மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சட்ட அமைப்பைச் சீர்குலைக்கும் புதிய குற்றவியல் சட்டங்கள் - பத்திரிகையாளர் சந்திப்பில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கண்டனம்

முழுமை

படைத்தவனும் பாதுகாப்பளிப்பவனும் அவனே!
July 1-15 2023


அல்லாஹ்6 எத்தகையவன் எனில், வானங்களையும் பூமியையும் அவற்றிற்கிடையிலுள்ள அனைத்துப் பொருள்களையும் ஆறு நாள்களில் படைத்தான்.
பின்னர், அர்ஷின் மீது அமர்ந்தான்.7 அவனைத் தவிர உங்களுக்குப் பாதுகாப்பளிப்
பவர் யாரும் இல்லை. மேலும், அவனிடம் பரிந்துரை செ#பவரும் எவருமில்லை.
இனியும் நீங்கள் உணர்ந்துகொள்ள மாட்டீர்களா, என்ன?8 அவன் வானங்கள்
முதல் பூமி வரை உலகின் எல்லாக் காரியங்களையும் நிர்வகிக்கின்றான். அந்நிர்வாகத்தைப் பற்றிய அறிக்கை ஒரு நாள் அவனிடம் உயர்ந்து செல்கின்றது. அந்நாள்
உங்கள் கணக்குப்படி ஓராயிரம் ஆண்டுகளுக்குச் சமமாகும்.9 அவன்தான் மறைவான
மற்றும் வெளிப்படையான அனைத்தையும் நன்கறிந்தவனாகவும்,10 வலிமை
மிக்கவனாகவும், பெரும் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.

6. நபிகளாரின் அழைப்பு குறித்து இணைவைப்பாளர்கள் எழுப்பி வந்த இரண்டாவது ஆட்சேபம் இப்போது எடுத்துக் கொள்ளப்படுகின்றது. "நபி(ஸல்) அவர்கள் எங்களுடைய தெ#வங்களும் முன்னோர்களும் வணக்க வழிபாட்டுக்கு உரியவர்கள் என்பதையே ஏற்றுக் கொள்ள மறுக்கின் றாரே! மேலும், அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமே வணக்கத்திற்குரியவரோ, காரியங்களை நிறைவேற்றக்கூடியவரோ, தேவைகளை நிறைவேற்றுகின்ற வல்லமை கொண்டவரோ, பிரார்த்தனைகளைச் செவி மடுத்து அவற்றைச் செ#து முடிக்கின்ற திறன் கொண்டவரோ, கண்ணியத்தை அளிப் பவரோ, சுயமான அதிகாரம் கொண்ட ஆட்சி யாளரோ அல்லர் என்று ஓங்கி முழங்கியவாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றாரே' என்பதுதான் நபிகளார்(ஸல்) மீது அவர்கள் தொடுத்து வந்த மிகக் கடுமையான ஆட்சேப மாகும்.

7. விளக்கங்களுக்குப் பார்க்க: திருக்குர்ஆன் 7:41; 10:4; அத்தியாயம் 13 அர்ரஃத் குறிப்பு எண் 3.

8. பூமியையும் வானங்களையும் படைத் தவன்தான் உங்களின் உண்மையான இறை வன். இந்த பரந்து விரிந்த மகத்தான பேரண்டத்தில் அந்த ஏக இறைவனுக்குப் பதிலாக மற்றவர்களை காரியங்களை நிறைவேற்றித் தருபவர்களா# நினைக்கின்ற அளவுக்கு நீங்கள் எந்த மாதிரியான வெற்று எண்ணங் களில் மூழ்கிக்கிடக்கின்றீர்கள்? இந்த ஒட்டுமொத்த பேரண்டத்தையும் அதில் இருக்கின்ற அனைத்தையும் படைத்தவன் அல்லாஹ்தான். அவனைத் தவிர இதில் இருக்கின்ற மற்ற அனைத்துமே  படைக்கப்பட்டவைதாம். மேலும் அல்லாஹ் இந்த உலகத்தைப் படைத்து முடித்துவிட்ட பிறகு வேறு எங்கும் போ# படுத்துவிடவில்லை. அதற்கு மாறாக இந்தப் பேரண்டத்தின் அரியணையில் வீற்றிருப்பவனும் அவன்தான்.

ஆணை களைப் பிறப்பிக்கின்ற ஆட்சியாளனும் அவன்தான். இந்த நிலையில் உம்முடைய விதியை நிர்ணயிக்கின்ற அதிகாரம் கொண்டவர்கள் என படைப்புகளிலேயே சிலவற்றை அறிவிக்கின்ற அளவுக்குப் போ#விட்டீர்களே! உங்களுடைய சிந்தனை ஊர் சுற்றப் போய்விட்டதா? அல்லாஹ் உங்களுக்கு உதவவில்லை எனில் உமக்கு உதவுகின்ற அளவுக்கு அவற்றில் எதற்குத்தான் வலிமையோ, சக்தியோ இருக்கின்றது? அல்லாஹ்வின் பிடியில் நீர் வச மாகச் சிக்கிக் கொண்டீர் எனில் அவனிட மிருந்து உம்மை விடுவிக்கின்ற வலிமையோ, சக்தியோ அவற்றில் எதற்குத்தான் இருக் கின்றது? எந்தவொரு பரிந்துரையையும் ஏற்றுக்கொள்வதில்லை என அல்லாஹ் தீர்மானித்துவிட்டான் எனில் தாம் முன்வைக்கின்ற பரிந்துரையை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் எனச் சொல்லி சாதிக்கின்ற அளவுக்கு அவற்றில் எதற்குத்தான் தெம்பும் திராணியும் இருக்கின்றது?

9. உங்களிடமுள்ள ஓராயிரம் ஆண்டு களின் வரலாறு அல்லாஹ்விடத்தில் ஒரு நாளுக்கான வேலைக்கு ஈடானாதாகும். அந்த நாளுக்கான பணிகளுக்கான திட் டத்தை வகுக்கின்ற பணி இன்று விதியை நடைமுறைப்படுத்தும் பணியாளர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றது. மேலும் அவர்கள் அது தொடர்பான விவரங்களை அவனுக்கு முன்னால் அடுத்த நாள் சமர்ப்பிப்பார்கள். மறுநாளுக்கான (அதாவது உம்முடைய கணக்குப் படி ஓராயிரம் ஆண்டுகளுக்கான) பணிகள் தங்கள் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதற்காக! குர்ஆனில் இது தொடர்பான விவரங்கள் இன்னும் இரண்டு இடங்களில் பதிவாகியிருக்கின்றன. அவற்றையும் கருத்தில் கொண்டோமெனில் இதன் பொருளை நல்ல முறையில் விளங்கிக் கொள்வது எளிதாகிவிடும். முஹம்மத் நபி(ஸல்) தம்மை இறைத்தூதராகச் சொல்லிக் கொண்டு களம் இறங்கி பல்லாண்டுகள் ஆகிவிட்டனவே. "என்னுடைய அழைப்பை ஏற்றுக்கொள்ள மறுத்தாலோ, என்னைப் பொ#யர் என ஒதுக்கினாலோ உங்கள் மீது இறைவனின் வேதனை இறங்கிவிடும்' என அவர் மீண்டும் மீண்டும் எங்களை எச்சரித்தவாறு இருக்கின்றாரே! ஆனால் பல்லாண்டுகளா# அவர் எங்களை நோக்கி இந்த எச்சரிக்கையை விடுத்து வரு கின்ற நிலையிலும், இன்று வரை இறை வனின் வேதனை இறங்கவில்லையே? இன்னும் சொல்லப்போனால் நாங்கள் அவருடைய அழைப்பை ஒரு முறை அல்ல, ஆயிரம் முறை ஏற்க மறுத்துவிட்டிருக்கின்றோமே! அவர் விடுக்கின்ற இந்த எச்சரிக்கை உண்மையானது தான் எனில் இறைவனின் வேதனை எங்களை எப்போதோ வந்து தாக்கியிருந்திருக்க வேண்டுமே!' என்றெல் லாம் மக்கத்து இறைமறுப்பாளர்கள் சொல்லி வந்தார்கள்.

அவர்களின் இந்த விமர்சனத்துக்கு இறைவன் அத்தியாயம் அல்ஹஜ்ஜில் பின்வருமாறு பதிலளித்திருக்கின்றான்: "வேதனை விரைவில் வர வேண்டுமென உம்மிடம் இம்மக்கள் அவச ரப்படுகின்றார்கள். அல்லாஹ் ஒருபோதும் தன் வாக்குறுதிக்கு மாறு செ#ய மாட்டான். ஆனால், உம் இறைவனிடத்தில் ஒரு நாள் என்பது நீங்கள் கணக்கிடும் ஓராயிரம் ஆண்டு களுக்குச் சமமாகும்.' (திருக்குர்ஆன் 22:47)

இந்த விமர்சனத்துக்கு இன்னோர் இடத் தில் பின்வருமாறு பதில் தரப்பட்டுள்ளது: "கேட்கக்கூடியவர் வேதனையைக் கேட்டிருக்கின்றார். (அந்த வேதனை) நிச்சயம் நிகழக்கூடியதாகும். நிராகரிப்பாளர்களுக்கு! அதனைத் தடுத்து நிறுத்துபவர் எவரும் இலலை. ஏறிச்செல்லும் படிகளின் உரிமை யாளனாகிய அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உள்ளதாகும். வானவர்களும் ரூஹும் அவனி டம் அந்நாளில் ஏறிச் செல்கின்றனர். அந் நாளின் அளவு ஐம்பதாயிரம் ஆண்டுகளாகும். (நபியே!) பொறுமையை மேற்கொள்ளும்; அழகிய பொறுமையை! இவர்கள் அதனை வெகுதொலைவில் இருப்பதாகக் கருதுகின்றார்கள். நாம் அது அருகில் இருப்பதைப் பார்க்கின்றோம்.' (திருக்குர்ஆன் 70:17)

மேற்கூறப்பட்ட வசனங்கள் அனைத்தைக் கொண்டும் வாசிப்பவரின் மனங்களில் "மனித வரலாற்றில் இறைவன் செ#கின்ற தீர்மானங்கள் இந்த உலகத்தின் நேரங்கள், கணக்குகள் போன்றவற்றுக்கு இயைந்தவாறு மேற்கொள்ளப்படுவதில்லை. "இன்ன நடத்தையை மேற்கொண்டால் இன்னின்ன விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்' என ஒரு சமுதாயத்தை நோக்கிச் சொல் லப்பட, "இன்று அந்த நடத்தையை மேற் கொண்டால் நாளையே அதற்கான மோச மான விளைவுகள் தம்மைச் சூழ்ந்து கொள்ளும்' என்பதாக அது அதனைப் புரிந்துகொள்கின்றதெனில், அந்தச் சமுதாயம் வடி கட்டிய முட்டாள் சமுதாயமாகத்தான் இருக் கும். செயல்களின் விளைவுகள் வெளிப்படுவதற்கு நாள்கள், மாதங்கள், ஆண்டுகள், சில சமயம் நூற்றாண்டுகளே உருண்டோடி விட்டலும் அது இறைவனின் கணக்கில் பெரிய கால இடைவெளியாக இருக்காது என்கிற விவரங்கள் தெள்ளத்தெளிவாக உணர்த்தப்படுகின்றது.

10. அவனைத் தவிர மற்றவர்கள் அனை வருக்கும் ஒரு விஷயம் வெளிப்படை யாகத் தெரிந்தாலும் எண்ணற்ற விஷயங்கள் மறைவானவையா#த் தாம் இருக்கும். வானவர்களானாலும் சரி, ஜின்கள் அல்லது இறைத்தூதர்களானாலும் சரி, வலீ  இறை நேசர்கள் அல்லது இறைப்பற்று நிறைந்த அடியார்களானாலும் சரி அவர்களில் எவருமே அனைத்தையும் அறிந்தவர்கள் அல்லர். எல்லாவற்றையும் அறிந்தவன் அல்லாஹ் மட்டுமே. அது அவனுக்கு மட்டுமே இருக்கின்ற சிறப்பாகும். கடந்த காலத்தில் நடந்து முடிந்தவை, சம காலத்தில் நடந்து கொண்டிருப்பவை, இனி வருங்காலத்தில் நடக்க இருப்பவை எல்லாவற்றையும் நல்ல முறை யில் அறிந்தவன் அல்லாஹ் மட்டுமே.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்