மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இஸ்லாம்

அகிலத்தின் அருட்கொடை
16-31 மே 2023


"இணை வைப்பாளர்களைச் சபியுங்கள்' என நபி(ஸல்) அவர்களிடம்
கோரப்பட்டது.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நான் சபிப்பவனாக அனுப்பப்படவில்லை. அதற்கு மாறாக முழுக்க முழுக்க அருட்கொடையாகத்தான்
அனுப்பப்பட்டிருக்கின்றேன்.'
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா(ரலி) நூல் : முஸ்லிம்

கருணைமிக்க இறைவனிடமிருந்து அருளப்பட்ட வழிகாட்டுதலையும் ஒழுக்க வலிமையையும் கொண்டு மக்களுக்கு இறையருள் கிடைக்கச் செ#வதுதான் நான் அனுப்பப்பட்டதற்கான அசல் நோக்கம். என்மீது சுமத்தப் பட்டுள்ள அசல் பணியும் அதுதான். இந்த நிலையில் எந்தவொரு மனிதரையும் என்னால் எப்படி சபிக்க முடியும்? இறைவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்க மறுப்பவர்களுக்காக அவர்களுக்கு வழிகாட்டுதல் கிடைப்பதற்கான அனைத்து சாத்தியங்களையும் உண்டாக்கித் தருவதற்காகவே அல்லாஹ்விடம் பிரார்த் திப்பேன். மகத்துவமிக்க குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது: "(நபியே!) நாம் உம்மை அகிலத்தார்க்கு அருட்கொடையாகவே அனுப்பியுள்ளோம்.' (திருக்குர்ஆன் 21:107) இறைநம்பிக்கையாளர்களுக்கு அன்பு நபிகளார்(ஸல்) ஒரு மகத்தான அருட்கொடையாக இருக்கின்றார்கள்.

சத்திய மார்க்கத்தை எதிர்க்கின்றவர்களுக்கும் அதனை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களுக்கும் கூட நபிகளார்(ஸல்) அருட்கொடையாகத் தாம் இருக்கின்றார்கள். முந்தைய காலத்தில் இறைத்தூதர்களை எதிர்த்து நின்ற மக்களை இறைவன் முற்றாக வேரறுத்து அழித்தொழித்து இருக்கின்றான். ஆனால் நபிகளாரின் அருள்வளத்தின் காரணமாக சத்திய மார்க்கத்தை எதிர்த்து நின்றவர்கள் முற்றாக அழித்தொழிக்கப்படவில்லை. அவர்கள் இந்தப் பூமியில் தங்கி வசிப்பதற்கு அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு சத்திய மார்க்கத்தின் போதனைகளை எடுத்துரைத்து மார்க்கத்தின் பக்கம் அவர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காக நபிகளாருக்குப் பின்னால் முஸ்லிம் உம்மத் எனும் மிகப்பெரும் இலட்சியக் குழுவினர் தக்க வைக்கப்பட்டிருக்கின்றார்கள். இது உலக மக்கள் மீது நபி(ஸல்) அவர்கள் செ# துள்ள மிகப் பெரும் பேரருள் ஆகும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்