மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

கவிதை

சபதம் ஏற்போம்!
சோழா புகழேந்தி, 1-15 மார்ச் 2025


 

வேதங்கள் காட்டும் பாதையில் சென்றால்
வேதனை ஏதுமில்லை என்றும்
போதனை செய்தவர் பூவுலக மீதினில்
புகழுக்குப் பஞ்சமில்லை

ஒழுக்கம் என்பது உயிரினும் மேலாய்
ஒழுகுதல் தவறுமில்லை வாழ்வில்
நெறிமுறை காத்து நெஞ்சுக்கு நீதியில்
நிலைப்பது குற்றமில்லை

திருமறை ஓதிய அருளுரை யாவையும்
தீன் மார்க்கம் வேறில்லை புவியில்
எல்லாம் வல்ல ஏகன் ஒருவனாம்
ஏற்பதில் இகழ்வில்லை

அன்பு ஒன்றே அகிலம் ஆள்வது
அழிவுக்கு வழியில்லை நாளும்
மனிதம் தழைக்க மனங்கள் செழிக்க
மதங்கள் பொருட்டில்லை

சாதி சமயத்தால் வேறுபட்டாலும்
சகோதரர் நாமெனக் கை கோர்ப்போம்
வாழும் வாழ்வில் அர்த்தம் விளங்க
வீறு கொண்டு புது சபதம் ஏற்போம்

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர இலக்கியம்

மேலும் தேடல்