மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

கவிதை

கடைசித் துளிகள்
கயஸ், 16-30 SEPTEMBER 2022


எனது
இல்லாமை
நிர்ணயிக்கப்பட்டு
விட்டது


எனது இருப்பின்
நுனியில்
அது நிகழும்


எனது
முதுகுப் பொதிகள்
இறக்கிவைக்கப்பட்டு
விட்டன


ஆயினும்
கவனம்
இன்னும் அதன் மீது
இருக்கிறது


கணங்கள்
இறுக்கியதுபோ#
வாதனை செ#கிறது


வானவர்
இன்னும்
வரவில்லை


காத்திருப்பு
யுகங்களா#
நகர மறுக்கிறது

சஹாதத்
நினைவில் இருக்கிறது
இருப்பினும்
சக்ராத் ஹாலில்
மறந்து
போய்விடக்கூடாது


முள்ளில் மேல்
விழுந்த சீலையா#
என் மேனி
வதைபட்டு விடக்கூடாது


எனது அறை
ஒடுக்கமானதா
விசாலமானதா
தெரியவில்லை


எனது இருப்பு பற்றி
சுற்றிலும்
விவாதித்துக்
கொண்டிருக்கிறார்கள்


எல்லாவற்றையும்
கேட்டுக் கொண்டு
இன்னும் பிழைத்துக்
கொண்டிருக்கிறேன்
சாவதற்காக


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர இலக்கியம்

மேலும் தேடல்