பிறை கண்ட நாள் முதலாய்
இரை தேடும் வயிற்றுக்கு
திரை போடும் மாதம்
குறை இல்லாமல் வாழ
கறை அகற்றும் புனித
மறை வந்த மாதம்
சிறை செய்யும் பாவத்தை
கரை சேர்க்கும் இனிய
துறை உள்ள மாதம்
உரை கேட்ட வசனங்களை
முறை செய்தால் நெற்றி
தரை தேடும் மாதம்
நிறை வாழ்வு வாழ என்றும்
திறை* கேட்கா ஏக
இறை அருளுள்ள மாதம்
* திறை வரி