மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

இறைவனின் சந்திப்பை நிராகரிக்கலாமா?
மௌலானா மௌதூதி (ரஹ்), Aug 1 - 15 2023


அத்தியாயம் 32 அஸ்ஸஜ்தா திருவசனங்கள் : 9 - 10

பிறகு, குறைபாடு இல்லாதவாறு அவனைச் சீரமைத்து அவனுள் தன்னுடைய உயிரை ஊதினான். மேலும், உங்களுக்குச் செவிகளையும், பார்வைகளையும், இதயங்களையும் கொடுத்தான். 17 நீங்கள் மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள்.18

மேலும், 19 'நாம் மண்ணோடு மண்ணாய்க் கலந்துவிட்ட பிறகு மீண்டும் புதிதாய்ப் படைக்கப்படுவோமா?' என்று இவர்கள் கேட்கின்றார்கள். உண்மை என்னவெனில், இவர்கள் தங்களுடைய இறைவனின் சந்திப்பையே நிராகரிப்பவர்களாய் இருக்கின்றார்கள்.

 

  1. கருத்தை எடுத்துரைப்பதில் இது ஒரு நுட்பமான தொனியாகும். ரூஹ் ஊதப்படுவதற்கு முன்பு வரை மனிதனைப் பற்றிய குறிப்புகள் அனைத்தும் 'அவனைப் படைத்தான்' 'அவனுடைய சந்ததிகளைப் படைத்தான்', 'குறைபாடு இல்லாதவாறு அவனைச் சீரமைத்தான்', 'அவனுள் தன்னுடைய ரூஹை ஊதினான்' என்கிற ரீதியில் படர்க்கை ஒருமை வகையைச் சார்ந்தவையாய்த்தாம் இருந்தன. ஏனெனில் அவனை விளித்து யாதொன்றையும் சொல்லத்தக்க நிலைமையை அது வரை அவன் எட்டியிருக்கவில்லை.

பிறகு ரூஹ் ஊதப்பட்டவுடன் 'உங்களுக்குச் செவிகளைக் கொடுத்தான்', 'உங்களுக்குக் கண்களைக் கொடுத்தான்', 'உங்களுக்கு இதயத்தைக் கொடுத்தான்' என்று மனிதனை முன்னிலைப்படுத்தி விளித்து செய்தி சொல்லப்படுகின்றது. ஏனெனில் ரூஹை ஏற்றுக்கொண்ட பிறகு அவனை விளித்து யாதொன்றையும் சொல்லத்தக்க நிலைமையை அவன் எட்டியிருந்தான்.

சொல்லத்தக்க நிலைமையை அவன் எட்டியிருந்தான். செவிகளும் கண்களும் மனிதன் அறிவைத் தேடிப் பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகளைக் குறிக்கும். ருசித்தல், நுகர்தல், தொடுதல் போன்றவையும் அறிவை வளர்த்துக் கொள்வதற்கான வழிவகைகளில் அடங்கும் என்றாலும் கேட்டலும், பார்த்தலும்தாம் மற்றெல்லா உணர்வுகளைக் காட்டிலும் கூடுதல் சிறப்பு கொண்ட, மகத்தான, முக்கியத்துவம் நிறைந்த வழிவகைகளாய் இருக்கின்றன. இதனால்தான் குர்ஆனில் அநேக இடங்களில் இறைவனின் எடுப்பான அருள்வளங்களாய் இந்த இரண்டும் தனிச்சிறப்போடு எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றன. அடுத்து, இங்கு 'இதயம்' என்பது சிந்திக்கும் மனத் தைக் (Mind) குறிக்கும். இந்த ஐம்புலன் களைக் கொண்டு கிடைக்கின்ற தகவல் களைத் தொகுத்து அவற்றிலிருந்து தக்க தீர்மானங்களை எடுக்கின்ற பணியை இந்த மனம்தான் செய்கின்றது. மேலும் செயல்படுவதற்கான சாத்தியமான பல்வேறு பாதைகள் எதிர்வருகின்ற போது அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதும், அந்தப் பாதையில் நடப்பதெனத் தீர்மானிப்பதும் அதுதான்.

 

  1. மகத்துவமும் மாண்பும் நிறைந்த இந்த மனித ரூஹ் இத்துணை உயர்வான தனிச் சிறப்புமிக்க பண்புகளுடன் உங்களுக்கு வழங்கப்பட்டிருப்பது நீங்கள் இந்த உலகத்தில் மிருகங்களைப் போன்று இருக்க வேண்டும் என்பதற்காகவோ ஒரு மிருகம் வாழ்வதைப் போன்று உங்களின் வாழ்க்கைப் பாட்டையும் அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவோ அல்ல. அகப் பார்வையைக் கொண்டு தொலைநோக்குடன் எதனையும் கூர்ந்து பார்ப்பதற்காகத்தான் இந்தக் கண்கள் உங்களுக்குத் தரப்பட்டிருக்கின்றனவே தவிர குருடர்களாய் கண்களை மூடிக்கொண்டு வாழ்க்கையை ஓட்டுவதற்காக அல்ல.

இந்தக் காதுகள் உங்களைச் சுற்றிலும் நடப்பதையும் அசைவதையும் கருத்தூன்றிக் கவனிப்பதற்காகத் தரப்பட்டிருக்கின்றனவே தவிர செவிடர்களாய் தேங்கிக் கிடப்பதற்காக அல்ல. இந்த இதயம் சத்தியத்தைப் புரிந்து கொள்வதற்காகவும், சரியான சிந்தனைப் பாங்கையும் செயல்முறையையும் மேற் கொள்வதற்காகவும் உங்களுக்குத் தரப்பட் டிருக்கின்றதே தவிர உங்களுடைய ஒட்டு மொத்த திறமைகளையும் உங்களின் மிருகத்தனத்தைப் பராமரிப்பதற்கான வழி வகைகளை உருவாக்கிக் கொள்வதிலும், அதிலிருந்து கொஞ்சம் மேலே உயர்ந்து தம்மைப் படைத்தவனுக்கு எதிராகக் கலகம் செய்கின்ற தத்துவங்களையும் செயல் திட்டங்களையும் வகுக்கத் தொடங்கிவிடு வதிலுமாக செலவிடுவதற்காக அல்ல.

இத்துணை விலைமதிப்பில்லா பொக் கிஷங்களை இறைவனிடமிருந்து பெற்றுக் கொண்ட பிறகு நீங்கள் நாத்திகத்தையும் அல்லது இணைவைப்பையும் மேற் கொள்கின்றீர்கள் எனில், உங்களை நீங்களே கடவுளாக ஆக்கிக் கொள்ளவோ மற்றக் கடவுள்களின் அடிமையாய் ஆகிவிடவோ செய்கின்றீர்கள் எனில், மனஇச்சைகளுக்கு அடிமையாகி உடலின், உள்ளத்தின் அற்ப ருசிகளிலும் இன்பங்களிலும் திளைத்துக் கிடக்கின்றீர்கள் எனில், அது உங்களுடைய இறைவனிடம் 'இறைவா! நீ எங்களுக்குக் கொடுத்த பொக்கிஷங்களுக்கும் அருள்வளங் களுக்கும் நாங்கள் சிறிதும் தகுதிவாய்ந்த வர்கள் அல்லர்; எங்களை மனிதர்களாய் ஆக்கியதற்குப் பதிலாக ஒரு குரங்காகவோ, ஒரு ஓநாயாகவோ, ஒரு முதலை யாகவோ ஒரு காகமாகவோ ஆக்கியிருந் திருக்கலாமே' எனச் சொல்வதற்கு ஒப்பான தாகும்.

 

  1. ஏகத்துவம், தூதுத்துவம் ஆகிய வற்றின் மீதான இறைமறுப்பாளர்களின் ஆட்சேபனைகளுக்குப் பதில் தந்த பிறகு இவ்வசனத்தில் இஸ்லாத்தின் மூன்றாவது அடிப்படைக் கோட்பாடான மறுமையைக் குறித்த அவர்களின் ஆட்சேபத்திற்கு பதில் தரப்பட்டுள்ளது. இந்த வசனத்தின் ‘வகாலூ’ எனும் சொல்லில் இருக்கின்ற 'வாவ்' என்கிற இடைச் சொல் முந்தைய விவாதப் பொருளுடன் இந்தப் பத்தியை இணைக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், 'முஹம்மத்(ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் அல்லர் என்று அவர்கள் சொல்கின்றார்கள்', 'வணக்கத்துக்குரிய ஒரே இறைவன் அல்லாஹ் அல்லன் என்று அவர்கள் சொல்கின்றார்கள்'. 'நாங்கள் மரணித்த பிறகு மீண்டும் உயிர் பெற்று எழ மாட் டோம் என்று அவர்கள் சொல்கின்றார்கள்' என்பதாக இந்த விவாதத்தின் கண்ணிகள் நீளும்.

 

(தொடரும்)


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்