மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

கவிதை

ஈகை சுரக்கும் ரமளான்
சோழா புகழேந்தி, 16-31 மார்ச் 2025




இரக்கம் என்பது நெஞ்சில் சுரக்கும்
இரமளான் மாதத்திலே அதை
எடுத்துச் சொல்லி இணங்க வைக்குது
இசுலாம் மார்க்கத்திலே

பாங்குடன் தொழுதே பாவம் கழுவ
பயிற்சி உனக்கல்லவா என்றும்
மார்க்கம் மறந்து, மனம் கெட்டுப் போவது
உனக்கே இழுக்கல்லவா?

கவனம் என்பது சிதறா நோன்பு
சுவனத்தின் வழி செல்லும் வேண்டா
ஹராம் தவிர்த்து விலகிப் போவது
அறம் செய்ய வகை சொல்லும்

இருப்பதைக் கொடுத்து ஏழை பசிக்கு
இரங்குதல் இறையச்சமே இதற்கு
நன்மைகள் அதிகம் நலமுடன் திகழ
நபி(ஸல்) போதனையும் வழிகாட்டுமே!

தவறை உணர மன்னிப்புத் தருவான்
தனியோன் அருளாளன் உள்ளம்
தூய்மை அடைய பாவம் தொலைய
வாய்ப்புகள் ஏராளம்

இசுலாத்தின் ஐந்து கடமைகளில்
இரமளான் இருக்கிறது அந்த
தாகந் தணிக்கும் ஜம் ஜம் ஊற்றென
ஈகை சுரக்கிறது.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர இலக்கியம்

மேலும் தேடல்