்தே
குடும்பத்தினர் பதைபதைக்க
சுரங்கத்தில் சிக்கியவனுக்கும்
சொந்தபந்தம் இருக்கிறது
அவன் இதயத்தின் வலியை
இணையத்தில் பார்த்து
துணிந்தனர் துடிப்புடன்
பன்னிரெண்டு பேர்
மனைவி கால்பிடிக்க
குழந்தைகள் கண்ணீர்வடிக்க
பாசக்கயிறு தாண்டிச் சென்றவர்கள்
எல்லையைக் காக்கும்
வீரர்கள் போலன்றோ
விலைமதிப்பற்ற உயிர்களை
விடாமுயற்சியுடன்
வீரப்போர் புரிந்து
காத்தவர்களுக்கு
என்ன வேண்டுமாம்?
சில்க்யாரா தளத்தில்
சாதனையால்
சிகரம் தொட்டவர்கள்
சமூகத்திடம் கேட்பதென்ன?
சம்பளம் அல்ல
சக மனிதரென்னும்
சமத்துவ உணர்வு
இர்ஷாத், நஸீர்கான்
பெரோஸ் குரேஷி
முன்னா, ரஷீத், ஜதின்
வகீல் ஹசன், நஸீம், சௌரப்
தேவேந்தர், அன்கூர், மோனு
ஆகிய எலித்துளைத்
தொழிலாளர்கள் சென்றது
மனிதம் காக்க மட்டுமே
பிரித்தாள
வெறுப்பை விதைக்கும்
மனித நேய விரோதிகளுக்கு
சுரங்க நாயகர்கள்
போதித்த பாடம்
மனிதம் காப்போம்!