இறைவன் ஒருவன் இருக்கின்றான்
நடப்பவை யாவும் பார்க்கின்றான்
குறைகள் நிறைந்த மனிதனோ
கவலை இன்றி வாழ்கின்றான்
வரவுகள் மட்டும் வருகின்றதென்றால்
இரவும் கூட விழித்திருப்பான்
உறவுகள் எல்லாம் எதற்கென்பான்
வீண்செலவுகள் என்றே சொல்லிடுவான்
கோட்டை போலச் சுவர் எழுப்பி
வீட்டைக் கட்டி அழகு பார்ப்பான்
வேட்டை நா# போல் காத்திருப்பான்
யாரும் வராமல் பார்த்திருப்பான்
ஒருவேளை இவன் தொழுதிருந்தால்
ஓர் இறையை நினைத்திருந்தால்
மன்றாடி மன்னிப்புக் கேட்டிருந்தால்
வேண்டியதை இறைவன் கொடுத்திருப்பான்
எல்லாம் இறைவன் செயல் என்று
அப்போதும் இவன் உணர்வதில்லை
பாங்கோலி காதில் விழுந்தாலும்
கேளாமல் தெருவில் நடந்திடுவான்