தீயொழுக்கத்தை விட
நல்லொழுக்கம் உடையவரே
சிறந்தவர்
பொய் பேசுபவரை விட
உண்மை பேசுபவரே
சிறந்தவர்
தீய வழியில் சம்பாதிக்கும் செல்வந்தரை விட
நல் வழியில் பொருளீட்டும் ஏழையே
சிறந்தவர்
அநியாயத்திற்குத் துணை நிற்பவரைவிட
அதை விட்டு நீங்கி இருப்பவரே
சிறந்தவர்
உறவைக்கெடுப்பவரை விட
உறவைக் காப்பவரே
சிறந்தவர்
வாங்கிப் பிழைப்பவரைவிட
கொடுத்து மகிழ்பவரே
சிறந்தவர்