மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

கவிதை

தீன் கல்வி
தத்துவக் கவிஞர் இ.பதுருத்தீன், மே 16-31, 2024


 

தீன் கல்வி

 

- தத்துவக் கவிஞர்
இ.பதுருத்தீன்

 

மானாட்டம் தேனாட்டம்,
மயிலாட்டம் குயிலாட்டம்
தீன்நாட்டம் கற்பிக்கும் கல்வி - அதில்
தேறியவர் சிங்காரச் செல்வி

பூவைத்துப் பொன்வைத்துப்
பொருளில்லை; குர்ஆனில்
நாவைத்து ஓதுவதே அழகு - நிஸ்வான்
நலம்வைத்துப் பெண்குலமே பழகு

நிழல்செய்யா நலம் செய்து
நீர்செய்யா வளம் செய்து
குழல்செய்யா இசையெல்லாங் கூட - நிஸ்வான்
கூறியதே ஷரீஅத்தைப் பாட

எப்பட்டம் பெற்றாலும்
எவர்பட்டம் பெற்றாலும்
அப்பட்டம் ஆகிடுமோ ஸனது? - இன்று
ஆலிமாக்கள் பூரிக்கின்றனர் மனது

பெண்மக்கள் தாம்ஓதிப்
பிறைமக்கள் எனஓங்கி
கண்மக்க ளாக இன்று பட்டம் - பெறும்
காட்சியது முழுநிலவின் வட்டம்

ஊருணியில் நீர்நிறைந்தும்
ஊர்தாகம் தணித்திடாமல்
தாரணியில் பொய்த்துவிட்ட போதும் - தாகம்
தணிக்கும்தீன் கல்விபுவி மீதும்

படிப்பென்னும் விதைவெடித்துப்
படிப்படியாய்க் கிளைவிடுத்துக்
கொடிபெறுமே பூக்களெனும் பட்டம் - இது
குவலயத்தில் இறைவகுத்த திட்டம்

இக்கல்விக் கூடங்கள்
இகமெல்லாம் எழுந்தக்கால்
அக்கல்வி கற்றவரே ஆள்வர் - அவர்
அகம்வெளுத்து மனைகளிலே வாழ்வர்

 

கவிஞரைத் தொடர்பு கொள்ள: 9444272269

 

* தீன் - இறைமார்க்கம்
* நிஸ்வான் - பெண்கள் மார்க்கப் பாடசாலை
* ஸனது - ஆலிமா பட்டம்
* ஷரீஅத் - இறைச் சட்டங்கள்


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர இலக்கியம்

மேலும் தேடல்