மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சட்ட அமைப்பைச் சீர்குலைக்கும் புதிய குற்றவியல் சட்டங்கள் - பத்திரிகையாளர் சந்திப்பில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கண்டனம்

கவிதை

கள்ளைக் குடியாதே!
சதாவதானி செய்குத்தம்பி பாவலர், 16 - 31 August 2022


கள்ளைக் குடியாதே ஐயா நீ
கள்ளைக் குடிக்காதே
கொள்ளை வியாதிமிகும்
கொண்ட வறிவழியும்
சன்னை மலிந்த பல
சங்கடங்கள் சூழ்ந்துவரும்


மான மழிவாகும்
மதிப்புக் குறைவாகும்
ஈன மலிவாகும்
இடரோ பெருகி விடும்


உற்ற பொருளழியும்
ஊரார் பகைவளரும்
குற்றமிகுந்த பல
கூடாவொழுக்கமுறும்


பெண்டு பிள்ளை தாயென்ற
பேத மறியாமற்
கண்டபடி திட்டிக்
கலகமிட நாட்டமாகும்


பித்தம் பிடித்தலையும்
பே#ப்பட்டி* போலுமொத்த
சித்தத் தியக்கேற்றி
சீரழிவிலாழ்த்தி விடும்

தந்தைதா# சுற்றமெலாஞ்
சஞ்சலத்தி லாழவெகு
நிந்தைத் துயருத்தி
நிருமூலமாக்கி விடும்


கண்சுழல வாயுளறக்
கைகால் தடுமாற
மண்கழல விண்சுழல
மாய மயக்க மளிக்கும்

காந்தியடிகளின் கள் எதிர்ப்பு
இயக்கத்திற்காக பாவலர் இயற்றிய
பாடல். அன்றைய கள்ளுக்கடை
மறியல் போராட்டங்களின் போது
தமிழகமெங்கும் போராட்டக்காரர்களால்
இசைக்கப்பட்டது.

ஆதாரம் : விடுதலைக் களத்தில்
முஸ்லிம்கள் கவிஞர் பாரதன்

குதுப்கான், கம்பம்


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர இலக்கியம்

மேலும் தேடல்