மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

கவிதை

ரமளானை வரவேற்போம்..!
அப்துல் சத்தார், 1-15 மார்ச் 2024


ரமளானை வரவேற்போம்..!

இஸ்லாமிய இயக்கத்தின்

உறுப்பினர்களான முஸ்லிம்களுக்கு

ஆண்டுதோறும் நடக்கும்

பயிற்சிப் பட்டறை

 

சந்திர நாள்காட்டி கொண்டு

ஆன்மிக அறுவடை

தொடங்கும் காலம்

 

பண்ணிய பாவத்தைப்

புண்ணியம் கொண்டு

களையும்

கண்ணிய மாதம்

தொடங்கும் காலம்

 

பசி, தாகம் கொண்டு

சொர்க்கத்தின்

கதவைத் தட்டும்

வாய்ப்பு

தொடங்கும் காலம்

 

காலியான வயிற்றைச் சுமந்தவனுக்கு

கூலியாய் உணவளிப்பனே

கிடைப்பான் எனச்

சான்று பகரும் காலம்

 

நீதி விசாரணையில்

சாட்சி கூறும் நோன்பு எனும்

சாட்சியாளனை

விருந்தினராக்கி

ரமளானை வரவேற்போம்


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர இலக்கியம்

மேலும் தேடல்