மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • தொடர் சரிவில் அதானி குழும பங்குகள்
  • அதானி போர்ட், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன், கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ், அதானி வில்மர் நிறுவன பங்குகளின் விலை கடும் சரிவு!
  • அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து அதானி குழும பங்குகள் விலை சரிவைச் சந்தித்துள்ளன.

கதை

பார்வை
பயணி, 16-30 OCTOBER 2022


 

 

"ஸார்... உங்கள டாக்டர் உள்ள வரச் சொன்னாங்க...' நடந்து கொண்டே சொல்லிச் சென்றாள் நர்ஸ்.

சையத் அலீ பெருமூச்சொன்றை நீளமாக்கிவிட்டு எழுந்து டாக்டரின் அறைக்கேகினான்.

"உட்காருங்க அலீ பாய்' மூக்குக் கண்ணாடியைக் கழட்டி மேஜையின் மீது வைத்தபடியே டாக்டர் பேசினார். "அலீ பாய்...! அம்மாவுக்கு வயசாயிடுச்சு.. சுகர் பேஷண்ட் வேற...! இந்த நிலைல ஆபரேசன் பண்றது அவ்வளவு நல்லதில்ல..! கண்ணாடி போட்டாலும் பார்வை மங்கலாத்தான் தெரியும். வலி வராம இருக்க அப்பப்ப... மருந்து மாத்திரைகள் தர்றேன்...' "டாக்டர்... ஆபரேஷன் பண்ணுனா... ஒருவேளை பார்வை நல்லாயிருக்க வாய்ப்பிருக்குதானே...!'

"யெஸ்.. ஆனா... அம்மாவுக்கு வயசாயிடுதுனால யோசிக்கணும்..! பார்வை நல்லா தெரியறதுக்கு வாய்ப்பு இல்லன்னு சொல்ல முடியாது. ஆனா ரொம்பக் குறைவு. எதுக்கு சிரமம்? என்னோட ஆலோசனை... மீதி காலத்தையும் இப்படியே கழிச்சுடறது நல்லது' "ஆபரேசன் பண்றதால வேற இடைஞ்சல் எதுவும் இருக்குமா டாக்டர்...?' "நோ... நோ... சுகர் பேஷண்ட்... அத கண்ட்ரோல் பண்ணிட்டுத்தான் பாக்கணும். நீங்க விருப்பப்பட்டீங்கன்னா... டாக்டர் கேசவனைப் பாருங்க. நான் லட்ரு தாரேன்...' *** டாக்டர் கேசவனுக்கான கடிதத்தைக் கையில் வைத்த படி உம்மாவிடம் டாக்டர் சொன்னதைச் சுருக்கமாய் சொல்லிக் கொண்டிருந்தபோது லேசாக மழை தூறத் தொடங்கியது. "இனிம எனக்கு ஒன்னுமில்லடா..! என் கண் நெறஞ்ச மக்கள, பேரன், பேத்தி எல்லாத்தையும் பாத்தாச்சு.. நான் இனிம எங்க போகப் போறேன்...! தோடந்தெருவு போறதுகூட தட்டுத் தடுமாறி போயிடுவேன். உன்னோட பொருளாதாரத்தையும் யோசிச்சு ஆபரேஷன் வேண்டான்னுதான் நெனச்சேன்... ஆனா...' "என்னம்மா நீ வேற... பணம் என்ன பெரிய விஷயம். அத நான் சரிக்கெட்டிடுவேன்.

கடைசி வரைக்கும் நீ கண் வெளிச்சத்தோட இருக்கணும்மா...' "எனக்கு எந்த ஆசயுமில்லப்பா. ஆனா... கடைசி வரைக்கும் குர்ஆனை ஓதணும்.. அத ஓதுறதுக்காகத்தான் டாக்டர் வீடு, அங்க இங்கன்னு உன்னோட வாரேன்... குர்ஆன் ஓதாம என்னால இருக்க முடியலப்பா..!' உம்மாவின் குரல் தளுதளுத்தது. உம்மா குர்ஆனியப் பெண். குர்ஆன்தான் அவளுக்கு எல்லாமே! குர்ஆன்  த மி ழ õ க் க த் ø த யு ம் தொடர்ந்து வாசிப்பாள். வாப்பா இறந்துபோனபோது குர்ஆனோடு தன்னை இணைத்துக் கொண்டாள். "குர்ஆன் மட்டும் இல்லன்னா... உங்க வாப்பாவோட இழப்ப... என்னால தாங்கியிருக்க முடியு மான்னு தெரியல... என் ரப்பு தர்ற வாக்குறுதிகளைப் படிக்கறப்ப ரொம்ப ஆறுதலாயிருக்குடா...' என்றாள்.

பார்வை மங்கிப் போனாலும் குர்ஆனை எடுத்து நெஞ்சோடு அணைத்துக்கொண்டு கண் கலங்குவாள். பேத்தி மர்யமை ஓதச் சொல்லிக் கேட்பதில் அவ்வப்போது தன்னைத் தேற்றிக் கொள்கிறாள். "யா அல்லாஹ்... உன் அருள்மறையை ஓதுவதற்காகவாவது என் தாய்க்கு பார்வையைச் சீராக்குவாயாக...!' என்று தொழுகை முடித்து துஆ கேட்கும் போது தன்னையறியாமல் அலீக்கு கண்களில் நீர் பனிக்கும். இப்போதெல்லாம் உம்மாவால் எதையும் பார்க்க முடிவதில்லை. தட்டுத் தடுமாறும் உம்மாவைப் பார்க்கும் போதெல்லாம் மனசு வலிக்கிறது. டாக்டர் கேசவன் ஊரில் இல்லை. ஒரு மாதம் ஓடிப் போயிற்று. நாளை காலையில் டாக்டர் வந்திடுவாராம். *** டாக்டர் கேசவன் மிகவும் இள வயசுக்காரர். "பளிச்' என்ற சிரிப்போடு எளிமையாய் இருந்தார். வார்த்தைகளில் நம்பிக்கை மின்னியது. "முயற்சி பண்ணலாம். ஆபரேஷன் வெற்றிகரமா முடியறதுக்கு வாய்ப்பிருக்கு. அம்மாவோட நம்பிக்கை வீண் போகாது. வைத்தியம்ங்றது முயற்சிதான். நம்பிக்கைதான் மருந்து. எங்க பாட்டிம்மா மாதிரியே இருக்காங்க அலீ பாய் உங்க அம்மா! சுகர் கண்ட்ரோல் பண்ணிட்டு வர்ற வாரத்திலேயே ஆபரேஷனை வெச்சுக்கலாம்.' *** அல்ஹம்துலில்லாஹ். உம்மாவுக்கு ஆப ரேஷன் நல்லபடியா முடிஞ்சுது. உம்மாவிற்கு மீண்டும் பார்வை கிடைக்கப் போகிறது. கண் கட்டு அவிழ்த்ததும் உம்மா முதலில் யாரைப் பார்க்க விரும்புவாள்? "என்னை! என் பிள்ளைகளை...!' என்று யோசித்த அலீக்கு அம்மாவின் எதிர்பார்ப்பு வியப்பைத் தந்தது "அலீ..! எனக்கு ஆபரேஷன் பண்ணுன டாக்டர கண் கட்டு அவிழ்த்ததும் பார்க்கணும்...' டாக்டரிடம் உம்மாவின் விருப்பத்தைச் சொன்னபோது டாக்டர் கேசவன் மகிழ்ந்து போனார்.

"என்னையா பாக்கணும்னு சொன்னாங்க..! ரொம்ப மகிழ்வா இருக்கு! எவ்வளவோ பேருக்கு ஆபரேஷன் பண்ணியிருக்கேன். யாரும் இப்படிக் கேட்டதில்ல! வாங்க... பாட்டியம்மாவைப் பார்க்கலாம்...' கட்டவிழ்த்து பஞ்சை நீக்கி மருந்து போட்டு வைத்திருந்தார்கள். இன்னும் உம்மா கண் விழிக்கவில்லை. அலீயும், டாக்டர் கேசவன், குழந்தைகளும் நர்ஸும் நின்றிருந்தார்கள். உம்மா மெல்ல இமை நீக்கி கண் விழித் தாள். துலக்கமற்ற பூசம் பூத்த மங்கலான பார்வை. கண்களில் நீர் கொட்டியது. உம்மா டாக்டர் கேசவனின் கைகளைப் பிடித்து உள்ளத்திலிருந்து குரலெழுப்பினாள். "தம்பீ...' இவ்ளோ சின்ன வயசுல உங்களுக்கு அல்லா இவ்ளோ திறமையைத் தந்திருக்கான். ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு! இறைவன் எனக்கு வழங்கிய பார்வையில் குறைபாட்ட நீக்கி கண்ணொளி கிடைக்க உதவி பண்ணுனீங்க. உங்க அகக் கண்ணும் மூடிக் கிடக்குது டாக்டர் தம்பி.! இதோ... குர்ஆன்! இது இந்த அம்மாவோட அன்பளிப்பு. இதைப் படிங்க..! படிச்சவங்க நீங்க... நல்ல ஆராய்ச்சி மனசோட படிங்க. உங்க அகக்கண் திறக்கும். உங்களுக்கும் நேரான பார்வை கிடைக்கும். உங்களுக்காக இறைவனிடம் துஆச் செய்றேன்.' சொல்லிக் கொண்டே குர்ஆன் மொழி பெயர்ப்பை டாக்டரிடம் கொடுத்தாள். நடுங் கும் கைகளால் குர்ஆனை வாங்கி நெஞ் சோடு அணைத்துக் கொண்டார் டாக்டர் கேசவன். உம்மாவின் கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது... ஆனந்தமாய்! 

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர இலக்கியம்

மேலும் தேடல்