நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஒருவர் மற்றொருவரைப் பார்த்து "நீ ஓர் இறைமறுப்பாளர்' என்றோ
"நீ இறைவனின் எதிரி' என்றோ சொல்லிவிடுகின்றார் எனில், அந்த மனிதர்
உண்மையிலேயே அவ்வாறு (இறைமறுப்பாளராகவும் இறைவனின்
எதிரியாகவும்) இல்லையெனில் அவ்வசை அவ்வாறு கூறியவருக்கே
திரும்பி விடும்.'
அறிவிப்பாளர் : அபூதர்(ரலி) நூல் : புகாரி, முஸ்லிம்
ஒருவரைப் பார்த்து நீ ஓர் இறைமறுப்பாளர், நீ இறைவனின் எதிரி என்று சொல்வது மிகப்பெரும் ஆபத்தை விலைக்கு வாங்குவதற்கு ஒப்பாகும் என்பதை இந்த நபிமொழி தெரிவிக்கின்றது. ஏனெனில் இவ்வாறான வசைகள் எந்த மனிதரை நோக்கிச் சொல்லப்பட்டதோ அவர் உண்மை யிலேயே இறைமறுப்பாளராகவோ, இறைவனின் எதிரியாகவோ இருக்க வில்லை எனில், அவரை இப்படியாகக் கெட்ட பெயரைச் சொல்லி அழைத்தவரே இறைவனின் பார்வையில் மதிப்பை இழந்து, அதனையும் தாண்டி அவரே இறைமறுப்பாளராகவும் இறைவனின் எதிரியாகவும் அறிவிக்கப்படுகின்றார்.
அதுவும் பாவச் செயலே!
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"முஸ்லிம்களைத் தகாத வார்த்தையில் திட்டுவது "ஃபிஸ்க் கடுமையான
பாவச் செயல்' ஆகும். அவர்களுடன் போரிடுவது "குஃப்ர் இறைமறுப்பு'
ஆகும்.'
அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத்(ரலி) நூல் : புகாரி, முஸ்லிம்
முஸ்லிம்களிடம் உரையாடுகையில் வார்த்தைகளைத் தடித்துப் பேசுவதும், திட்டுவதும், தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் ஃபாசிக்குகளின் (பாவச் செயல்களில் ஊறிப் போனவர்களின்) செய லாகும். தம்முடைய சாமானிய சகோதரர்களுடன் அப்படி நடந்துகொள்வது இறை நம்பிக்கையாளர்களுக்கு ஒருபோதும் அழகல்ல. சக முஸ்லிம்களுடன் போரிடுவதும், சண்டையிடுவதும், அவர்களை நியாய மின்றிக் கொலை செ#வதும் மிக மிகக் கடுமையான குற்றமாகும். இது போன்ற இழிசெயல்கள் ஒருபோதும் இறைநம்பிக்கையாளர்களின் செயலாக இருக்க முடியாது. முஸ்லிம்களில் எவரேனும் ஒருவரைக் கொலை செ#யத் துணிவது, ஆயத்தமாகிவிடுவது இறைமறுப்பாளர்களின் செயலாகும்.