மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

கவிதை

அவாம் ஜனங்கள்
கயஸ், 16-30 SEPTEMBER 2022


நியாயவாதிகள்
கூண்டில் நின்றார்கள்
குற்றவாளிகள்
நீதிபதிகளாக


கருப்பு அங்கிக்குள்
உண்மையைப்
புதைத்துவிட்டு
பொ#யை விற்றுக்
கொண்டிருக்கிறார்கள்


அரவுகளை
எலிகள்
வேட்டையாடுகின்றன


யானைகள்
மதம் பிடிக்காமல்
கால்கள் சோர்ந்து
மரத்துப் போ#க்
கிடக்கின்றன


அவாம் ஜனங்கள்
கொடுத்த தாக்கீதுகள்
மிக்சர் கடையில்
பக்கோடா பொட்டலம்
கட்டப்படுகிறது


கண்ணைக் கட்டியவள்
கையில் இருந்த
நெடிய துலாக்கோல்
வளைந்து விட்டன


நியாயங்களை
அநியாயங்கள்
வென்றுவிட்டதாக
கெக்கிலிகட்டி
கோசமிட்டுப் போனார்கள்


அவாம் ஜனங்கள்
இன்னும்
கூண்டிலே நின்றார்கள்


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர இலக்கியம்

மேலும் தேடல்