மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இஸ்லாம்

சபிக்காதீர்!
16-30 June 2023


நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஓர் இறைநம்பிக்கையாளனைச் சபிப்பது அவரைக் கொலை செ#வதற்குச்
சமமாகும்.'
அறிவிப்பாளர் : ஸாபித் பின் ஸஹ்ஹாக்(ரலி) நூல் : முஸ்லிம்

ஓர் இறைநம்பிக்கையாளனைச் சபிப்பது அவரை மரணப் படுகுழியில் தள்ளுவதற்குச் சமமாகும். ஒருவரைச் சபிப்பது என்றால் என்ன பொருள்? சபிப்பவர் அந்த மனிதரை இறைவனின் நெருக்கங்களிலிருந்தும் அருள்வளங்களிலிருந்தும் வெகுதொலைவில் தள்ளிவிட்டு அதிபதி யின் அருள்வளங்கள் மறுக்கப்பட்டவராக அவரை ஆக்கி விடுகின்றார்.

இறைவனின் பார்வையில் மதிப்பிழந்து போவதைக் காட்டிலும், இறைவனின் அருள்வளங்களுக்குப் பதிலாக இறைவனின் கோபத்துக்கும் சாபத்துக்கும் உரியவனாக ஆகிவிடுவதைக் காட்டிலும் வேறு இழிவான மரணம் என்னவாக இருக்க முடியும்? இறைவனை மறுத்து மனம் போன போக்கில் வாழ்பவர்கள் கொல்லப்படாமலே செத்துக் கிடப்பவர்கள் ஆவர்.

அவர்கள் வாழ்வைப் பற்றிய உண்மையான பொருளை அறியாதவர்களாக வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பவர்கள் ஆவர். அதற்கு மாறாக இறைநம்பிக்கையாளர்களுக்கு உண்மையான உயிர்த்துடிப்பு மிக்க வாழ்க்கை வா#க்கின்றது. அவர் இறைவன் மீதும் இறைத்தூதர்(ஸல்) மீதும் நம்பிக்கை கொண்டிருக்கின்றார். இறைவனுடனான அவருடைய தொடர்பும் உறவும் உயிர்த்துடிப்பு மிக்கதாக இருக்கின்றது.

அவர் இறைவனின் நெருக்கங்களுக்கு உரித்தானவராக இருக்கின்றார். இந்த நிலையில் ஒருவர் அவரைச் சபிக்கின்றார் எனில் இறைத்தொடர்பு, இறைவனின் தனிப்பெருங்கிருபை ஆகிய வற்றின் காரணமாக இறைநம்பிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கின்ற வாழ்வை அவரிடமிருந்து பறிக்கின்றார் என்பதைத் தவிர அதற்கு வேறு என்ன பொருள் கொள்ள முடியும்?


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்