மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சட்ட அமைப்பைச் சீர்குலைக்கும் புதிய குற்றவியல் சட்டங்கள் - பத்திரிகையாளர் சந்திப்பில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கண்டனம்

பரண்


பரணில் கிடக்கிறது பரண் எனும் சொல்லும்! பளிங்குக் கற்களால் மிளிர்கின்ற இன்றைய இல்லங்களில் பரணுக்கான வாய்ப்புகள் இல்லை. இந்தச் சொல்லாடலையே புதிதாய்ப் பார்ப்ப வர்கள் உண்டு. பரண் என்பது ஆவணம். பரண் என்பது கரு வூலம். பரணில் கிடப்பது பழம் பொருள்கள் அல்ல! அங்கு வரலாறு புதைந்து கிடக்கிறது. ஓராயிரம் அனுபவத் திரட்டுகள் அங்கே உறங்கிக் கொண்டிருக்கின்றன. நம் முன்னோர் மூத்தகுடிகளின் சுவடுகளின் சேகரம் அது! காலத்தால் அழித்துவிடமுடியாத கல்வெட்டுகளின் கூடாரம் பரண். ஒருதலைமுறைக்கான சேமிப்பு வங்கி அது! கருப்பு வெள்ளைக் காலத்தின் காலத் தொகுப்பு அது! தேவையில்லாத பொருள்களை வீசி எறிந்துவிடுவது எளிது. இது உபயோகித்து எறிகின்ற காலம் (க்ண்ஞு அணஞீ கூடணூணிதீ). வாழ்வைச் சேமிக்கின்ற காலம் பரணில் உறங்கிக்கிடக்கிறது. வீசி எறிய முடியாத, எளிதில் அழித்துவிட முடியாத புதை யல்களை பரணில்போட்டு வைப்பது முந்தைய தலைமுறை வழக்கம். அங்கிருந்துதான் நமது பாரம்பரியம் உயிர்த்தெழுகிறது. அதனை அறியாத தலைமுறை "எல் லாமே நாங்கள்தாம்' என்கிறது. இன்று நாம் புதிதாய் சாதித்த எல்லாச் சிந்தனைகளுமே வெற்று இலைகள். இதன் கிளைகள் நம் முந்தைய தலை முறையிலிருந்துதான் நீட்சி கொள்கிறது. இதன் வேர்கள் நம் முன்னோர்களிடமிருந்துதான் துளிர்விட்டிருக்கின்றது. இன்றைய நவீனங்களால் அடைந்துவிட முடியாத உயரங்களை எவ்வித வளர்ச்சியுமற்ற காலத்தில் தொட்டவர்கள் அவர்கள்.

ஒரு வீடு கட்டுவதற்கு எத்தனை உத்திகள், நவீன இயந்திரங்கள் வந்தபோதும் கற்களால் நம் தாத்தாக்கள் கட்டியெழுப்பிய கற்கோட்டையை நம்மால் எழுப்ப இயலாது. அதிவிரைவு வாகனங் களால் நாம் கடந்த தூரத்தைவிடவும் அவர்கள் நடந்து கடந்த தூரம் அதிகம். எல்லாம் வாய்க்கின்ற இந்த நவீன யுகத்தில் ஒரு இதழைத் தொடர்ந்து கொண்டுவருவது எத்தனை சவாலாய் நமக்கு இருக்கிறது? ஆனால் அந்தக்காலத்தில் ஒவ்வொரு எழுத்தாக எடுத்துக் கோர்த்து நமக்குச் செய்தி சொன்னவர்கள் நம் முன்னோர்கள். அத்தகைய பாரம் பரியம் சமரசம் இதழுக்கு உண்டு! எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே! அந்தப் பாரம்பரியம் நோக்கிய ஒரு மீள் பயணம்தான் இந்த பரண் தொடர். பழம்பெருமை பேசுவது இத்தொடரின் நோக்கமல்ல! இப்போது நாம் எதை புரட்சி என்று பேசுகிறோமோ அதை அன்றே சமரசம் பேசியிருக்கிறது. இணைய வசதி பயன் பாட்டில் இல்லாத காலத்தில் உலக விசயங் களை அலசியிருக்கிறது. சத்தியத்தை எந்த சமரசமும் இல்லாமல் ஓங்கி ஒலித்திருக்கிறது. அசத்தியத்திற்கெதிரான சாட்டையை சுழற்றியிருக்கிறது. ஊற்றாய்ப் பெருகும் செந் தமிழின் சுவையை அள்ளித் தெளித்திருக்கின்றது. வாசிப்பு பரவலாக்கப்படாத காலத்தில் சமரசம் இதழை மக்களிடம் கொண்டு சேர்க்க அவர்கள் எடுத்த முயற்சிகள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இந்தத் தொட ரின் நோக்கம் கடந்த தலைமுறையை இந்தத் தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவதுதான்!

சமரசம் முதல் இதழ் 1980 ஜூன் மாதம் வெளி யானது. அன்று பிறந்த சமரசம் வாசகர்கள் இன்று 36 வயது இளைஞர்கள். 1980 காலகட்டங்களுக்குப் பிறகு பிறந்த தலைமுறைக்கு அன்றைய காலத்தை அறிமுகப்படுத்தும் இத்தொடருக்குள் பயணித்துப் பாருங்கள். பழைய புகைப்படத் தொகுப்பை புரட்டுகின்ற அனுபவத்தைப் பெறுவீர்கள்! அவர்களின் அறிவின் வீச்சைக் கண்டு பிரமிப்பீர்கள். அவர்களின் அசராத உழைப்பைக் கண்டு மெய்சிலிர்ப்பீர்கள். பழைய காலத்தின் மீள் பயணத்தினூடக ஒரு தலைமுறை தரிசனம் உங்களுக்குக் கைகூடும். உங்களின் சுட்டுவிரல்பிடித்து கடந்த காலத்திற்குள் அழைத்துச் செல்கிறோம். சமரசம் இதழ் தொடங்கிய காலத்திலிருந்து இன்றுவரை அதில் பங்கேற்று அதன் வளர்ச்சியில் துணைநின்ற அத்தனை நல்லுள்ளங்களையும் ஈரவிழிகளுடன் நன்றிபாராட்டுகிறோம். ஒரு ரூபாய் சமரசம் சமரசம் மாதமிருமுறை தனிப்பிரதி ஒரு ரூபாய். ஆண்டுச்சந்தா 22 ரூபாய். அரை ஆண்டுச் சந்தா 11 ரூபாய். 1980 ஜூலை இதழில் கட்டுரைப் போட்டி நடத்தியிருக்கின்றார்கள். முதல் பரிசு 300 ரூபாய். இரண்டாம் பரிசு 200 ரூபாய். கட்டுரைப் போட்டி மட்டுமின்றி வெண்பா போட்டிகளும் நடத்தியிருக்கின்றார்கள். திருநபி வாழ்வியல் ஏற்றுத் தெளிவாய்த் திருமறைக் குர்ஆனைப் போற்று! பருந்தாய்த் தமக்கென வாழ்வாரைத் தூற்று! தகைசால் சமரச சால்போங்கச் சாற்று முதல் ö வண்பா ÷ பாட்டியில் ö வ ன் ற வெண்பா இது! எழுதியது யார் தெரியுமா? மு.சாயபு மரைக்காயர் அவர்கள். அதுபோல இன்றைய இதழியலாளர்கள், எழுத்தாளர்களெல்லாம் அன்றைய சமரசம் வாசகர்கள். இன்றைக்கும் தமிழ் இஸ்லாமிய உலகம் பெருமிதத்துடன் கொண்டாடும் கவி கா.மு.ஷெரீப் அவர்களின் வாசகர் கடிதம் இது. ஒரு மாபெரும் கவிஞரின் வாழ்த்துக் கடிதத்தி லிருந்து நமது மீள்பயணத்தைத் தொடங்குவோம்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர பரண்

மேலும் தேடல்